Headlines

கிடங்கிற்குள் இறங்கியவர்கள் மர்மமாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்ததையடுத்து, அதைத் திருத்துவதற்காக ஒருவர் கிடங்கினுள் இறங்கியுள்ளார். இறங்கியவர் எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பதை அவதானித்த…

Read More

வளவை கங்கையில் முதலையிடம் சிக்கிய பெண் மாயம்!

வளவை கங்கையில் நீராட சென்ற அம்பலந்தொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த பெண், வளவை கங்கையில் நீராட சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

யாசகர் கை அனாதையாகிப்போன நமது அரசியலும் நம்பிக்கை தரும் புதிய நகர்வுகளும்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாயினர் உண்மைதான், ஆனால்யாசகர் கைப்பிள்ளையாக இன்று நமது அரசியலே அனாதையாகிக்கிடக்கிறது, யாசகர்கள் கூட “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி”எனும் சரணாகதி நிலை அடைந்து அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கடந்த கால் நூற்றாண்டுகால எனது முஸ்லிம் அரசியல்அனுபவத்தைப் பொறுத்தவரை நாம்சாதித்தவற்றை விட நம் சமூகம் அதனால் சோதிக்கப்பட்டதேஅதிகம், போராட்ட அரசியலாக ஆரம்பித்த எமது தனித்துவ அரசியல் சில அரசியல் வியாபாரிகளின்அல்லது தொழிலாளிகளின் சூதாட்ட அரசியலாக மாறிவிட்டுள்ளமை இன்று பகிரங்கஇரகசியமாகிவிட்டது. முஸ்லிம் அரசியலுக்கு தெளிவான இலக்குகளைக் கொண்ட…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் பகீரத முயற்சிக்கு வெற்றி கிட்டுமா? மாகாண அமைச்சு வழிவிடுமா?

சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள டெங்கு நோயின் உக்கிரத்தை அடுத்து கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்க வேண்டுமென்ற கோரிக்கை அந்தப் பிரதேச மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. கிண்ணியா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான போதிய வசதி இன்மை இல்லாததாலேயே டெங்கு மரணங்கள் சம்பவித்ததாகவும் டெங்குவின் தீவிரத் தாக்கம் அதிகரித்ததாகவும் அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சுனாமியின் பிறகு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கிண்ணியா வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை,வைத்தியர், தாதிமார் பற்றாக்குறை ஆய்வுக்…

Read More

வெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டில் (லைட் ஹவுஸில்) சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஏறி பார்வையிடுவதற்கு மட்டக்களப்பு மாநகர சபையினால் சுமார் கடந்த ஒரு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் கடந்ந காலங்களில் மேற்படி வெளிச்ச வீட்டில் ஏறும் பொது மக்களில் சிலரும், இளைஞர்களும் வெளிச்ச வீட்டு உச்சியில் ஏறி கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டுவதாகவும், சிலர் குடிபோதையில் வெளிச்ச வீட்டில் ஏறி…

Read More

நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்!

இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக போலி வைத்தியர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலி வைத்தியர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை,…

Read More

சீத்தாவக்கை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த அரசு

சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது. ஐந்து உறுப்பினர்கள் எதிரணிக்கு மாறியதையடுத்து அந்த பிரதேச சபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதன்பிரகாரம் அந்த பிரதேச சபையில் எதிரணிக்கே பெரும்பான்மை இருக்கிறது.

Read More

காப்பெட் பாதையாக மாற்றமடையும் குவைத் வைத்திசாலை வீதி: அ.இ.ம.கா.வின் அபிவிருத்திப் பணி

குவைத் வைத்திசாலை வீதி (Kuwait Hospital Road) காப்பெட் பாதையாக புனர்நிர்மானம்  செய்யும் பணிகள் நேற்று (2017-02-27)  நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களும், அலி சப்ரி ரஹீம் அவர்களும் கலந்துகொண்டனர்.

Read More

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு இராணுவ புரட்சி நடத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப் பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும்…

Read More

யாழ் சோனகத் தெருவில் வீதிவிளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம். நியாஸ் நிலாமின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க, யாழ் மாநகர முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களின் அனுமதியினால் யாழ் மாநகர சபையினால் நேற்று முன்தினம் (14) சோனகத் தெருவில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. புனித ரமழானை முன்னிட்டு இந்தப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டமையால். தமது மார்க்கக் கடமைகளை  மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்  எனவும்,  அதற்காக உறுப்பினர் நிலாம் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்….

Read More

’ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டணி உதயம்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (02) கைச்சாத்திடப்பட்டன.

Read More

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்….

“யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சுய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் ஆகிய தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள அங்குரார்ப்பண விழா பற்றிய உயர்மட்டக்கூட்டம் இன்று (16) காலை யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன், கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும்…

Read More