Headlines

நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து தின்ற 5 பேர் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அங்குள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தது. பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டையை தினந்தோறும் உடைத்து குடிக்கும் பழக்கம் கொண்ட அந்த நாயின் தொல்லை தாங்க முடியாத கோழிகளின் உரிமையாளர் முட்டைகளில் விஷம் வைத்து அந்த நாயை கொல்ல முயன்றுள்ளார். விஷம் கலந்த முட்டைகளை சாப்பிட்ட நாயின்…

Read More

இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் 6 வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்பதோடு பதவி காலத்தில் நான்கு வருடங்கள் பூர்த்தியான பின் மக்கள் கருத்தரிய ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றும் ஏற்பாடுகள் உள்ளன. 2005 நவம்பர் 19 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ முதல் முறையாக இலங்கையின்…

Read More

புட்டிபால் புகட்டிய பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வித்தியாசமான முறையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். நண்பர்களுடன் தனது சொந்த தொகுதியான ‘விட்னி’யில் உள்ள டீன் லேன் பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு அண்மையில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியுடன் அவர் வெகு நேரம் செலவிட்டார். அதைக் கையில் தூக்கி கொஞ்சியும், முத்தம் கொடுத்தும் மகிழ்ந்தார். பின்னர் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பாலும் புகட்டினார்.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக அபுதாஹிர் நபீஸ் நியமனம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக  அபூதாஹிர் நபீஸ் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் உட்பட கிராமியப் பொருனாதார அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். NBC ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும்…

Read More

2மில்லியன் பெறுமதியான பொதுநோக்கு மண்டபம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

மன்னார் பெரியமடு காயாநகர் மக்களுக்கான பொதுநோக்கு மண்டபம் இன்று (10) முன்னாள் வடமாகாண சபை உறுப்பி றிப்கான் பதியுதீன் அவர்களினால் மக்கள் பாவனைக்கு இன்று கையளித்தார் இந்த பொதுநோக்கு மண்டபமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவ ரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்ட நிதியாகும். மேலும் இந்த நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரபீக் சேர் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு…

Read More

பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில்  இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல்  2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், இன்று (03) ஞாயிற்றுக்கிழமை, தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரதான சந்தேகநபர்…

Read More

15 பில்லியன் தரகுப் பணம், அம்பலப்படுத்தும் சந்திரிக்கா

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் கடந்த அரசாங்கம் 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read More

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி…

Read More

நண்பன் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் – பரபர வீடியோ

அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது. அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு,…

Read More

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டனர் இதில் அமைச்சர்களான ராஜித, வஜிர அபேவர்த்தன, ஹரிசன் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு எம் பி க்களான சுமந்திரன், சிறீதரன் உட்பட…

Read More

கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து : ஜனாதிபதி அதிரடி

இன்று இரவு நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் இலங்கை மன்ற கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருப்பதாக கட்சியின்  பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளர்களிடம், கட்சி செயற்குழு கூட்டத்தை இரத்துச்…

Read More