Headlines

4 இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த படகு ஒன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மலேசியாவில் நடுவானில் 2 விமானங்கள் மோதி வெடித்து சிதறியது

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் கலந்து கொள்கின்றன.இதற்காக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் லங்காவி தீவுக்கு வந்துள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து…

Read More

மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு

18.01.2017 ஆம் திகதி மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கழக காரியாலயத்தில் இடம்பெற்றது இச்சந்திப்பில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உதவித் தவிசாளர் நெளபல் கலந்து கொண்டார்.

Read More

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் (2) நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடரிபில் கருத்து தெரிவித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பை நீக்குவது உசிதமானதல்ல எனவும், ஏனைய அரச தலைவர்களைவிட பயங்கரவாதிகளின் எதிரியாக அவர் கருதப்படுவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இராணுவப் பாதுகாப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது…

Read More

காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை துரிதப்படுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பணிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை பணித்துள்ளார். இம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவை இன்று காலை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதே வேளை…

Read More

தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடுவது தவரு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அரிசிக்காக, ஒருமாத மின்சார மற்றும் தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடுவது தான்சார்ந்த செய்யப்படுகின்ற அரசியல் துரோகம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அஸ்ஙர் வித்தியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வட்டார ரீதியில்…

Read More

த.தே.கூ. வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்கு ஆதரவு வழங்க வேண்டும்

ஏறாவூர் அபூ பயாஸ் கிழக்கு மாகாணசபை நேற்று (16) காலை கூடியபோது ,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பிரேரணையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த எம்.எஸ்.சுபைர் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில். இன்று முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ மாகாணசபை உறுப்பினரான சகோதரர் ஜெமீல் அவர்கள் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தமையிட்டு அவருக்கு நன்றி கூறிக்கொள்வதோடு,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இன்று தேசிய ரீதியாக…

Read More

முசலி, பண்டாரவெளி கிராமத்துடனான சந்திப்பு

முசலி, பண்டாரவெளி கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.

Read More

முஸ்லிம்களை ஐவேளை தொழுகை நேரங்களிலும் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்க வேண்டும் – ஹெல உறுமய!

நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன, என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிர்ப்பு

-பாறுக் ஷிஹான்- யாழ் பரச்சேரி முஸ்லீம் கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான்  பதியுதீன் விஐயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திடீர்   விஐயம் மேற்கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  அக்கிராமத்தில்  மீள் குடியேறிய ,  மக்களிடம்  சென்று கலந்துரையாடினார் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(12)  ஜும்மா தொழுகையின் பின்னர் மிக பின்தங்கிய கிராமமான  உள்ள யாழ் பரச்சேரி கிராம மக்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார காணி நிரந்தரவீடு…

Read More

நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் – அமைச்சர் றிஷாத்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட…

Read More

நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு!

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பங்களாதேஷ்க்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர், அவ் விஜயத்தினை முடித்துக் கொண்டு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.   இலங்கைக்கான இவரது விஜயத்தின் போது இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இவருடன் தெற்காசிய நாடுகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் மன் பிரீட் சிங் ஆனந்தும் வருகை தரவுள்ளார்.  பங்களாதேஷுக்கான இவரது விஜயத்தில், பங்களாதேஷ் அரசுக்கான அமெரிக்காவின் ஆதரவு, வன்முறைக்கு…

Read More