Headlines

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியதாகவும், அதனால் அவர்களுக்கு புற்றுநோய் சார்ந்த நோய்கள் ஏற்பட்டு அவர்கள் உயிரிழப்பதாகவும் வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தெல்கொட ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மெற்கொண்டு அதற்கான நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. இந்நிலையில்  சில அரசியல்வாதிகள் மக்களிடத்தில் போலியான…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனினால் அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் பிரபல தொழிலதிபருமான ஏ.எஸ்.ஏ.பாஸித்தின் பெரும் முயற்சியினால், அக்கரைப்பற்றிலுள்ள 20 விளையாட்டுக் கழகங்களுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலமே இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. அக்ரைப்பற்று பிரதேசத்தின் வரலாற்றில் ஒரே தடவையில் ஆகக்கூடுதலான நிதியை விளையாட்டுக் கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்து தந்த முன்னாள் அமைச்சர்…

Read More

கோத்தபாய நீதிமன்றில் இன்று ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. காலி துறைமுகத்தில் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை இயக்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8…

Read More

அப்துல்லா மஹ்ரூப் எம்.பி யின் முயற்சியால் வீதி புனரமைப்பு

கிண்ணியா பிரதேச செயலகபிரிவில் காக்கமுனை அப்துல் லத்திப் வீதி கொங்ரீட் வீதியாக கிண்ணியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு. முனவ்வர் கான் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் பங்களிப்புடன் 10 இலட்சம் ரூபா நிதியில் புனரமைகபட்டு…

Read More

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…

Read More

நமது வெளியுறவுக் கொள்கை நீதியை அடிப்படையாகக் கொண்டது:ISIS ஐ சாடிய மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமரான நஜீப் ரஷாக் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் எல்லாத் துறையிலும் நீதியைப் பக்க பலமாகக் கொண்டே இருக்கும் என வலியுறுத்தியுள்ளார். இக்காரணத்தினாலே தான் சமீபத்தில் காஸாவுக்குச் சென்றிருந்த நஜீப் ரஷாக் அங்கு இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிப்பது தவிர பாலஸ்தீனத்தின் PLO மற்றும் ஹமாஸ் ஆகிய பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையையும் இணக்கத்தையும் வலியுறுத்தியதையும் முக்கியமாக மேற்கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது. நஜீப் ரஷாக்…

Read More

சில்லறை சலுகைகளுக்கு சிறுபான்மை சமூகம் சோரம் போகாது..!

நமது மண் மனம் திறக்கிறது…   எதிர்வரும் தேர்தல் எதிர்பார்ப்புக்களை வெல்வதற்காக எமக்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சலுகைகளுக்கு சோரம் போகாத சமூகமான தமிழர்களை சில்லறை விலைகளுக்கு வாங்கிட, எமது மண்ணில் சிலர் களமிறங்கியுள்ளனர். காட்டிக்கொடுக்கப்பட்டதால் நாமடைந்த நெருக்குவாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக எமது மண் மீளவில்லை. இவ்வாறு எம்மை நெருக்கும், நெருடும் அதிகார சக்திகளை இன்னும் பலப்படுத்தவே, இந்தச் சிலர் எமது மண்ணில் ஊடுருவியுள்ளனர்.   நமது பலவீனங்களைப் பலப்படுத்தி தமிழர், முஸ்லிம்கள்…

Read More

சிங்கபூரிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது

இலங்கையிலிருந்து சிங்கபூரிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்,அதன் பெறுமதி 53 இலட்சத்து 38 ஆயிரத்து 136 ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

பாரிய மோசடி : மஹிந்தவிடம் நாளை விசாரணை

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை காலை 09.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.vk

Read More

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 29 அமர்வு நேற்று ஆரம்பமாகியது. அந்த அமர்வில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் பாதையில் தொடர்ந்தும் பயணிக்குமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தினால் ஆகஸ்டில் வெளியிடப்படவுள்ள அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. செப்டம்பரில் அறிக்கையை…

Read More

எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது: வெள்ளை மாளிகை

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, பொது மக்கள் மற்றும் நட்பு நாடுகளின் போன்கள், இணைய தளங்களை உளவு பார்த்ததை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார். இதனால் அந்நாட்டிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உளவு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தேடப்படும் குற்றவாளியானார். அமெரிக்காவிடமிருந்து தப்பிக்க வேண்டி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். கடந்த 2013…

Read More

வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கத்திற்கு அடிகல் நாட்டு நிகழ்வு.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது. இந்த நிகழ்விற்ற்கு பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பொதுசன மக்கள் தொடர்பு அதிகாரியுமான முத்து முஹம்மட், மீள்குடியேற்ற செயலணியின் வவுனியா மாவட்ட…

Read More