Headlines

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் கையளிப்பு

ஹிதோகம அ/கலுவில சேன மகா வித்தியாலயத்தில் 2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. 2019.02.01ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இதனை திரை நீக்கம் செய்து வைத்தார். இதற்கான நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொண்டிருந்தார். பாடசாலை அதிபர் தலைமையில் இந்த நிகழ்வில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை…

Read More

எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

புத்தளம் தில்லையடியில் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், கூட்டுறவு பால் விற்பனைய திறப்பு விழாவும் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் எம்பி.க்களான நவவி, இஷாக், வடமேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் குணதாச தெஹிகம, மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாது ஆகியோர் கலந்துகொண்டனர்.  

Read More

அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது!- அவுஸ்திரேலியா

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.இலங்கைக்கு வருகை தந்திருந்த அந்த நாட்டின் குடிவரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் இருந்து தமிழக முகாம்களில் இருந்தும் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் வருகை, அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரம் அல்ல. இலங்கையின் உள்நாட்டிலும் பிரச்சினையை குறைத்துள்ளது என்று டட்டன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் டட்டன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க…

Read More

பாணகமுவ பெரிய பள்ளி மக்தப் கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு நிதியினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு!

மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம். நஸீரின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கடந்த சில வருடங்களாக குருநாகல் மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹரின் வேண்டுகோளுக்கிணங்க பாணகமுவ கிராமத்துக்கான பெரிய பள்ளி மக்தப் கட்டிட கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடத்துக்கு அமைச்சின் நிதியிலிருந்து 20,000,00.00 ரூபாய் நிதியினை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கடந்த…

Read More

ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு!

– சையது அலி பைஜி – எனது இல்லத்தை தொழகுடியர்களுக்காகவும் தவாப் செய்யகுடியவர்களுக்காவும் சுத்தம் செய்யுங்கள் என்ற இறைவனின் ஆணைக்கு இணங்க புனித இல்லத்தின் ஒரு பகுதியாக உள்ள ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு மக்காவில் நடை பெற்றது. மக்காவின் இமாம்களில் ஒருவரும் புனித தலங்களின் பராமரிப்பு குழுவின் தலைவருமான அப்துரஹ்மான் சுதைஸ் தனது கரங்களால் ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவுவதைதான் படம் விளக்குகிறது.

Read More

சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

கல்குடா பிரதேசத்தில் உல்லாசப் பயணிகள் அதிகம் வருகின்ற பிரதேசம் என்பதால் நவீன முறையில் சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகை அலங்கார சங்கத்திற்கு நவீன வசதிகள் கொண்ட அலங்கார பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடல், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம்….

Read More

மரண தண்டனை ஆடையுடன் வந்த முர்ஸி

மரண தண்டனை கைதிக்கான சிவப்பு நிற கைதி உடையுடன் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் முர்சி முகம்கொடுத் திருக்கும் ஐந்து வழக்குகளில் ஒன்றான கட்டார் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவே ஞாயிறன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்ற சிறைக்கூண்டுக்கு அழைத்து வரப்பட்டபோது அங்கு ஆஜர்படுத்தப்பட்டிருந்த ஏனைய பிரதிவாதிகள் முர்சிக்கு ஆதரவாக கோசம் எழுப்பினர். ஏற்கனவே முர்சி மீதான…

Read More

கோப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன….?

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள், கட்சித் தாவல்கள், விமர்சனங்கள் மற்றும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சிகள் போன்றவை நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை எச்சரிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய ‘அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய கோப்புகள் தன்னிடமிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தான் அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை’ எனும் கூற்றானது இந்நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு அதிர்வலைகளையும் கேள்விகளையும் எழச்செய்துள்ளது. இவ்வாறு கோப்புகளைக் காட்டி எச்சரிக்கை…

Read More

வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைப்பு

07.11.2016ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

Read More

‘புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெறுவதற்கு சிறந்த வியூகம்’ – வேட்பாளர் அலி சப்ரி ரஹீம்!

புத்தளம் மாவட்ட சிறுபான்மைச் சமூகம், கடந்த 33 வருடகாலமாக பெற்றுக்கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெறுவதற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து, அதனை இல்லாமல் செய்துவிட வேண்டாம் எனவும் புத்தளம் மாவட்ட தராசு சின்ன முதலாம் இலக்க வேட்பாளர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். புத்தளம், கொத்தான்தீவு கொலணி மற்றும் றஹ்மத் நகர் பிரதேசங்களில் நேற்று இரவு (24) இடம்பெற்ற பிராசரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர்…

Read More

பெரிய ஹஸ்ரத்தின் மறைவு எமக்குப் பேரிடியாக அமைந்து விட்டது – அமைச்சர் றிஷாத்

“பெரிய ஹஸ்ரத்” என எல்லோராலும் அன்பாகவும், உரிமையுடனும் அழைக்கப்படும் காத்தான்குடி அப்துல்லா ஹஸ்ரத்தின் மறைவு, இஸ்லாமிய உலகுக்கு குறிப்பாக, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார் ஆன்மீகப் பணிக்காக இலங்கை வந்த பெரியார் அப்துல்லாஹ் ஹஸ்ரத் காத்தான்குடியில் ஜம்இய்யதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்க முடியாதவை. இலங்கையில் முதன் முதலாக ஹாபிழ்களை உருவாக்கும் குர்ஆன் மனனப்பிரிவை ஆரம்பித்து, பன்னூற்றுக்கணக்கான இஸ்லாமிய…

Read More