Headlines

மாலத்தீவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன – இந்தியா

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் கிரிமினல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார் என்றும், அவர் மீதான இக்குற்றசாட்டை போலீஸ் தரப்பு சட்டப்பூர்வமாக நிரூபித்ததாக கூறிய அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 13 வருட சிறை தண்டனையை விதித்தது….

Read More

யாழ் சோனகத் தெருவில் வீதிவிளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம். நியாஸ் நிலாமின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க, யாழ் மாநகர முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களின் அனுமதியினால் யாழ் மாநகர சபையினால் நேற்று முன்தினம் (14) சோனகத் தெருவில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. புனித ரமழானை முன்னிட்டு இந்தப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டமையால். தமது மார்க்கக் கடமைகளை  மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்  எனவும்,  அதற்காக உறுப்பினர் நிலாம் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்….

Read More

அசாத்சாலி அதிரடி!

மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசாத் சாலி மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழங்கப்படும் எந்தவொரு பதவிகளையும் தாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தமது பெயர் 7ஆவது இடத்தில் காணப்பட்டதாகவும், இதற்கு கட்சியன் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம…

Read More

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

2070-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் முதலிடம்

2050-இல் உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.இதுதொடர்பாக, அமெரிக்காவின் பீவ் ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்து நடத்திய ஆய்வறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2050-இல் உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.அடுத்த 40 ஆண்டுகளுக்கு, உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள். அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களின் வளர்ச்சி விகிதத்தைவிட, முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் அதிகமானதாக இருக்கலாம்.இந்த நிலை…

Read More

சிறுவனின் சடலம் மீட்பு: சிறுவன் கைது

திருகோணமலை சம்பூர் பகுதியில் பாழடைந்த கிணற்றொன்றிலிருந்து 6 வயதான சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 15 வயதான சிறுவனை சந்தேகத்தின் பேரில்  இன்று (02) பகல்; கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பினால் பதற்றம்

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சர்வதேச சட்டத்தை மதிக்காத இஸ்ரேல் ராணுவம்: யூனிசெப் அறிக்கை….!

பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட தீவிரவாத நாடான இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்று யூனிசெப் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக யூனிசெப் வெளியிட்ட அறிக்கையில்…. தடுப்புக்காவல், கண்காணிப்புகள் மற்றும் பரிந்துரைகள் என்ற பெயரில் பாலஸ்தீன குழந்தைகளை நடத்துவதில் இஸ்ரேல் ராணுவத்தினர் சர்வேதேச சட்டங்களை மீறுகின்றது என்று அறிக்கையில் கூறியுள்ளது. 162 குழந்தைகள் கண்களால் கட்டப்பட்டும், 189 குழந்தைகளின் கைகள் இறுக கட்டப்பட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றனர். கைது, சிறை அறை மாற்றம், விசாரணை மற்றும் தடுப்புக்காவலின்…

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு ஒரு அகதி முஸ்லிமிடமிருந்து, கண்ணீருடன் கடிதம்..!

மேன்மைதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோக்ஷலிசக் குடியரசு ஜனாதிபதி செயலகம் கொழும்பு 01 விடயம்: கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி அவர்களுக்கு தீவிரவாத, இனவாத மற்றும் குடும்ப ஆட்சி முடிவுற்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் ஜனநாயக, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது,. இந்த ஆட்சி மாற்றத்திற்கான எமது முயற்சி தோல்வியடையவில்லை என்ற சந்தோசம் எனக்கு எப்போதுமே இருக்கின்றது. நல்ல தேக ஆரோக்கியத்துடன் தொடர்ந்தும் நல்லாட்சி புரிவதற்கு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு என் மடலைத் தொடர்கின்றேன். எனக்கு இப்போது 30…

Read More

குள்ளநரிக் கூட்டங்களின் சலசலப்புக்கு நாங்கள் ஒரு போதும் அஞ்சோம் – வடமாகாண சபை உறுப்பினர் – வை.ஜனூபர்

ஏ.எச்.எம்.பூமுதீன் குள்ளநரிக் கூட்டங்களின் சலசலப்புக்கு நாங்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டோம் என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் வை. ஜனூபர் வன்னி மாவட்டத்திலிருந்து இந்தக் குள்ளநரிக் கூட்டங்களை துரத்தியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் சூழ் உரைத்தார். முல்லைத்தீவு ஹிஜ்ரா புரத்தில் தையல் பயிற்சி நிலை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கொண்டவாறு காட்டமாக தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சருமான ரிசாத்…

Read More

மாலபே வைத்திய கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய கல்லூரியை விடுமாறும் இந்த சங்கத்தின்…

Read More

கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் சார்பாக  புத்தளம் மாவட்டத்தின்  கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களின் தலைமையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது, தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் கல்ந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read More