Headlines

தமது இனத்தவர்களுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் ஹக்கீமிடம் ஆதிவாசி தலைவர் கோரிக்கை

முகம்மட் பஹாத் ஹெனானிகல ஆதிவாசிகளின் மறைந்த தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தோவின் புதல்வர்நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (11) பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து தமது இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருமாறு விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். ஆதிவாசிகளின் குடியிருப்புகள் உள்ள பிரதேசங்களில் அவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், வேடுவர் தலைவர் கேட்டுக்கொண்டபடி, ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு…

Read More

“செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிங்கள கிராமமான கெவிலியாமடு கிராமத்தில் “செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.நிமால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்டார, பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து…

Read More

சென்னைக்கான எயார் லைன்ஸ் விமான சேவை ரத்து

சென்னையில் தொடரும் கடும் மழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதி, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்  விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு…

Read More

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் சாதகமான நடவடிக்கை ஜனாதிபதி செயலக உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

சுஐப் எம் காசிம் வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான, தீர்க்கமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி பி அபேகோன் இன்று (31) மாலை உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய பின்னர், அவர்…

Read More

மஹிந்தவின் வாக்கு சரிவு!

மகிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் பெற்றிருந்த 58 லட்சம் வாக்குகள் தற்போது குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மகிந்தராஜபக்ஷவின் 20 லட்சம் வாக்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது மக்கள் முன்னைய அரசாங்கத்தின் உண்மையான முகத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

பிரதமர் பதவிக்காகக் களமிறங்கமாட்டேன்! ஜனாதிபதி

ரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பதவிக்காக மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். ஒரு தடவை மாத்திரமே அந்தப் பதவியை வகிப்பேன். அத்துடன், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் நான் பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுவேன் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறானதொரு எண்ணம் எனக்குக் கிடையாது. மக்களுக்கு…

Read More

கூடவிருந்து கொல்லும் நீரிழிவு நோய்

டாக்டர். ILM. றிபாஸ் MBBS, MSc, MD (Reading at PGIM Colombo): நவம்பர் மாதம்  நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விளிப்புனர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை  உலக நீரிழிவு வியாதிக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில்  நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன் இவ்வியாதியினை கட்டுப்படுத்துவதற்கான  பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு…

Read More

லஞ்சத்திற்கு மன்னிப்பு கிடையாது

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரது தராதரம் பற்றி கவனம் செலுத்தப்படாது என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பெரியவர்களா, அந்தஸ்தானவர்களா என்பது பற்றி கவனிக்கப்படாது. பணிகளை சிறந்த முறையில் செய்வதனையே ஆணைக்குழு முதன்மையாக கருதும். லஞ்சத்திற்கு மன்னிப்பு கிடையாது. இது தொடாபில் திமிங்கலம், சுறா, நெத்தலி எல்லோருக்கும் சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்படும். இந்த ஆண்டில் இதுவரையில் 3095 முறைப்பாடுகள்…

Read More

தபால் பணியாளர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் விவாதம்

தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தப் பணி புறக்கணிப்பினால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால்நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

காட்டு யானை தாக்கியதில் சிறுமி பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில், சனிக்கிழமை (03) மாலை, காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவெம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர், ஈரக்குளம் கிராமத்துக்கு  சைக்கிளில் சென்றுவிட்டு, சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அருகே உள்ள வயல்பாதையூடாக மாவடிவெம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, குறித்த பாதைக்கு குறுக்கான வந்த காட்டுயானை, இவர்களை…

Read More

தகவல் அறியும் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்திட்டார்

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமானது அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அச்சட்ட மூலத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்க, பிரதி பொதுச் செயலாளர் நீல் இட்டவெல ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

Read More

கொரியா சர்வதேச நிறுவனத்தினால் அதிக நன்கொடைகள்

நாட்டில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையிலும், வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் கொரியா கொலோன் சர்வதேச நிறுவனத்தினால் அதிகளவிலான நன்கொடைகள் நமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்கும் வகையில் 12,000,000 ரூபா பெறுமதியான 03 தண்ணீர் தாங்கிகளும், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 8,000,000 ரூபா…

Read More