அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா சீனாவின் ஆதரவுபெற அரசு முயற்சி
ஐ.நா.மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் பணிகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. குறித்த பிரேரணைக்கு ஆதரவு பெறும் வகையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது என்று அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். சர்வதேச தரத்துடன் கூடிய உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா பிரேரணைக்கு பல…
