Headlines

பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்பு -அமைச்சர் மனோ கணேசன்

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்புக்கு ஒப்பானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிட்டது. ஆனால் சிங்கள சகோதரர்கள் மிகச் சரியான பதிலை அந்த அமைப்புக்கு வழங்கிவிட்டார்கள். எனவே அதனைப் பற்றி கருத்துக் கூற…

Read More

மோடியை கொல்ல திட்டமிட்டிருக்கும் ISIS

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். கள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம் தம்பனூரிலுள்ள பா. ஜ. க. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸ் என்பவரை கொல்லும் முன்பு அவர் முகமூடி அணிந்த is வாதி முன்பு மண்டியிட்டு இருப்பது போன்ற படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த படத்தில் டேவிட் ஹெயின்சுக்கு பதில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்டிருந்தது….

Read More

லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. லசந்த படுகொலை செய்யப்படும்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்தே இந்தத் தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்த நபரிடமிருந்து பெறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் அடிப்படையில் இரகசியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள இந்த நபர்…

Read More

விமல் வீரவன்ச சற்றுமுன் கைது – BREAKING NEWS

– நமது நிருபர் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்ட விமல் வீரவன்ச சற்றுமுன் கைது செய்யப் பட்டதாக பொலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Read More

யோஷித்த மற்றும் ஞானசார தேரரின்..! பகிரங்கமான இரகசியம்

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை அனுப்பியுள்ளனர். அந்த கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,ஜனவரி 31 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச உட்பட சிலர் விளக்கமறியலில் இருக்கும் யோஷித்த உள்ளிட்ட கைதிகளை சந்தித்து பேசிவிட்டு திரும்பிச் சென்றனர்.  இவர்களை சந்தித்து பேசி பின்னர், யோஷித்த ராஜபக்ச இரும்பு கதவை திறந்து கொண்டு தான்…

Read More

மன்னார் – வங்காலை பிரதேசத்தில் தாகம் தீக்கும் அமைச்சர் (photos)

ஏ.எச்.எம் .பூமுதீன் மன்னார் வங்காலை பிரதேசத்தில்; தாகம் தீக்கும் இடத்தில் உள்ள நீர் அதிக உப்பு தன்மை கொண்டது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தானாக ஊற்றெடுக்கும் ஒரு தண்ணீர் ஊற்று எது வித உப்புத் தன்மையும் இல்லாமல் மக்களின் குடிநீர் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது நீண்டகாலமக ஊற்றெடுத்து வரும் இந்த நீரை பரிகி பார்க்க வேண்டும் என்பது அமைச்சரின் நீண்டநாள் ஆசை. நாணாட்டான் பிரதேச நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்று திரும்பி வரும் வழியில்…

Read More

விரைவில் ஞாயிறு தனியார் வகுப்புக்கு தடை

மத்திய மாகாணத்தில் ஞாயிறு தினங்கங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபையின் ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார். இதன்படி இந்த தடை இன்னும் இருவாரங்களில் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர் செல்வது பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை…

Read More

மூத்த ஊடகவியலாளர் கே.கே.இரத்தினசிங்கம் காலமானார்!

‘சுடர்ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) நேற்று (10) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார். கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.கே.ஆர். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில்…

Read More

பள்ளிவாசல் மீது கல் வீசியவர்களுக்கு புதுமையான தண்டனை

பொரளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது கல் வீசிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு 5 பேருக்கு புதுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொரளை வஜீராராம விகாரையின் ஊடாக வழங்குமாறு 5 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பொரளையிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசியதாக 5 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு நிவாரண…

Read More

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நிறைவு

காணாமற்போனோர் தொடர்பில் வட மாகாணத்தில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைத்து நாளை முதல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டீ குணதாஸ தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வசீம் தாஜூதின் கொலை, சர்வதேச உதவியை நாடவேண்டும் – கொழும்பு பல்கலைகழகம்

வசீம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வசீம் தாஜூதினின் உயிரிழப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் திரட்டப்பட்ட சீ.சீ.டி.வி காணொளிகள் ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தது. எனினும் சீ.சீ.டி.வி காணொளிகளில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த வாகனங்களின் இலக்கங்களையும் அதில் காணப்படும் நபர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை காணணப்படுவதாக பல்கலைகழகத்தினர் நீதிமன்றில் குறிப்பிட்டள்ளனர்.

Read More