‘முல்லைதீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மக்கள் காங்கிரஸ் மூலம் பலகோடி அபிவிருத்திகள்; துன்பங்களில் பங்கேற்காதவர்கள் வாக்குகளுக்காக அலைந்து திரிகின்றனர்’- பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன்!
“கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துச் சென்று, பாராளுமன்றத்தினை அலங்கரித்தவர்கள், இன்று மீண்டும் உங்களிடம் வந்து வாக்களிக்குமாறு கேட்கின்றனர். இவர்களிடத்தில் தாங்கள் உழைத்த சொத்துக்களின் விபரங்களைக் கேளுங்கள்” என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் 6 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் பிரதேச சபை தவிசாளருமான மஹாலிங்கம் தயானந்தன், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளுவர்புரத்தில் இடம்பெற்ற தேர்தல்…
