அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)
கொழும்பு டவர் மண்டபத்தில் இடம்பெற்ற அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.
கொழும்பு டவர் மண்டபத்தில் இடம்பெற்ற அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) சிரியாவில் போர் விமான தளமொன்றைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவத்தமுனை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீரான் ஹாஜி, புகாரி ஹாஜி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியாளர் சசிநத்தன், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலத்தின் அதிபர் பிர்தௌஸ்,…
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சமூக சேவை நிறுவனங்கள் , விளையாட்டு கழகங்கள் , சன சமூக நிலையங்கள்,பாலர் பாடசாலைகள் உட்பட 12 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்பட்ட 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொழிநுட்ப உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் ,தளபாடங்கள் உட்பட…
-ரஸீன் ரஸ்மின் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்திலுள்ள சிறுகடலில் தடை செய்யப்பட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களை இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
புனித பூமி என்ற போர்வையில் மாதம்பையில் சுவீகரிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் காணி உறுதிகளை பரிசீலனைக்காக மாதம்பை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க சம்பந்தப்பட்ட குடும்பங்களைக் கோரியிருக்கிறார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உத்தரவுக்கு அமைய இன்று செவ்வாய்க்கிழமை சுவீகரிக்கப்பட்டுள்ள 24 முஸ்லிம் குடும்பங்களின் பூர்வீக காணி உறுதிகள் மாதம்பை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன என பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பின் தலைவர் எஸ்.எம். கௌஸுல் அமீர் தெரிவித்தார். மாதம்பையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக…
சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இன ரீதியானதும், நிலத்தொடர்பற்றதுமான பிரதேச செயலகத்தை வழங்கக் கூடாது எனக் கோரி, கல்முனையில் முஸ்லிம் மக்கள் நடத்திவரும் சத்தியாக்கிரக நடவடிக்கையில், இன்று வெள்ளிக்கிழமை…
( படங்கள்: ஜஹான்ஸர் கான் ) அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு சற்றுமுன் (15.10.2014) கொழும்பு தாஜ் சமுத்ராவில் இடம் பெற்றது.
கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுரவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்/சென் சேவியர் ஆண்கள் பாடசாலைக்கான Photo copy இயந்திரம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் மாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுரவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான. றிப்கான் பதியுதீன் அவர்களும் மன்னார்…
இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையை வந்தடைந்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனும், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன், மேலும் பல முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்திக்கவுள்ளார். அத்துடன்,…
பொது வேட்பாளரை ஆதரிக்கும் திருமலை மாவட்டத்துக்கான கூட்டம் ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை அமைப்பாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் நேற்று (28) காலை காங்கிரசின் திருமலை கோட்டை என கருதப்படும் புல்மோட்டையில் இடம்பெற்றது.இதில் இம்ரான் மகரூப்,முன்னால்அமைச்சர்களும் பாரளுமன்ற உறுப்பினர்க்களுமான ரிசாத் பதியுதீன்,குணவர்த்தன,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அசாத் சாலி,லாபிர் ஹாஜியார் முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த கிண்ணியா நகர சபை எதிர்கட்சி தலைவர் ஹாரிஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி…
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே.முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இன்று மாலை (10) இணைந்து கொண்டார். இவருடன் அபூபக்கர் முஹம்மது இர்ஷாட் மௌலவியும் அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பயணத்தில் கைகோர்த்தார். அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து மக்கள் பணிகளுக்காக தன்னை தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன் எனவும் பல்வேறு சவால்களுக்கும் சதிகளுக்கும் மத்தியில்…