சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டிற்கு விதிக்கப்பட்ட 13 வருட சிறைத்தண்டனை வீட்டுக் காவலாக குறைக்கப்பட்டதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் சிறை திரும்பியுள்ளதாக அவரது கட்சி திங்கட்கிழமை தெரிவித்தது. மாலைதீவின் தலைநகரிலுள்ள வீட்டிலிருந்து நஷீட் ஞாயிற்றுக்கிழமை இரவு மாபுஷி தீவிலுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் அவரது மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. தண்டனை மாற்றப்பட்டிருந்த நிலையில் நஷீட் சிறைச்சாலைக்கு திரும்பவும் அனுப்பி வைக்கப்பட்டமை…
