Headlines

சர்வதேச சிறுவர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. “அழகிய சிறுவர் உலகின் பாதுகாப்பிற்காக முதியோரே கரம் கொடுங்கள்” என்பது இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். சிறுவர்களுக்கு சமூகத்தில் உரிய பாதுகாப்பை வழங்கி நாட்டைமுன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு சிறந்த இடங்களாக குடும்பம், பாடசாலை,…

Read More

கொழும்பு விளக்கமறியல் சிறையின் பாதுகாப்பு பொலிஸார் வசம்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறைச்சாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இதுவரை சிறை அதிகாரிகளே பொறுப்பாக இருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.விளக்கமறியல் சிறையில் இடம்பெறும் அநியாயங்களை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக 50 மோட்டார் சைக்கிள்கள் நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளன.

Read More

சூடான் அதிபரை கைதுசெய்யுமாறு ஐசிசி தென்னாப்பிரிக்காவிடம் கோரிக்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர் என்று அறிவிக்கப்பட்ட சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஒமர் அல் பஷிர் மீது சுமத்தப்பட்டுள்ளன.அவரைக் கைதுசெய்யுமாறு தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோரியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள உறுப்புநாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா சூடான் அதிபரைக் கைதுசெய்வதற்கு கடமைப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த…

Read More

சபாநாயகர் சாம்பியா பயணம்

அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167 நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் உட்பட 2000 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலிருந்து சபாநாயகர் கருஜயசூரியவுடன் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,பிரதி அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கே.கோடீஸ்வரன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க…

Read More

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்!

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர். எனவே, அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு ஆவன செய்யுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அகில இலங்கை…

Read More

பர்மா முஸ்லிம்களுக்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் தூ ஆ பிராத்தனை

கொலைக்களமாகும் பர்மா தேசத்தில் எமது சகோதரர்கள் கருனணயின்றி கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுகிறார்கள். இது தொடர்பில் இறைவனிடம் மன்றாடுவோம். நாளை ஜும்மா தொழுகையின் பின் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களிலும்” பர்மா நாட்டில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இறைவனிடன் மன்றாடுவோம்”எனும்கருப்பொருளில் துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் தொழுகையில் குனூத் இனணத்துகொள்ளுமாறும் அவர்களின் நிம்மதி வாழ்வுக்காகவும் பிராத்திப்போம். பணிவுடன். ……… அனைத்து சமூக இயக்கங்கள்.

Read More

தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலையிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை கடற்படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிப்போம் : நவாஸ்

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.   அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும்  என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…

Read More

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் – அமைச்சர் றிஷாத்

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் வடமாகாண சபையின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கையென அமைச்சர் றிசாட் தெரிவிப்பு மன்னார் மாவட்ட கல்வித்திணைக்களத்தின் பரிபாலனத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி; வரும் இணைந்த பாடசாலைகளின் கல்வி வசதிகளையும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் வட மாகாணசபையின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே தாம, அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாட்…

Read More

இனி பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்!

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

நிந்தவூர், அல்- மஸ்ஹர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

2024 ஆம் புதிய கல்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று, மகிழ்விக்கும் நிகழ்வு, நிந்தவூர், அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி.நெளபல் அலி தலைமையில் இன்று (06) இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் கலந்துகொண்டதுடன், கெளரவ அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More