Headlines

வெலே சுதா தொடர்பான ஒரு வழக்கின் தீர்ப்பு இன்று

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பத்மன் சூரசேன அறிவித்துள்ளார். 2008ம் அண்டு டிசம்பர்…

Read More

இலங்கையில் பத்திரிகை சுயதணிக்கை குறித்து ஆராய்வு

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுயதணிக்கையை வலுப்படுத்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சிங்கள, ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

Read More

புதிய போக்குவரத்து முறை இடைநிறுத்தம்

கொழும்பு –  இராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியடைந்தமையே இதற்கான காரணமாகும்.

Read More

90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படும் சாத்தியம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உப தலை­வரும் முன்னாள் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை சுட்டு படு­கொலை செய்­தமை, தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சியின் தலை­வ­ரு­மான சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்) 90 நாள் தடுப்புக் காவல் விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுக்கும் சாத்­தியம் உள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரிவிக்­கின்­றன. கடந்த ஞாயி­றன்று கைது செய்­யப்­பட்ட அவ­ரிடம் முன்னாள் எம்.பி….

Read More

மஹிந்­தவை சந்­தித்த சீனப் பிர­தி­நிதி

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சீனாவின் உப வெளி­வி­வ­கார அமைச்சர் லீ சென்மின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவை கொழும்பில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்பு ஒரு வழ­மை­யான சந்­திப்பு என முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­துள்­ள­தாக ‘தென் சீனா மோனிங் போஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக்ஷ அதி­காரம் இழந்­ததன் பின்னர் சீனத் தலைவர் ஒருவர் முதல் தட­வை­யாக அவரை சந்­தித்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும். இலங்­கைக்கும் சீனா­வுக்­கு­மி­டை­யி­லான உறவை வலுப்­ப­டுத்தும் நோக்கில்…

Read More

சிறு­பான்மை மக்­களின் வாக்குகளாலே தோற்றோம்

சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் அடித்­த­ளத்தை இழந்­ததன் கார­ண­மா­கவே ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­யது எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன, அடுத்த பொதுத் தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான முன்­ன­ணியை வெற்­றி­பெறச் செய்­வ­தற்­கான சீர­மைப்­புக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். இரத்­தி­ன­பு­ரியில் அண்­மையில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ஜோன் சென வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப…

Read More

கண்­ணி­வெடி அகற்றும் திட்­டத்­திற்கு ஜப்பான் நிதி­

ஜப்­பானின் கீழ்­மட்ட மனித பாது­காப்புத் திட்­டத்­திற்­கான நன்­கொடை உதவி வழங்கும் பொருட்டு வட­ப­கு­தியில் கண்­ணி­வெடி அகற்றும் வேலைத்­திட்­டத்­திற்கு ஜப்பான் அரசு 801,311 அமெ­ரிக்க டொலர்­களை (108 மில்­லியன் ரூபா) வழங்­கி­யுள்­ளது. நன்­கொடை ஒப்­பந்தம் ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­நும மற்றும் HALO Trust நிறு­வ­னத்தின் திட்ட முகா­மை­யாளர் டமியன் ஒபிரைன் ஆகிய இரு­வரும் கொழும்­பி­லுள்ள ஜப்­பா­னிய தூது­வ­ரா­ல­யத்தில் நேற்று கைச்­சாத்­திட்­டனர். இலங்­கையின் வட­ப­கு­தியில் கண்­ணி­வெடி அகற்றும் திட்டம் HALO Trust நிறு­வ­னத்தால் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. கண்­ணி­வெ­டியால் பாதிப்­ப­டைந்த பிர­தே­சங்­களை…

Read More

மது வைத்திருந்த பிரித்தானியருக்கு, சவூதி அரேபியாவில் 350 கசையடி தண்டனை

சவூதி அரேபியாவில் வசிக்கும் பிரித்தானியர் ஒருவர் வீட்டில் தயாரித்த மதுவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 360க்கும் அதிகமான சவுக்கடிகளை எதிர்கொள்கிறார். கார்ல் அண்ட்ரே என்ற இந்த 74 வயதான பிரிட்டிஷ்காரரின் காரில் ஆறு ஒயின் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலான காலமாக சிறையில் இருந்து வருகிறார். சவூதி அரேபியாவில் மது பாவனைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆண்ட்ரேயின் வயது மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக அவருக்கு இந்த கசையடி தண்டனை நிறைவேற்றப்படாது…

Read More

நான் ஏன் இஸ்லாத்தில் இணைந்தேன்…? ஆஸ்திரேலிய சகோதரியின் விளக்கம்…!!

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரியின் பெயர் சாறா ஆஸ்ரேவியாவை சார்ந்தவர். தீவிர கிருத்துவ குடும்பத்தில பிறந்து அண்மையில் இஸ்லாத்தில் இணைந்தவர். இஸ்லாத்தில் இணைந்தது பற்றி அவரே கூறுவதை கேளுங்கள்… Australian journalist Sarah Price explains why she made the life-changing decision to embrace Islam. Yahoo Newsroom – Australian journalist Sarah Price explains why she made the life-changing decision to embrace Islam. BY SARAH PRICE…

Read More

வடமாகாண சபையில், முஸ்லிம்கள் குறித்து பிரேணை – றிப்கான் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகும் நிலையில், அதுகுறித்து வடமாகாண சபையில் கவனயீர்ப்பு பிரேணையை கொண்டுவர இருப்பதாக வடமாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கூறினார், இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடமாகாண முஸ்லிம்கள் பலவழிகளிலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடமாகாண முஸ்லிம்களுக்கு பின்னர் இடம்பெயர்ந்த பல தொகுதியினர் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் வாழத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கபட்டவில்லை. மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு தமிழ் கூட்டமைப்பைச் சேந்த சிலர் தொடர்ந்தும் தடையேற்படுத்துகின்றனர். அரச அதிகாரிகள் முஸ்லிம்கள்…

Read More

அந்தரத்தில் பிறந்த ஆயிஷா… – மனதை உருக்கும் உண்மைக் கதை!

அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார். அனைவரும் பதற, அடுத்து உள்ள விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கதைபோல இருந்தாலும், இது 18 வருடத்துக்கு முன்பு குவைத்தில்…

Read More

சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று ஆரம்பமானது. இந்த வைபவத்தில் சச்சின் தெண்டுல்கருடன், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார். யுனிசெப் அமைப்பின் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவராக சச்சின்…

Read More