Headlines

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றொரு புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஜுவான் மெண்டஸ் இடம் அரசாங்கம் இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளது. குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திட்டமிட்ட குற்றங்களைத் தடுத்தல், விசாரணைகளுக்கான சட்ட அமைப்புகள், மற்றும் புலனாய்வுப்பிரிவு என்று மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்படவுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப்பதிலாக புதிய சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் விரைவில்…

Read More

“ஒரே நாளில் 200  பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :-  அமைச்சர் ரிஷாட்!  

கல்விக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டத்தில் மேலுமொரு படியாக “ அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள கல்லூரிகளில் இன்றைய தினம்  200  பாடசாலை கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது பாராட்டத்தக்க விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சூடுவந்த புலவு ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டு மாடி ஆரம்ப கற்றல் வள நிலையத்தை இன்று (01) திறந்து வைத்து உரையாற்றிய…

Read More

ஐந்து பிள்ளைகளால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

– செல்வராஜர் – 80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய் தந்தை, இரு மகன்மார்கள், 3 மகள்மார்கள் உட்பட 7 பேர் கொண்ட குடும்பமொன்று வசித்து வந்துள்ளது. 80 வயதுடைய தாயின் பெயரிலே அனைத்து சொத்துகளும் இருந்துள்ளன. இந்நிலையில் இவருடைய கணவன் 28 வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இதன் பின்னர் தாயின்…

Read More

மக்காவிற்குச் செல்ல எங்களிடம் உதவிகேட்டனர் முஸ்லிம்கள்! BBS

புனித மக்காவுக்கு ஹஜ் கடமைக்காக செல்லவுள்ள முஸ்லிம்கள், தங்களுக்கு சில அமைச்சர்களின் தலையீடுகளினால் அங்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தங்களது பொது பல சேனா அமைப்பில் முறைப்பட்டு, மக்காவுக்குச் செல்வதற்காக ஆவன செய்து தருமாறு கேட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பணிப்பாளர் திலன்த விதானகே குறிப்பிடுகின்றார். முஸ்லிம்கள் சிலர் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்திற்கு வந்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைத் தாங்கள் சந்திக்க வந்தாகவும், அவருடன் கலந்தாலோசிக்க வந்ததாகவும், தான்…

Read More

1000 பஸ்களை திருத்துவதற்கு 3000 மில்லியன் ரூபா

போக்குவரத்துக்கு உதவும் நிலையற்ற ஆயிரம் பஸ்களை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பஸ்களை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பஸ்கள் காணப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Read More

கிழக்கு மாகாண சபையில் சற்றுமுன் பெரும் அமலிதுமளி

பைஷல் இஸ்மாயில் கிழக்கு மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி பலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்து முடிந்ததும் அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் குழுத் தலைவர் தன்டாயுதபானி உரை நிகழ்த்துகையில், உறுப்பினர்களுக்காக வழங்கப்படும்…

Read More

யாழ் முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட நிகழ்வு!

இலங்கை வடமாகாணத்தின் முல்லைதீவு, வவுனியா, மன்னார் ,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி யாழ்ப்பணத்தில் 1990 ஒக்கடபர் 30 ஆம் திகதி கிழக்கிலிருந்து கொலைவெறியுடன் வருகை தந்த நூற்றுக்கணக்கான ஆயுதம்தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் சோனக புரத்தை சுற்றி வலைக்க இரண்டு மணி நேரத்தில் முஸ்லிம்களை வெளியேற்றிய கருப்பு ஒக்டோபர் நினைவு தினம் பிரான் வாழ் யாழ் முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது.

Read More

இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் – இஸ்மாயில்

எம்.சி.அன்சார் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்துவரும் எமது முஸ்லிம் தலைமைகள் சமூக, பொருளாதார நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் குறைகளை நிவர்த்திப்பதற்கான பல வாய்ப்புக்களை அவர்கள் கொண்டிருந்தபோதிலும் அதன் பலனை மக்கள் அனுபவிக்கவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாம் பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர் நோக்கியுள்ளோம். இத்தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். எதிர்வருகின்ற தேர்தலிலே முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் தைரியமாக குரல்கொடுக்கும் அகில இலங்கை…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி கிழக்கு முதலமைச்சருக்கு சவால்

கடந்த வாரம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கோவைகளை உயர்த்திக் காட்டி அபிவிருத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரால் முடியுமாக இருந்தால் தேசிய ஊடகமொன்றில் விவாதத்திற்கு அழைக்கின்றேன் முடியுமாக இருந்தால் அங்கு வந்து கோவைகளை காட்டட்டும் என்று என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை 206சி கிராமத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் கிளை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் புதன்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு…

Read More

“ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்” – புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், புத்தளம் வாழ் மக்கள் ஒன்றுபட்டதன் காரணமாகவே, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற முடிந்ததென்றும், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு ஒற்றுமையுடன் செயற்பட்டால் இதைவிட பாரிய வெற்றிகளைப் பெற முடியும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், வேப்பமடுவில் நேற்று (15) இடம்பெற்ற, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய…

Read More

சாரதி உறக்கம்: விமானத்துடன் மோதிய பஸ்

நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுடன் பஸ் ஒன்று மோதிய சம்­பவம் கொல்­கத்­தாவில் நேற்று இடம்­பெற்­றது. கொல்­கத்­தா­வி­லுள்ள நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த எயார் இந்­தியா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்றின் மீது, விமான நிலை­யத்­திற்குள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறு­வ­னத்தின் பஸ் ஒன்று மோதி­யது. நேற்று (4) அதி­காலை 5.25 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. அஸாம் மாநி­லத்­தி­லுள்ள சில்சார் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த விமா­னமே இவ்­வாறு சேத­ம­டைந்­ததுள்ளது. மேற்­படி பஸ்ஸின் சாரதி அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்­ட­போது,…

Read More

மாணவத் தலைவர் தின நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கொழும்பு 15, மோதரை புனித ஜேம்ஸ் ஆரம்ப பாடசாலையின் மாணவத் தலைவர் தின விழா, அண்மையில் பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான முஹமட் பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.        

Read More