Headlines

சந்திரிகா மேடையேறி கமரா முன்நின்று பேச, யார் அதிகாரம் வழங்கியது – ஞானசாரர் கேட்கிறார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு மேடைகளில் ஏறி கமரா முன் நின்று பேசுவதற்கான அதிகாரத்தை அவருக்கு  யாரும் வழங்கவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் இருக்கின்றார்கள்? சம்பிக்க, சந்திரிகா என நாட்டிற்குள் பல தலைவர்கள் இருக்கின்றார்கள். சந்திரிகா ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கியது என்று அவர் மேலும்…

Read More

தனியார் துறையினருக்கு விரைவில் சம்பள உயர்வு: பிரதமர்

* பாலுக்கு உத்தரவாத விலை * கூடுதல் நிவாரணங்கள் விரைவில் * மே முதல் புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு ‘மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 2/3 பெரும்பான்மையுடன் 10 வருடங்களில் நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாட்களில் மேற்கொள்ள முடிந்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் தலை சிறந்த சாதனையாகும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய எஞ்சிய வாக்குறுதி களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், மக்களுக்கு மேலும் நிவாரணங்கள்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினரான குமார் வெல்கம, எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் இன்று (நேற்று) அறிவிப்பதாக ஏற்கெனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு என்ன நடந்தது…

Read More

ஏறாவூரில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

அப்துல்லாஹ் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நாளை (09) வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெறவுள்ளதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை தெரிவித்தார். ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 103 மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2012 ஆம்…

Read More

தோல்விக்கு நான் இழைத்த தவறுகளே காரணம் – மஹிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய சில தவறுகளால் தோல்வியை தழுவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் விருப்பத்தில் தற்போது நாட்டில் ஆட்சி நடைபெறவில்லை என்றும் நிறைவேற்று சபை என்பதன் ஊடாக நாடு ஆட்சி செய்யப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More

சுனாமி நிவாரண மோசடி – டிரான் அலஸ் வௌிநாடு செல்லத் தடை!

கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி ´ராதா´ என்ற நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடி செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சம்பவம் வருமாறு, கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி அப்போதைய ஜனாதிபதி அலுவலகத்தில் அனுமதி பெற்று ´ராதா´ என்ற நிறுவனம் 2006இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன தலைவராக டிரான் அலஸ் செயற்பட்டுள்ளார்….

Read More

பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன தலைமையிலான அமைச்சர்கள் பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்களின் போது எடுக்கப்பட்ட படம். பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னுான் ஹூசைனில இஸ்லாமாபாத்தில் அளிக்கப்பட்ட விருந்துபசாரத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, றிஷாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பவூசி உட்பட ஏனையவர்களையும் படங்களில் காணலாம்.

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுபாய் வங்கியொன்றிடம் அடகு வைப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுபாய் வங்கியொன்றிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டுபாய் மஸ்ரேக் வங்கியில் 23079 மில்லியன் ரூபா பிணைக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திறைசேரி பிணையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கடனானது அடகுக் கடனுக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது. டுபாய் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடகுக் கடனுக்கு நிகரானது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிறைவில் செலுத்தப்படாத கடன்…

Read More

அஸ்கிரிய மகாநாயக்கர் காலமானார்!

அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரக்கித தேரர் காலமானார். தேரர், சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளையிலேயே காலமானதாக அஸ்கிரிய பீடத்தின் தியவதன நிலமே தெரிவித்துள்ளார். சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

18 வருடங்களாக சவுதியில் அடைபட்டிருந்த இலங்கைப் பெண் நாடு திரும்புகிறார்!

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவர் 18 வருடங்கள் அடைக்கப்பட்டிருந்து இன்று புதன்கிழமை காலை நாடு திரும்புகிறார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத்திலுள்ள தூதுவராலயம் மேற்கொண்ட முயற்சியினாலேயே ஆர். பேமவதி என்ற இந்தப் பெண்ணை விடுவிக்க முடிந்துள்ளது. குறித்த பணிப்பெண் அவர் வேலைசெய்த இடத்திலிருந்தே மீட்கப்பட்டாள். 1999ல் மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒன்றின் ஊடாக பணிப்பெண்ணாகச் சென்ற குறித்த பெண் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினார். அவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை….

Read More

ஏறாவூர் தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் விஷேட பயான் நிகழ்வு எதிர் வரும் சனிக்கிழமை

எம்.ரீ.எம்.பாரிஸ் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.04.2015ம் திகதி சனிக்கிழமை ஏறாவூர் ஆயிஷாபள்ளிவாசலில் பெண்கள் ஆன்கள் இரு சாராருக்கும் விஷேட பயான் நிகழ்சி  ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.  இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வில் இலங்கையின் பிரபல  மார்க்க சொற்பொழிவாளர்  அஷ்ஷெய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயீ) கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இரு அமர்வுகளாக நடை பெறும் இந்நிகழ்ச்சியானது பெண்களுக்கு 4.15 மணிதொடக்கம் 5.45 மணி வரை நடை பெறும் நிகழ்வில் ” மன நிம்மதியைஇழக்கச்செய்யும் ஆடம்பர வாழ்வு” எனும் தலைப்பில் பெண்களுக்கும் மஹ்ரிப்…

Read More

கம்பளை மஹவெலி ஆற்றில் காணாமல் போன முகம்மத் மனாஸ் இன் ஜனாஸா மீட்பு

மஹாவலி கங்கையில் நீராடச்சென்று காணாமல் போன கம்பளை மரியாவத்தையை சேர்ந்த 8ஆம் வகுப்பு  சிறுவன் முகம்மத் மனாஸ் இன் சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற் படையினரின் உதவியுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிறுவன் நீராடிய இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை ஸாஹிரா கல்லூரி மாணவன்  மனாஸ் தனது நண்பர்களுடன் நேற்று திங்கட்கிழமை நண்பகல், மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இச்சிறுவனுடன் நீரில் மூழ்கிய…

Read More