Headlines

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4ம் இலக்க தேயிலை மலையில் நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் இன்று பகல் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

ரணிலை பிரதமராக நியமிப்பேன்- மைத்திரி அதிரடி

நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவேன் என மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆளும்கட்சியின் செயலாளர் ஒருவரை அழைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தலில் வரலாற்று முதன்முறையாக இவ்வாறு அனுமதி வழங்கியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பின்னர் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது….

Read More

மக்கள் காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முசர்ரப் தலைமையில் பொத்துவில் கிளையின் விசேட கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில் கிளையின் விஷேட கூட்டம் 2019-04-07 அன்று மாலை, அதன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர், சட்டத்தரணி முசர்ரப் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம் பெற்றது. நள்ளிரவு வரை தொடர்ந்த கூட்டத்தில், அ.இ.ம.கா பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற, முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் எதிர்வரும் தேர்தல்களை…

Read More

நாட்டுக்கு முன்னுதாரணமாக விஜித ஹேரத்

ஜே.வி.பி.யின் பிரச்சார  செயலாளர் விஜித ஹேரத் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வாகன விபத்து தொடர்பில் விஜித ஹேரத் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜித ஹேரத் மதுபோதையில் வாகனத்தை செலுத்தவில்லை எனவும் அது பரிசோதனைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சி ஒழுக்கமானவர்களை உருவாக்கியுள்ளதாகவும், சில தரப்பினர் இந்த விபத்தின் ஊடாக கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

மாஷா அல்லாஹ்! தொழுகையின் பின் நடிகர் கராத்தே ராஜா

புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நடிகர் கராத்தே ராஜா தொழுகையை நிறைவெற்றிய பின். அல்லாஹ் அக்பர் !! . ( வணக்குத்துக் குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் இறுதித் தூதரும் ஆவார்கள்.அல்லாஹ் மிகப் பெரியவன் ) .

Read More

இங்கிலாந்து ஒப்புதல்: ISIS மீது விமான தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அங்குள்ள எண்ணெய் கிணறு களையும் கைப்பற்றி உள்ளனர். சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சியாளர்கள் கூட்டத்திலும்…

Read More

தலைமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம் திறந்து வைப்பு!

வட மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராமத்திற்கான புதிய பாலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27-05-2018) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 22 மீற்றர் பாலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் 87 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் 16 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் போது விருந்தினர்களான அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார்,…

Read More

வட கொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் வட கொரியாவிற்கு தமது கடுமையான கண்டனத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. வட கொரியா இன்று (22) அதிகாலை  பல கிலோ மீற்றர்கள் சென்று தாக்கக்கூடிய இரண்டு சக்திவாய்ந்த ‘முசுடன்” ரக ஏவுகணைகளை வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் பரிசோதித்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒரு ஏவுகனை 150 கிலோ மீற்றர் தொலைவில் விழுந்து தோல்வியடைந்தள்ளதாகவும், மற்றொரு ஏவுகணை தொடர்பான தெளிவான தகவல் வெளியாகவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த…

Read More

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட வேண்டாம். யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்

-சுஐப் எம்.காசிம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். யாழ் கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தொடர்பாக இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர்…

Read More

நான்கு பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மாத்திரமே இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக பாதுக்க வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவிசாவளை, ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். எனினும் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில் நால்வர் மாத்திரம் இன்னமும் சிகிச்சை…

Read More

“பாகிஸ்தான் புதிய அரசின் உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது” கலாநிதி ஹசன் சொஹைப் முராத்!!!

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு சாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார். லாஹூரிலுள்ள முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM Trust) தலைவராகவும், ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் இருக்கும் இவர், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

பாணந்துறையில் சூறாவளி; 30 வீடுகள் சேதம்

பெய்யும் அடைமழை காரணமாக பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More