Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீன் மருதமுனைக்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக் கிழமை மருதமுனைக்கு விஜயம் செய்கிறார். கல்முனை வடக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை 04 மணிக்கு மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் சிறிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு மருதமுனை மக்கள் அனைவரும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் நிகழ்வின் போது மைகோப் குழுமத்தின் தலைவரும் தொழில் அதிபருமான சித்திக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்ளவுள்ளார். இதனையடுத்து…

Read More

ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடிந்தளவு பாடுபடுவேன் – ரதன தேரர் எச்சரிக்கை

இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார். இதனை எனது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் ஆதரித்து வாக்களித்து வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அதுவரை செயல்பாட்டில் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான 17 வது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டன. நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள்…

Read More

மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா? உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிவைப்பு

18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிட முடியுமா? இரண்டாவது பதவிக் காலத்தில் நான்கு வருடத்தின் பின் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியுமா? போன்ற விவகாரங்கள் தொடர்பில் நேற்று உச்ச நீதிமன்றம் தமது முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது. அரசியலமைப்பின் 129 (1) சரத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதற்கமைய பத்துப் பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் அவ்விவகாரம் கவனத்திற்கெடுத்துக்கொள்ளப் பட்டதற்கிணங்க அதன்…

Read More

உலகின் முதன்முறையாக துபாயில் 5G இன்டெர்நெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை தொடங்கப்பட உள்ளதாக எடிசலாட் ( Etisalat ) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மத் ஜூல்ஃபர் தெரிவித்தார். எக்ஸ்போ 2020 தொடங்கும் நேரத்தில் இந்த 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 5G நெட்வொர்க் சேவையில் அமீரகம் உலகின் முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெகு விரைவில் 5G நெட்வொர்க் சேவையை பயன்படுத்த அமீரக மக்கள்…

Read More

உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன்; மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்!

மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் மொஹான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார். தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படியும், அவ்வாறு செய்தால், உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு ஜனாதிபதி…

Read More

சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதில் வெற்றிகண்ட றிஷாத்

– சுஐப் எம்.காசிம் –   வடமாகாணத்தின் முக்கிய தொழிற்சாலைகளான காங்கேசந்துறை, சீமெந்து கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு – குறிஞ்சாக்கேணி உப்பளம் ஆகியவை யுத்தத்தின் கோரத்தினால் சீர்குலைந்து கிடக்கின்றன. ஆனையிறவு உப்பளத்தின் ஒரு பகுதி சமாதானம் ஏற்பட்ட பின்னர் செய்கை பண்ணப்பட்டு வருகின்றபோதும், பெரும்பாலான உப்பு வாய்க்கால்கள் கைவிடப்பட்டே காணப்படுகின்றன. அமைச்சர் றிசாத் பதியுதீன், தனது கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இந்தத் தொழிற்சாலைகளை சுமார் 08 மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றார். இந்தத் தொழிற்சாலைகளை…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோமராங்கல்ல கிராம மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

சிங்கள வாக்குகளால் மட்டும் அரசமைக்க முடியாது – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியமென்றும் அவர் கூறினார். நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி நுவரெலிய புதிய நகர சபை மண்டபத்தில் நேற்று சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தனியாக முன்னணி…

Read More

 வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!

உள்ளுராட்சி தேர்தல் 2018 வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்! –கலாபூஷணம் எஸ்.எம்.சஹாப்தீன்- நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட – எண்ணிப்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்து முடிந்துவிட்டது. அதன் முடிவுகள் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி, பலரின் சிந்தனையை முடுக்கிவிட்டிருப்பது இன்று ஊரறிந்த உண்மையாகிவிட்டது. உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலை மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அதற்குக் காரணம் இத்தேர்தல் நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருப்பதுதான். தேர்தல்…

Read More

Palestinian UNESCO issue

The A.C.M.C. is disappointed to learn that when the UNESCO brought a resolution at the U.N.O condemning Israel and declaring that the Israel has nothing to do with the Al Aqsa mosque situated in Jerusalem which is the third holiest mosque for the Muslims, our government Surprisingly maintained an unholy neutrality without voting in favor…

Read More

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தே, பலஸ்தீனர்கள் தாக்குகின்றனர் – பான் கி மூன்

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே பலஸ்தீனர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அண்மையில் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தானது தீவிர வாத இஸ்ரேலுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

நேபாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் நேற்று காலை 05.20க்கு குறித்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் இராணுவ வீரர்கள் 44 பேர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர். அத்துடன் குறித்த விமானம் நேற்று இரவே நாடு திரும்புவதாக இருந்த நிலையில்…

Read More