Headlines

MH370 விமானம் மாயமான முதலாம் ஆண்டு நிறைவுக்கு முந்தைய தினம் அறிக்கை!

கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மாயமாகி இருந்தது. காணாமற் போன இவ்விமானத்தின் மர்மம் ஏவியேஷன் வரலாற்றிலேயே மிகவும் புதிர் மிக்கதாகவும் இன்று வரை சிறிய ஒரு தடயமும் கிடைக்காத ஒன்றாகவும் பதியப் பட்டுள்ளது. மேலும் இதைத் தேடும் பணியும் விமானவியல் வரலாற்றில் அதிகளவு பணம் செலவழித்துத் தேடப் பட்ட ஒன்றாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

Read More

அணித் தலைவர் பதவிக்கும் ஆப்பு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச சிறிலங்கா இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…

Read More

எரிவாயு, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு

பல நகரங்களில் எரிவாயு, மற்றும் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகின்றது. இடைக்கால வரவு-செலவுத்திட்டம் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அந்த இரு பொருள்களையும் வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

Read More

இடைக்கால பட்ஜெட் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

புதிய அரசின் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார். பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணிவரை வரவுசெலவுத்திட்டம் மீதான உரை இடம்பெறும். . அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைந்தது 10…

Read More

யூடியூப் பதிவர்கள் கண்டுபிடித்த வினோத மனித கூச்ச உணர்வு

யூடியூப்பில் ASMR  என்ற தலைப்பில் ஓர் கவர்ச்சியான பெண் கமெரா முன் தோன்றி அவர் ஏதோ சில விடயங்களை மிக மெல்லிய தொணியில் முணு முணுப்பது போன்ற ஒரு வீடியோவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதா? அப்படியானல் ASMR என்ற மனிதர்களின் வினோத கூச்ச உணர்வு பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்துள்ளீர்கள்.  உங்களுக்குள் உங்கள் தனிப்பட்ட புலன்கள் சார்ந்த கிளர்ச்சி மற்றும் அதன் வெளிப்பாடே ASMR (Autonomous Sensory Meridian Response). இதை அனுபவிக்க வேண்டுமாயின் அந்த உணர்வு…

Read More

மூன்று அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் மலையகத்தின் மாற்றம் ஆரம்பம்

அஸ்ரப் ஏ சமத் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் மு. வேலாயுதம். பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற காணியுரிமைஇ வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளபடவிருக்கின்ற 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் முன்வந்துள்ளமை பாராட்டப்படதக்க மகிழ்ச்சிகரமான செயலாகுமென பெருந்தோட்டதுறை இராஜங்க அமைச்சர் க. வேலாயுதம் தெரிவித்தார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பெருந்தோட்டதுறை கம்பனி நிறைவேற்ற அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு…

Read More

அம்பாறை மக்களை சந்திக்கிறார் அமைச்சர் றிஷாத்!

ஆசிரிய பீடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அமைச்சு பதவி ஏற்ற பின்னர் தனது முதலாவது அம்பாறை மாவட்ட விஜயத்தினை மேற்கொள்கிறார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீதின் அழைப்பின் பேரில் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல ஊர்களுக்கும் விஜயம் செய்யவுள்ள அமைச்சர் றிஷாத்; சனி மாலை கல்முனை குடி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலிலும் ஞாயிறு மாலை ஆறு…

Read More

இலங்கையில் நீண்ட காலத்தின் பின் ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளன: பராக் ஒபாமா

இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் புதிய ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, எனவே, அவற்றைத் தக்கவைக்க இந்தியா போன்ற அயல் நாடுகள் உதவவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா, புதுடில்லியிலுள்ள சிறிகோட்டை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினர். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் இலங்கை தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவமுடியும். நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல அதிகாரம்,…

Read More

சரத் பொன்சேகாவிடம் இருந்து பறித்த பதவி, பட்டம் அனைத்தும் திருப்பியளிப்பு!

சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து பதவிகள், பட்டங்களும் மீள அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் அவர் வகித்த முப்படைகளின் பிரதானி, இராணுவ தளபதி போன்ற பதவிகள் மற்றும் அவர் வசமிருந்து ஜெனரல் உள்ளிட்ட பட்டங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்த தகவலை உறுதி செய்துள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டதுடன் தேர்தல் தோல்வியின்…

Read More

அஸாத் சாலிக்கு எதிராக மொஹான் பீரிஸ் முறைப்பாடு!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலிக்கு எதிராக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பிரதம நீதியரசர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, தன்னை நேற்று மாலை அச்சுறுத்தியதாக அவர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டினை நிராகரித்த அஸாத் சாலி, தனது பழைய நண்பரான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னை அவரது வீட்டுக்கு வருமாறு அழைத்மையினாலேயே அங்கு சென்றதாக…

Read More

சந்தேகங்களுக்கு மத்தியிலும் அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு!:மௌனம் களைத்தார் ஃபிடெல் காஸ்ட்ரோ

சமீபத்தில் புதுப்பிக்கப் பட்ட அமெரிக்க கியூப உறவுக்கு ஓய்வு பெற்ற முன்னால் கியூப அதிபரும் மக்களின் அபிலாஷைக்குரிய முக்கிய தலைவருமான ஃபிடெல் காஸ்ட்ரோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆனாலும் காஸ்ட்ரோ இன்னமும் அமெரிக்க அதிகாரிகளைப் பூரணமாக நம்பவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக கியூபாவின் கம்யூனிசக் கட்சி பத்திரிகையான ‘கிரன்மா’ இனது இணையத் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, ‘அமெரிக்காவின் கொள்கைகளை காஸ்ட்ரோ இன்னமும் நம்பவில்லை என்பதுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் இன்னமும் ஒரு…

Read More

பஸ் கட்டணங்கள் குறைப்பு! [கட்டண விபரங்கள் இணைப்பு]

பேருந்துக் கட்டணங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 8 தொடக்கம் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதன்படி குறைந்தளவு கட்டணமாக இருந்த 9 ரூபா 8 ரூபாவாக குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. TM

Read More