Headlines

சர்வதேசத்திடம் மண்டியிடோம்!

உள்ளகப்பொறிமுறை ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும், சர்வதேசத்திடம் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் மறைமுக அடக்குமுறை தொடர்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கொண்டு வந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மின்சாரக் கதிரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை காப்பாற்றி விட்டோம். சர்வதேசத்திடம் நாம் மண்டியிட மாட்டோம் என…

Read More

கின்னஸ் சாதனை மேற்கொள்ள முயற்சித்தவர் வைத்தியசாலையில் அனுமதி!

கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சித்த துறைமுக உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்குளி டிலாசல் மஹாபொல நிலையத்திற்கு அருகாமையில் இன்று (29) இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நாபர் 1.5 தொன் எடையைக்கொண்ட வாகனங்களை உடலின் மீது ஏற்றி சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இடையில் ஏதோ சில காரணங்களுக்காக வாகனத்தை உடலின் மீது நிறுத்த வேண்டாம் என சாதனை முயற்சியாளர் குறிப்பிட்ட போதிலும் வாகனம் உடலில் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சுகவீனமுற்ற குறித்த சாதனை…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை…

Read More

அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் தலைமையில் புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு

அஷ்ஷேக் கைஷான் ரஷாதி அவர்களின் தலைமையின் கீழ் ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், Dr.சனிக், Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும் “ஹையதுல் ஹுதா” தொண்டு நிருவணத்தின் மூலம் அநுராதபுர மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டன. ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், ஹையதுல் ஹுதா நிருவணத் தலைவர் அஷ்ஷேக் கைஷான் ரஷாதி மற்றும் Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோர் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட…

Read More

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும், விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அல் – அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் (30) இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புதிய ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர்…

Read More

கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம் செய்த இஸ்ஹாக் ரஹுமான் MP

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கொழும்பு துறைமுக நகரத்திற்கு அண்மையில் விஜயம் செய்தார்.

Read More

வன்னி மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் உதவியுடன் சுதந்திரக் கட்சிக்கு தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகள்!! வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!

-வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி- வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதித் தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று…

Read More

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 29 அமர்வு நேற்று ஆரம்பமாகியது. அந்த அமர்வில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் பாதையில் தொடர்ந்தும் பயணிக்குமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தினால் ஆகஸ்டில் வெளியிடப்படவுள்ள அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. செப்டம்பரில் அறிக்கையை…

Read More

மு.கா முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரீஸ் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியினுடைய மூதூர்  முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமாகிய  ஏ.எம்.ஹரீஸ் ஆசிரியர், அவருடைய ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் . மூதூர், பேர்ல் கிரேன்ட் ஹோட்டலில் நேற்று (21) இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் முன்னிலையில் இணைந்துகொண்டார்….

Read More

மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை, துரிதப்படுத்த ஜம்மியத்துல் உலமா அழைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தம்மாலான பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்ற அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஈருலக நற்பாக்கியங்களை அவர்களுக்கு அருளவேண்டுமெனவும் பிராத்திக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஜம்இய்யா வழமைபோன்று பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. 2016.05.15ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் அசாதாரண காலநிலையைக் கவனத்திற்கொண்ட ஜம்இய்யா பாவமன்னிப்பு, துஆ, தொழுகைபோன்ற அல்லாஹுதஆலாவின் நெருக்கத்ததைப் பெற்றுத் தரும் நல்லமல்களின்…

Read More

மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தின் பொதுமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தில் பொதுமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  இன்று (25) இடம்பெற்றது. ஆலய மதகுருவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். அத்துடன் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர்…

Read More

தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு மாற்றமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளை ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு அழைப்பாணை..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளைக் காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு மாற்றமாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்…

Read More