Headlines

‘கட்டாரில் உள்ள இலங்கையர்களின், சம்பளங்கள் வங்கி ஊடாகவே வழங்கப்படும்’

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் சம்பளங்கள் வங்கி ஊடாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கட்டாரில் தொழில்களில் ஈடுபட்டு வரும் அனைத்து இலங்கையர்களது சம்பளங்களும் வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளது. வங்கியின் ஊடாக மட்டுமே சம்பளங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்…

Read More

துறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்

இலங்கை துறை முக அதிகார சபைக்கு சொந்தமாக காணப்படுகின்ற கப்பற் துறை , முத்துநகர் காணிகள் உரியவர்களுக்காக துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் வெற்றுக் காணிகளில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதன் ஊடாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரியாலயத்தில் இன்று (19) வெள்ளிக் கிழமை இடம்…

Read More

சிக்கினார் நாமல் – அதிசொகுசு நடமாடும் படுக்கையறையும் சிக்கியது (படங்கள் இணைப்பு)

நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் படுக்கையறை அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது. அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் உள்ளது. இந்த பஸ்வண்டியினுள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாதவாறு கறுத்த ஸ்டிக்கரால் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ளன. பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

Read More

தமிழரசுக் கட்சியின் சாத்வீகப் போராட்டத்தை அரசு எக் கைங்கரியம் கொண்டு தாக்குப் பிடிக்கப் போகிறது..??

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் தமிழரசுக் கட்சியின் 15 வது மா நாட்டில் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதிலை தரத் தவறுமிடத்து வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தமிழரசுக்கட்சி அரசை எச்சரித்துள்ளது. முஸ்லிம் கட்சிகள் சில தேர்தலைக் கண்டால் அறிக்கைகளையும்,வீர வசனங்களையும்,உறுதி மொழிகளையும் அள்ளிக் கொட்டி விட்டு தேர்தல் முடிவுற்ற பிறகு அனைத்தும் காற்றில் கரைந்த கதையென முஸ்லிம்களை நாடு வீதியில் விட்டுச் செல்வது போன்று தமிழரசுக் கட்சியின் இவ் எச்சரிக்கையை…

Read More

இலங்கை வீரர்கள் பல பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர் – தயாசிறி!

தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்ட இலங்கை வீரர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை என விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் .இந்தியாவில்  நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் அங்கு போட்டிகளில் கலந்துக் கொள்ளச்  சென்ற இலங்கையின் விளையாட்டு வீர,வீராங்கனைகள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான பொறுப்பை இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்கவேண்டும் என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய…

Read More

விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மண்டபத்தில் விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் 19.01.2017 ஆம் திகதி 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள்வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக…

Read More

மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் – இலங்கை

சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அலகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் பிரபா கணேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ்…

Read More

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையில் சூச்சியின் தலையீடு தேவை: தலாய் லாமா

மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்கும், சுமூக நிலைமையை ஏற்படுத்துவதற்கும் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சியால் முடியும் என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம் ஏற்கெனவே மியான்மர் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் கடந்த காலங்களில் பேசியிருப்பதாகவும், அவரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இதனை தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும்…

Read More

23000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்

23000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு விசேட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்தி, ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதிலும் காணப்படும் சுமார் 10,000 பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பாடசாலை கட்டமைப்பை உரிய…

Read More

“தேசப்பற்றை உருவாக்குவதன் மூலமே நாட்டை முன்னேற்றலாம்” – கன்னி உரையில் முஷாரப் எம்.பி!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை… (27. 08. 2020)  கௌரவ சபாநாயகர் அவர்களே! பாராளுமன்றத்தில் எனது முதல் பங்களிப்பை வழங்க அழைக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அடக்கமும் கொள்கின்றேன். முதலில், சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட உங்களை வாழ்த்த விரும்புகிறேன், இந்த பாராளுமன்றத்தில் உங்கள் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறேன். இந்த உயரிய பாராளுமன்றத்திற்கான எனது பயணம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனாலும், இந்தப் பயணம், வெற்றியை நோக்கி நன்கு சித்தரிக்கப்பட்ட மனச்சித்திரம் கொண்டு…

Read More

சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள்

தாய்லாந்தில் சிஅன்காமாய் என்ற நகரில் நடைபெறவுள்ள 2016 சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளவனர். இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான  விமான பயணச்சீட்டுக்களை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமீபத்தில் வழங்கினார். தேசிய ரீதியில் தகுதி பெற்ற அணித்தலைவர்கள் நான்கு பேருக்கும் 16 மாணவர்களுக்குமான விமான பயணச்சீட்டுக்கள் இதன் போது வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை தாய்லாந்தின் அடிப்படை கல்வி…

Read More

மஹிந்த நன்றிகெட்ட அரசியல் சந்தர்ப்பவாதி: எஸ்.பி

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய  திவயின ஞாயிறு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தான்திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். “இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், இந்தத் தடவை தேர்தல் ஆரம்பித்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோத்தபாய…

Read More