Headlines

வித்தியாவின் படுகொலைக்கு விஷேட நீதிமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ் சென்றுள்ள ஜனாதிபதி, புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவியின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று உரிய தீர்ப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வித்தியாவின் படுகொலையுடன்…

Read More

கைத்துப்பாக்கியுடன் செல்பி எடுத்த பெண்ணின் நெற்றியில் குண்டு பாய்ந்தது

கைத்துப்பாக்கியுடன் செல்பி புகைப்படம் எடுத்த ரஷ்ய பெண்ணின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் வெரோனிகா (21). செல்பி பிரியரான அவர் விதவித மான கோணங்களில் செல்பி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பாதுகாவலர் விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியை எடுத்த வெரோனியா அதனுடன் செல்பி புகைப்படம் எடுத்தார். அப்போது அவரது விரல் தவறுதலாக துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தியது. இதில் அவரது…

Read More

ஞானசார தேரர் விடுதலை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  இன்று காலை குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தன் பின்னர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5000 ரூபா பிணையிலும்,  10 லட்ச ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

எகிப்து மாணவர்களுக்கு எதிராக தொடரும் மரண தண்டனை

-இப்னு ஜமால்தீன்- எகிப்தின் இராணுவத் தளபதியாக இருந்த அப்துல் பத்தாஹ் அஸ் சீசியின் தலைமையிலான குழுவினரால்ஜனாதிபதி முர்சி தலைமையிலான ஜனநாயக அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டபோராட்டத்தில் வெற்றிகண்ட சீசீ குழுவினர் எகித்தை ஆட்சி செய்து வருகின்றனர். சீசியின் அரசானது அந்நாட்டு சகோதரத்துவ உறுப்பினர்களை அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டு வருகின்றது. அதன் வெளிப்பாடாக சகோதரத்துவ உயர்பீட உறுப்பினர்கள், கலாநிகள், ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவியர்களுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் மரண தண்டனையாகவே இருக்கின்றது. சகோதரத்துவ, ஹமாஸ் அமைப்புகளுடன்…

Read More

​கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1, 2 ,3 ,7, 8, 9 ,10 ,11 ,12 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மாலிகாகந்தயிலுள்ள அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள்படவுள்ள சுத்திகரிப்பு…

Read More

வீதி அபிவிருத்தி தொடர்பில் பத்தாண்டுத் திட்டம்

வீதி அபிவிருத்தி தொடர்பான பத்தாண்டு திட்டமொன்றை தயாரிப்பதற்கு வீதி அவிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஏனைய வீதி அபிவிருத்தி திட்டங்களையும் கருத்திற்கொண்டு உத்தேச திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சமன் பண்டார கூறியுள்ளார். தற்காலத்திற்கு ஏற்றவாறு வீதி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சப்பாத்தின் நூலை போலீஸ்காரர் கட்டிவிட்டதால் சர்ச்சையில் சிக்கிய இந்திய அமைச்சர்

இந்தியா – மேற்குவங்கத்தில் அமைச்சரின் சப்பாத்திற்கு அவரது பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் லேஸ் கட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ராச்பால் சிங். மேற்கு வங்கத்தின் பிரபல சிற்பியும் ஓவியக் கலைஞருமான மறைந்த ராம்கின்கர் பெய்ஜ் பிறந்த நாள் விழா தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க அமைச்சர் ராச்பால் சிங் வந்தார். ராம்கின்கர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்கு முன்னர் வெளி யில்…

Read More

நெருக்கத்தில் கூடி வெளியில் ஓட முடியாமல் குளியலறையில் ஒளிந்த லத்தீப், மொஹைதீன் மற்றும் செல்லத்துரை ஆகியோரே பரிதாபமாக உயிரிழந்தனர்

கொழும்பு, மருதானையில் உணவகமொன்று நேற்று தீப்பிடித்துக் கொண்டதில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் தீக்காயங்களுக்குள்ளானார். நேற்று நண்பகல் 12.45 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் முற்றாக எரிந்து சாம்பராகியதோடு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முற்றாக எரிந்து சேதமடைந்து காணப்பட்டன. இச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் இந்த உணவகத்தில் பணியாற்றுபவர்களாவர். சமையல்காரராகப் பணியாற்றிய செல்லத் துரை என்பவரும் உணவகச் சிப்பந்திகளான லத்தீப், மொஹைதீன் ஆகிய மூவருமே உயிரிழந்தவர்களென அடையாளம்…

Read More

வியாழக்கிழமை மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம்

எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு இணைப்பாளர் அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாபினால் ஊடக அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 மற்றும் ஜூலை 16…

Read More

போதைப்பொருள் வியாபாரிகள், சமூக விரோதிகளை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்றுவேன் – ஜனாதிபதி மைத்திரி

போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது இந்த இலக்கை அடைவதற்கு புதிய தேர்தல் முறை உதவும் என்றும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி நடக்குமா அல்லது விகிதாசாரமுறை மற்றும் தொகுதி முறை இணைந்த கூட்டு முறைப்படி நடக்குமா என்று உறுப்பினர்கள் சிலர் கேள்வி…

Read More

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரரின் இல்லத்திற்கு மைத்திரி விஜயம்

இரண்டாம் உலகப் போரின் போது இராணுவச் சிப்பாயாக கடமையாற்றிய தனது பழைய நண்பர் சோமவர்டன வீரசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று நலம் விசாரித்தார்.பொலநறுவைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தனது நண்பரான சோமவர்டன வீரசிங்கவின் இல்லத்திற்கு சென்று சந்திப்பை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியை ஆனந்தக்கண்ணீருடன் திரு.சோமவர்டன வரவேற்றார்.இதன்போது சில சுவாரஸ்யமான அனுபவங்களை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பகிர்ந்து கொண்டார்.

Read More

புத்தளம் காசிமிய்யாவில், சிங்கள மொழி கற்பிக்கும் பௌத்த தேரர்

முஹ்ஸி புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இன்று (25.5.2015) இடம் பெற்ற காலைக் கூட்டத்தில் புத்தளம் கிழக்கு கிராம சேவகர்ப் பகுதியில் அமைந்துள்ள செம்மாந்தளுவ பௌத்த விகாரையின் தலைமை மதப் போதகர் “மஹனுவர திலகரத்ன தேரர்” கலந்து கொண்டு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் தான் அறிந்து வைத்துள்ள விடயங்கள் சிலவற்றை எளிமயான முறையில் தமிழிலும்,சிங்களத்திலும் பகிர்ந்து கொண்டார். இவர் புத்தளம் அல்மத்ரசத்துள் காசிமிய்யாவில் பகுதி நேரமாக மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பித்து வருகின்றார். பிரதேசத்தில் வாழும்…

Read More