Headlines

நோய் பரவும் அபாயம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோட ஆரம்பித்ததை அடுத்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   டெங்குநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிகளவிலான சாத்தியகூறுகள்  உள்ளன. எனினும் அவ்வாறான பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் இருமல் , தடுமல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுவதாக  சுகாதார  கல்வி பணியகம் தெரிவித்துளளது. எனினும் இதுவரைக்கும் பாராதூரமான நோய்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமது சுற்று சூழலை முழுமையாக மக்கள்…

Read More

“சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்யுங்கள்” – முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரசியல்வாதிகள், தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே  பாராளுமன்றம் செல்லத் துடிக்கிறார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தன்னை ஆதரித்து, ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், “வரவுள்ள பாராளுமன்றம் சுகமான பாராளுமன்றமாக இருக்கும் என்றெண்ணி, பாராளுமன்றம் செல்ல சிலர் ஆசைப்படுகின்றனர். அது சுமையான பாராளுமன்றம் என்பதை…

Read More

மஸ்ஜித் இமாம் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்

இந்தியா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாம் டூரு பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. தலையில் தாக்கப்பட்டு பலியான இமாம் அப்துல் ஹமித் மாலிக்(வயது 45) மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில்…

Read More

சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்….

பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும் பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி திங்கட்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஜனாதிபதி எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தன்னை ஜனாதிபதி பதவியில்…

Read More

முசலிப்பிரதேசபை பிரதி தவிசாளரின் அவசர வேண்டுகோள்..

முசலியில் மின்சாரம் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ளவும் முசலிப் பிரதேசத்திலுள்ள சிலாவத்துறை, முசலி, கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா, சவேரியார்புரம் ஆகிய கிராமங்களில் இதுவரை மின்சாரம் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு உடனடியாக இலவச மின்னிணைப்பு பெற்றுக் கொடுக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எனது வட்டாரத்திற்குள் அடங்கும் மேற்படி 5 கிராம மக்களில் மின்சாரம் இல்லாத குடும்பங்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முசலிப் பிரதேச மக்களின் மின்சாரத்…

Read More

சென்னையில் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியான…

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ்சை அழிக்க அமெரிக்கா அடுத்த திட்டம்

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் புதிய போர் செயல்திட்ட உத்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிரான அறிவிப்பை புதன்கிழமை அன்று வெளியிடவுள்ளேன். இருப்பினும் இந்த அறிவிப்பில் அவர்களுக்கு எதிரான அமெரிக்க தரைப்படைகளின் தாக்குதல் தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாது. இவர்களுக்கு எதிரான சண்டையை ஈராக் போர் என்று கூறிவிட முடியாது. இது கடந்த 7 வருடங்களாக அமெரிக்கா…

Read More

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு  நிதியுதவி வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று காலை 2017.05.02  நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச்சபை,சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடன் தனித்தனிஒப்பந்தங்களை மேற்கொண்டு இந்த உதவு தொகையை வழங்கியது.

Read More

அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

அவன்கார்ட் நிறுவனத்தின் கணக்காய்வாளரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (25) உத்தரவிட்டுள்ளார். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை மார்ச் முதலாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

Read More

எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரே தெரிவுசெய்வார்

எதிர்க்­கட்சித் தலைவர் யாரென்­பதை சபா­நா­ய­கரே தீர்­மா­னிப்பார். சபா­நா­ய­கரின் முடிவே இறுதி முடி­வாகும். தேசிய அரசாங்கத்தின் அமைச்­ச­ர வைப் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். இது தொடர்­பாக லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக எவ­ரது பெய­ரையும் அர­சியல் கட்­சிகள் பிரே­ரிக்­கலாம். இதற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை. ஆனால் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சித்­த­லை­வரை தேர்ந்­தெ­டுக்கும் அதி­காரம் சபா­நா­ய­க­ருக்கே உள்­ளது. எனவே எதிர்க்­கட்சித் தலை­வரை சபா­நா­ய­கரே தெரிவு செய்வார். அவரின் முடிவே இறுதி…

Read More

சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் அஜித் நிவாட் கப்ராலுக்கு தடை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும்  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட்கப்ரால் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க இதனை அறிவித்துள்ளார். லஞ்ச ஊழல் திணைக்களத்தின் அறிவிப்பின் பிரகாரம் இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். tks- mn

Read More

அரேபிய சட்டங்களை அறியாதவர்களாக நாம்..!

நாளுக்குநாள் வேலைத்தேடி அரேபிய தீபகற்பத்திற்கு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தகைமைக்கு தகுந்த தொழில், கூடிய ஊதியம் என உழைப்பு ஒன்றை நோக்காக கொண்டே இந்த படையெடுப்புகள் நடந்தேறுகின்றன. இவ்வாறானதொரு சூழலில் நமது சொந்தபந்தங்கள், நண்பர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பாசத்தின் விளைவாக பண்டங்களை பரிமாறிக்கொள்வது வழமை. கத்தார், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் என எந்த நாடுகளை எடுத்தாலும் குறைந்தபட்சம் இரண்டு வருட பணி ஒப்பந்தம் செய்தாக வேண்டும். என்னத்தான் தொழிற்நுட்பங்கள்…

Read More