Headlines

மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது மு.கா வெறித்தனமான தாக்குதல்!

மு.கா பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் அடாவடித்தனம் தொடர்ந்தேர்ச்சியாக சம்மாந்துறையில் அரங்கேறி வருகின்றது. அந்தவகையில், சம்மாந்துறையில் இன்று (09) சின்னப்பள்ளி வட்டாரத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் தற்சமயம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக எந்தவித முறையான சிகிச்சையும் அளிக்கப்படாமல் ஆறாம் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வைத்தியசாலை நிர்வாகத்திலும் அரசியல் பின்புலத்தில் உரிய சிகிச்சை வழங்கக்கப்படாமல் இருப்பது…

Read More

அக்­கு­ற­ணைத்­ தொ­கு­தி­யிலே போட்டியிடுவேன் – காதர் ஹாஜி

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரி­வித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்­துல்­ காதர் பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டாது ஏழை பள்­ளி­வாசல் பணி­யா­ளர்கள் போன்­றோ­ருக்கு பகிர்ந்­த­ளிக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்தார். நேற்­றுக்­காலை கொழும்பு நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் இவ்­வ­ருடம் ஹஜ் கோட்டா ஆகக்­கூ­டி­யது 50ஆகவும் ஆகக் குறைந்­தது 15ஆகவும் ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஓர் சிறந்த முறை­யாகும்….

Read More

நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம்

நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை (26) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காய்ங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது எனவே கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை சூறாவளி காற்றாக மாற்றமடையக் கூடிய…

Read More

மொஹமட் முஸம்மில் கைது

தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read More

‘விரைவில் பொது தேர்தல்” அனுர

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிப்பெற்றாலும், நாட்டில் விரைவில் பொது தேர்தல் நடத்தப்படும் என்று ஜே வி பி தெரிவித்துள்ளது. ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த பொது தேர்தலின் போர் நேர்மையானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான தெளிவூட்டல் நடவடிக்கைகளை ஜே.வீ.வி மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More

கம்மன்பிலவின் மனைவி ஆணைக்குழு முன்னிலையில்

பிவிதுறு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(9) பிரசன்னமாகியுள்ளார். இன்னும், அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சாட்சி கையொப்பமிட்டமைக்காகவே அவரிடம் இன்று விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடளில் பிரதியமைச்சர் அமீர் அலி..

Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்  அனர்த்த முகாமைத்துவ  அமைச்சர் கௌரவ  அநுர பிரியதர்சன யாப்பா கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில்  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் மற்றும்  அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Read More

தூர சிந்தனையுடன் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. சாய்ந்தமருதுவில் அமைச்சர் றிஷாட்

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள், தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் இன்னோரன்ன விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தூர நோக்க சிந்தனையுடன் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். லங்கா அசோக் லேலன்ட் பி எல் சி கம்பனியின் சாய்ந்தமருது – கல்முனையை மையமாகக்கொண்டு இயங்கவுள்ள கிளையினை சாய்ந்தமருதுவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…

Read More

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது

முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது. புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி…

Read More

தர்காநகர் வரியிறுப்பாளர் சங்கத்தினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- தர்கா நகர் -வரியிறுப்பாளர் சங்கத்தினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்க்கிடையிலான சந்திப்பு பேருவளை நாதா கார்டனில் (17) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்கார் உட்பட சக உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பில் தர்கா நகர் பிரதேசத்தில் நிலவும் வரி அறவிடுதலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், குப்பை கூழங்களை அகற்றுவதில் உள்ள குறைபாடுகள், வாசிகசாலை குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்…

Read More

‘கட்சி, சின்னங்கள், கோஷங்களுக்காக வாக்களித்த காலம் மாறிவிட்டது; மக்கள் சேவகர்களை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள்’ – தோப்பூரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் இன்று (25) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று, அவர் உரையாற்றினார். தொடர்ந்து கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,   மக்கள் காங்கிரஸின் மீது கொண்டுள்ள அபரிமிதமான…

Read More

சவூதியில் இருப்பவர்களுக்கான ‪எச்சரிக்கை பதிவு‬!

அதிரைஉபயா உங்களிடம் யாராவது குறிப்பாக எமனி(ஏமன் நாட்டவர் மற்றும் பாகிஸ்தான் ) (“எனக்கு உடனடியாக பணம் தேவைபடுவதாக கூறி விலை உயர்ந்த மோபைலை காட்டி இதை மிக குறைந்த விலைக்கு தருகிறேன் என சொல்லி தந்தால் வாங்கிவிடாதீர்கள். “ஐய் நல்லா ஏமாந்துட்டான் வந்தவரை லாபம்” என நினைத்து வாங்கினால் ஏமாறுவது நீங்களாகதான் இருக்கும். காரணம் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் போலி சைனா மோபைலை உங்கள் கையில்கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிடுவார்கள். அல்லது எங்காவது திருடிய மோபைலோ அல்லது…

Read More