Headlines

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் கொழும்பு மாவட்டத்திலும் காலி மற்றும் நுவரெலியா நகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளே மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

புத்தளம் அல்காசிமி சிட்டி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

புத்தளம், அல்காசிமி சிட்டி, மன்/ புத்/ ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எம்.நஜ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மற்றும் கோட்டக்…

Read More

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கோரிக்கை

மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைகள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற போதும், அவர்களுக்கு நியமனம் வழங்க, நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களம் அனுமதியளிக்கவில்லை என, குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நியமனங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, நிதி அமைச்சுக்கு வலியுறுத்தி, மேல் மாகாண…

Read More

கட்டார் மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் – ஹமாஸ்

கட்டாருக்கும் ஹமாசுக்குமிடையிலான உறவு புதிதல்ல. ஹமாஸுக்கு விசாலமான ஒரு சர்வதேச தொடர்பு இருக்கின்றது. கட்டார் வாழ் மக்கள் , அந் நாட்டு அரசுக்கு நாம் எப்போதும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக இயக்கம் என்ற வகையில் கட்டாரின் உதவிகள் ஹமாசுக்கு கிடைக்கின்றது என்பது கருத்தல்ல மாறாக, பலஸ்தீன் மக்களுக்கான உதவிகள் அவை இப்போது இருக்கும் அமீர், இவருக்கு முன்னாள் இருந்த அமீர் காசாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.காசாவின் கீழ்கட்டுமான  அபிவிருத்திக்கு உதவியுள்ளனர். காலித் மிஷால் – பேச்சு

Read More

இஸ்லாமுக்கு சேவையாற்றிய சொற்பொழிவாளர் ஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி மன்னர் கௌரவிப்பு

இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார். மன்னர் ஃபைசல் சர்வதேச பரிசு என்ற பெயரில் இஸ்லாமிய சேவை, இஸ்லாமிய கல்வி, அரபுமொழி மற்றும் இலக்கியம், மருத்துவம், அறிவியல்…

Read More

இனவாதம் இன ஒற்றுமையை வலியுறுத்துகிறதா?

-M.M.A.Samad – இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த – சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனையவர் வந்தேறு குடிகளல்ல. அவர்களும் ஆண்டாண்டு காலமாக இம்மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்;. இத்தேசத்தைக் கௌரவப்படுத்தியவர்கள். அவர்களால் இத்தேசம் மாண்பு பெற்றிருக்கிறது. இதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். இந்நாடு அவர்களுக்கும் சொந்தம். அவர்கள் அனைவரும் சகல உரிமைகளும் பெற்று இம்மண்ணில் வாழ்வதற்கு…

Read More

கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு நிகழ்ச்சி. ஏற்பாடு Sri Lanka Da’wa Centre – Qatar இடம் MIC Sports Club– Ummsaeed Time 05/10/2014 (காலை 9 இலிருந்து ) பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள் . جـــــــزاكم الله خيـــــــــــــــــــــــرا ،،،،، Sri Lanka Dawa Centre Qatar – SLDC…

Read More

மைத்திரியை பலப்படுத்துங்கள்; விரிவுரையாளர்கள் சங்கம் கோரிக்கை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழக தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் பிஷாந்த குணவர்தன, சமய தலங்கள் மற்றும் தொல்பொருள் அரும்பொருட்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம்சுமத்தினார். சமய…

Read More

 நூதனசாலைக்கு முன்பாக மரமுறிந்து விழுந்தது

கொழும்பு, நூதனசாலைக்கு முன்பாக பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அப்பகுதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எட்டப்படும் தீர்மானங்களில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

 பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட்டங்களை நடாத்துகின்றார் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விரிவாக ஆராயப்பட வேண்டும் பிரதேச சபை செயலாளர்கள் இல்லாமல் எவ்வாறு ஆராய்வது அதன் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் முதலமைச்சர் கூட்டங்களை நடாத்துவதை தவிர்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்ப – செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (10) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிராமிய…

Read More

நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள்

நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஆலோசனை கூறினார். முல்லைத்தீவு ஹிஜ்ரா புரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்களான விஜின்தன்,எஹியான்,வீ.ஜயதிலக ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும்…

Read More

லசந்த படுகொலை : சிம் அட்டைகளைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சந் தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் லசந்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரால் பயன் படுத்தப்பட்டுள்ள இந்த சிம் அட்டைகள் ஐந்தும், அக்காலப்பகுதியில் வெலிக்கடை சிறைக்கைதியாக இருந்த ஒருவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த சிறைக்கைதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள நிலையில், சிறையில்…

Read More