Headlines

வாக்குகளை மையமாக கொண்டு மக்கள் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை… அம்பாறை முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் றிஷாட்.

சுஐப்.எம்.காசிம்.   வாக்குகளை எதிர்பார்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் மக்களின் நலனை மையமாக வைத்தே  தமது கட்சி பணிபுரிந்து வருவதாகவும் அக்கட்சியின் தலைவர்- அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெளிவு படக்கூறினார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில்  தேர்தல் தொகுதிகளின் கட்சியின் முக்கியஸ்தர்கள் , ஆதரவாளர்களுடனான சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கலந்துகொண்டு  உரையாற்றினார் கட்சியின் தவிசாளர் ,பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட…

Read More

350 பேருக்கு சமாதான நீதவான் பதவிகள்

நாட்டில் சமுக சேவையில் ஆர்வம் காட்டி வரும் 350 பேருக்கு சமாதான நீதவான் பதவகள்வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான  உத்தியோகபூர்வ வைபவம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இம்மாதம் 31ம் திகதி புத்தசாசன அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.  சமாதான நீதவான் பதவி மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்படும் கௌரவ பதவியாகும்.

Read More

ACMC, அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று மதியம் (25-07-2015)சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் பத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்…

Read More

தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அவமரியாதை தந்ததாக புகார்

தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்ட பாராளுமன்ற கூட்டத்தின்போது, கிம் யாங் ஜின் மோசமான நிலையில் உட்கார்ந்திருந்து, நாட்டின் தலைவருக்கு அவமரியாதை தந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பாக அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது

Read More

கப்பல் மூழ்கியதில் 24 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மூழ்கியதால்  குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இக்கப்பல் மூழ்கியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படைக் கப்பல்களின் உதவியுடன் சுழியோடிகள் 06 பேரை காப்பாற்றியுள்ளனர். இதன்போது, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை. இக்கப்பலில் சுமார் 40 பேர் இருந்துள்ளதுடன், இவர்களில் அதிகளவான சிறுவர்கள் இருந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது

Read More

நீரோடையில் முதலை மடக்கிப்பிடிப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீரோடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பொதுமக்களால் நேற்று இரவு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலையை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை காத்தான்குடியில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர். மேற்படி  முதலை தொடர்பில் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி என்.சுரேஷ்குமாரிடம் வினவிய போது, காத்தான்குடியில் நேற்று இரவு பிடிக்கப்பட்ட 3அடி சிறிய முதலை மட்டக்களப்பு வாவியில் இருந்து…

Read More

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள்!

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள், எதிர்வரும் புதிய நாடாளுமன்றின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களுக்கு அமைய இம்முறை தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த காலங்களில் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத மற்றும் நாடாளுமன்றத் தேர்தலி;ல் போட்டியிடாதவர்கள் தேசியப்…

Read More

இலங்கையில் இ-மோட்டர் சேவை

உலகில் பெரும்பாலான நாடுகளில் செயற்படுத்தப்படும் இ-மோட்டர் முறையை தற்போது இலங்கையிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் வீட்டில் இருந்தவாறே வாகன அனுமதிபத்திரத்தினை தொலைபேசியின் மூலம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளும் முறையே இ-மோட்டர் ஆகும். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களத்தின் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

தம்பிடிய, கெகுணகொல்ல கிராமத்தில் குழாய் கிணறு குடிநீர் திட்டம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

WAMY நிறுவனத்தின் Global Construction நிறுவன உதவியுடன் குளியாப்பிடிய பிரதேச சபைக்குட்பட்ட தம்பிடிய, கெகுணகொல்ல கிராமத்துக்கு குழாய் கிணறு மூலம் குடிநீர் திட்டம், நேற்று முன்தினம் (09) Global Construction நிறுவன முக்கியஸ்தர்களுடன் இணைந்து, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான எம்.என்.நஸீர் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவதுடன், எதிர்காலத்தில் ஒவ்வொரு வீடுகளுக்குமான நீர் வழங்கள் திட்டத்தை பல்வேறு நிறுவனங்களின் உதவிகளுடன் செய்துதர எதிர்பார்ப்பதாக முன்னாள்…

Read More

கடலில் தொலைத்த திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்ற தம்பதி

ஸ்பெய்னைச் சேர்ந்த ஒரு தம்பதி கடலில் தொலைத்த தமது திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளது. அகஸ்டின் அலியகா என்பவரும் அவரின் மனைவி குவானி சான்செஸும் 1979 பெப்ரவரி 17 ஆம் திகதி திருமணம் செய்திருந்தனர். இத்திருமணத்துக்கு சில மாதங்களின் பின்னர் கடலில் நீந்திக்கொண்டிருந்த போது, அகஸ்டின் அலியகா அணிந்திருந்த மோதிரம் கடலில் வீழ்ந்தது. தேடுதல் நடத்திய போதிலும் அம்மோதிரத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இநநிலையில், கடந்த மாதம் பெனிடோர் நகரில் கரையோரத்தில் சுழியோட்ட…

Read More

மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்..?

மெரிக்க நாடு உருவானதிலிருந்து அது பீதிவயப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவில் புகுந்த மக்கள் ஐரோப்பியர்கள் அங்குள்ள செவ்விந்தியர்களைப் படுகொலை செய்தார்கள். அந்த மக்களைக் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தினார்கள். குறைந்த அளவே கூலி கொடுத்தார்கள். அந்த மக்களைச் சுரண்டி, சுட்டுக் கொன்று அச்சுறுத்தித்தான் அங்கே தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள். தங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்டினாலும் ஒரு பெரும் பீதியுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காரணம் அந்த அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் எப்போதும்…

Read More