Headlines

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தானே இருந்து வந்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தானே பிரதமராகும் நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கட்சியை ஒருங்கிணைப்பதற்காகவும், வெற்றிபெற வைப்பதற்காகவும் பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று அவர்…

Read More

கடைசி அலுவலகத்தையும் மூடுகிறது யாஹூ

மற்ற உலகளாவிய இணைய நிறுவனங்களைப் போலவே யாஹூவும் சீன உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. அலுவலகம் மூடப்படுவதால் யாஹூவின் சீனப் பிரிவில் கிட்டத்தட்ட முந்நூறு பேர் வேலையிழக்கவுள்ளனர். சீனாவில் மின்னஞ்சல் சேவை வழங்குவதை 2013ஆம் ஆண்டே யாஹூ நிறுத்தியிருந்தது. தங்களது செயற்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கை இது என்றும், கூடுதலான ஒத்துழைப்புக்காகவும் புதுமையைப் புகுத்துவதற்காகவும் இது மேற்கொள்ளப்படுகிறது என்றும் யாஹூவின் அறிக்கை கூறுகிறது.

Read More

குடியிருப்பாளர்களுக்கான புதிய வீடுகளுக்கான அடிக்கல்!

அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்தில் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பொருட்டு வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டும் வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. இவ் அடிக்கல்லை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நாட்டி வைத்தார். இவ் வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், ஆர். ராஜாராம், என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பாதை புனரமைப்பு.

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பாதை சீர்கேடுகள் குறித்து அந்த பிரதேச மக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். அமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கையை அடுத்து அவரின் நிதி ஒதுக்கீட்டில் அந்த பிரதேசத்தில் 1கிலோ மீட்டர் நீளமான பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இணைப்பாளர் எம்.ஜே.எம் முஜாஹிர் இந்த வேலையை ஆரம்பித்துவைத்தார்.இந்த நிகழ்வில் மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் நகுசீனும் கலந்துகொண்டார்.

Read More

வெள்ளப்பாதிப்புற்ற பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாட் விஜயம்

மத்துகம, அகலவத்தை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்று முன் (27) பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார். போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ள பலந்தாவ கிராமத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் பத்துரலியவில் வைத்து நிவாரணப் பணியாளர்களிடம் நிதியுதவி வழங்கி வைத்தார். அத்துடன் லக் ஹந்துர விகாராதிபதியிடமும் பாதிக்கப்ட்ட மக்களுக்கான நிதியுதவியை வழங்கினார். அத்துடன் உலர் உணவுப்பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெருமவும் அந்த பிரதேசத்திற்கு…

Read More

றிஷாத் பதியுதீன் நாளை அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கிறார்

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,புதிய அரசாங்கத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியுதீன் நாளை வெள்ளிக்கிழமை(2015.01;.16)  தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு 3 காலி வீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு இந்த வைபவம் இடம் பெறவுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் தெரிவித்தார். முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் இதே பதவியினை வகித்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு…

Read More

பஸ்-முச்சக்கர வண்டி விபத்து! பயணித்த குடும்பம் படுகாயம்!

அப்துல்லாஹ் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்குச் சமீபமாக இன்று (04) வியாழன் மாலை 5 மணியளவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இ.போ.ச. கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸுடன் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த…

Read More

கல்வி அமைச்சு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுகுழு நிலை விவாதத்தில்…. (வீடியோ)

கல்வி அமைச்சு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுகுழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது.

Read More

இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது: இந்திய தூதர் ஒய்.கே.சின்கா

21-ம் நூற்றாண்டில் இந்தியா-இலங்கை உறவு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கொழும்பில் உள்ள பண்டார நாயக்கா சர்வதேச படிப்பகத்தில் நடைபெற்றது. இதில், இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சிறிசேனா அதிபரான பிறகு இந்தியா-இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- சிறிசேனா பதவியேற்ற பிறகு பல்வேறு உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான சுற்றுப் பயணம் இருநாடுகளிடையே நடைபெற்றது. முதலில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு…

Read More

வாகனேரி மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு

17.11.2016 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் காரியாலயத்தில் வாகனேரி மீனவர்களின் பிரச்சினையை தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் கலீல், மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி பரிசோதகர் திரு நெல்சன் மற்றும் மீனவர்களும் கலந்து கொண்டனர். இதன்போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1. எரிக்கப்பட்ட தோனிக்கு பதிலாக புதிய தோனி வழங்குதல். 2. மீனவர்களின் தோனிகளை நிறுத்தி வைக்க தனியான இடத்தினை வழங்குதல். 3. பதிவு…

Read More

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை – வாசுதேவ நாணயக்கார

மக்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை வழங்கியுள்ளதாக தேசிய மொழிகள்  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியிலேயே அரசாங்கம் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுளளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமை, வறட்சி போன்ற காரணிகளை விடவும் பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை கருத்திற்கொண்டே ஊவா மாகாண மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா போன்ற கடும்போக்குவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சிறுபான்மையின மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சி சாதகமான…

Read More