Headlines

நீதிமன்ற தடையையும் மீறி நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்டிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்ரம் விதித்துள்ள தடையையும் மீறி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஜனாதிபதிக்கு ரிப்கான் பதியுதீன் அவசர கடிதம்

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அடையாளமாக வடக்கில் பல காணிகள், ஆங்காங்கே விடுவிக்கப்பட்டு   மீளக்குடியேற்றங்கள் , சுய தொழில் ஊக்குவிப்புகள் ,அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தங்கள் மீதான நம்பிக்கை வலுவடைந்து வருகின்றது. நல்லிணக்க அடையாளங்களின் இம்முயற்சிகள் வடக்கில் உள்ள மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை,முள்ளிக்குளம்…

Read More

சார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலைதீவு

சார்க் நாடுகள் அமைப்பின் 19வது உச்சி மாநாட்டை புறகணிப்பதாக மாலைதீவு அறிவித்துள்ளது. காஷ்மீரில் உரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிட்டது. இந்த நிலையில், தற்போது 5 வது நாடாக மாலைதீவும் சார்க் மாநாட்டை புறக்கணித்தது. அந்த நாடு சார்பில் சர்வதேச பயங்கரவாதத்துக்கு மாலைத்தீவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது….

Read More

மெகா சீரியல் (Poem)

கிழவியும் குமரியும் கிறுக்குத் தனமாய் பல பல நாடகம் பார்த்து ரசிக்கிறார். சேரியில் வாழும் சின்ன வீட்டிலும் சீரியல் பார்க்க LCD உண்டு. நாடகம் சொல்லும் நாறிய கருத்தால் கோடு ஏறிய குடும்பங்கள் எத்தனை? அடுத்தவன் மனைவிக்கு ஆட்டையை போடல் உடுத்த உடுப்புடன் ஓடிப் போதல் கொடுத்து உதவி குழியைத் தோண்டல் மருமகள் வாழ்வை மாமியார் கெடுத்தல் அருமையாய் பேசி ஆம்பிளையை கவிழ்த்தல் உரிமையைப் பேசி உம்மாவைப் பிரித்தல் தரித்திர நாடகத் தாக்கங்கள் ஆயிரம் இரண்டு வரிகளில்…

Read More

ஊடகங்கள் மோசமாக செயற்படுகின்றன – விக்டர் ஐவன்

இலங்கையின் ஊடகங்கள் குறித்து திருப்தி அடைய முடியாது என ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகங்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களை தூய்மைப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். தாம் ராவய ஊடகத்தில் ஆசிரியராக கடமையாற்றிய போது உச்ச அளவில் ஊடக ஒழுக்க விதிகளை பின்பற்றி செய்தி…

Read More

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை இடம் பெற்றது

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை இடம் பெற்றது. கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் மீள்குடியேற்ற செயலணி திட்ட அலகு ஊடாக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா செலவில் இவ் வீதி மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (25) புதன் கிழமை இருள் சூழ்ந்த பிரதேசங்களுக்கு…

Read More

பிக்குகளுக்கு முன் தனது நீண்டநாள் முஸ்லிம் நண்பர் மீது சீறிப்பாய்ந்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு நடந்த உண்மையான கதையிது. கொழும்பிலுள்ள பிரபல ரெஸ்டுரன்டுகளுக்கும், ஹோட்டல்களுக்கும் சொந்தக் காரரான இவா் மஹிந்தவோடு கூடிக்குலாவி திாிவதில் முன்னணியில் நினறவா். முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்த காலங்களில் கூட மஹிந்தவுடனான இவாின் நட்பு மிகவும் நெருக்கமாகவே இருந்தது. தோ்தல் காலங்களில் முஸ்லிம்களை மஹிந்தவின் மாளிகைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை இவா் கடந்த காலங்களில் கச்சிதமாக நிறைவேற்றுபவராய் இருந்துள்ளாா். சுருக்கமாக சொன்னால் மஹிந்தவின் தீவிர விசுவாசியாகவே…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையமர்வு காரணமின்றி பகிஷ்கரிக்கப்பட்டது – தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்

எம்.ரீ.எம்.பாரிஸ் சபை உறுப்பினர்களினால் பிராத்திய உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்ப பட்டுள்ள கடிதப்பிரதி இத்துடன் அனுப்பபட்டுள்ளது கடந்த ஓக்டோபர் 30.2014ந் திகதி மு.ப. 10.00 மணியளவில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது பொதுச் சபைக் கூட்டம் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர் அவர்களும்,உறுப்பினர் ஐ.ரீ. அமீஸ்டீன் அவர்களுமே வருகை தந்திருந்தனர் ஏனைய உறுப்பினர்கள் வருகை தராமையால்; பொதுச் சபைக் கூட்டம் அடுத்த…

Read More

எம்.பி.க்களின் கொலைகைள விசாரிக்க குழு – ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது கொல்லப்பட்ட தி.மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், த.மு. தஸநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் கொலைச்சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழேயே இந்தக் குழுவை அமைத்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் மற்றும் பொலிஸ்…

Read More

யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரதமர்

வடக்குக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது இன்று யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குகொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து பிரதமர், மீள் குடியேற்றம் தொடர்பிலும், புனருத்தாபனம் பெற்ற இளைஞர்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமரின்…

Read More

“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமானதாக காணப்படுகின்றது எனவும், பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையே நாம் செலவிட்டு வருகின்றோம் எனவும் புகையிலைப் பாவனையின் யதார்த்த நிலை இதுவே எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புகையிலைச் செய்கைத்…

Read More

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல்…

Read More