Headlines

கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ்

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் கொழும்பு வடக்கு ரோயல் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது….

Read More

இலங்கையின் பணிகளுக்கு பான் கீ மூன் வரவேற்பு

அமைதிக்காப்பு படை நடவடிக்கைகளில் இலங்கையின் பங்கு குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பை வெளியிட்டுள்ளார். லண்டனில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதிக்காப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மூன் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய நாடுகளின் அமைதிக்காப்பு பணிகளில், பங்களாதேஸ்,பாகிஸ்தான்,இந்தியா,இலங்கை, சீனா ஆகிய நாடுகளின் பங்களிப்பு பெறுமதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி!!!

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் மாகாண சபை தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடைபெறும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்பாளர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று இரவு 918.02.2019) மீராவோடை அந் நூர்…

Read More

சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் தர நிர்ணயமானது – தென்னகோன்

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – சதொச மற்றும் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் உரிய முறையில் தர நிர்ணயத்துக்குட்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனத்தினை பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்வதிலிலுந்து அதனை பாதுகாத்துக் கொள்வது அரச அதிகாரி என்ற வகையில் தமது பொறுப்பு என்றும் கூறினார். அண்மையில் மின்னேரிய பிரதேச அரிசி ஆலையில் மீள் சுத்திகரிப்புக்கு என கொண்டுவரப்பட்டிருந்து ஒரு தொகை அரிசியினை பொது சுகாதார பரிசோதகர்கள்…

Read More

“சம்மாந்துறை கல்வி வரலாற்றில் மற்றுமொரு சாதனை” – இஸ்மாயில் எம்.பி!

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் நமது பாடசாலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். 1975 ஆம் ஆண்டு முதன்முதலாக நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றதுடன் அடுத்த ஆண்டு ஒரே வகுப்பில் கல்வி கற்ற ஒரு மாணவனைத் தவிர இருபத்தி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று வரலாற்று சாதனையை நிலைனாட்டியுள்ளனர். அன்று முதல் தொடர்ச்சியாக ஒவ்வொருவருடமும் நமது…

Read More

குளியாப்பிடியாவில் 3 கைக்குண்டு மீட்பு.!

குளியாப்பிடிய – ஹேட்டிபொல வீதியின் எபலதெனிய விகாரை சந்தியில் இன்று காலை 3 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குளியாபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு நீதவானின் அறிவுரையின் கீழ் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

– K.Kapila – இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய  வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் (12) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மு.கா பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா GS, மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலிக்கு ஆதரவு..!

மட்டக்களப்பு மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, ஓட்டமாவடியில் (04) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ஹனீபா GS, அமீர் அலியின் வெற்றிக்கு ஆதரவு வழங்கும் முகமாக, சஜித் பிரேமதாஸவின் மேடையில் கைகோர்த்தார். இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், விஷேட அதிதியாக தேசிய ஐக்கிய முன்னனியின்…

Read More

ஜனாதிபதிக்கு மனு- ரோஹிங்கியா பரிதவிப்புகள்

ஜனாதிபதி மைத்திரி அவர்களே; அவர்களே என ஆரம்பிப்பதால் இது கடிதமென்று நீங்கள் எண்ணுதல் கூடாது இது ஒரு தேசத்தின் கண்ணீர் பிரதமர் அவர்களும் கவனிக்க வேண்டுகிறேன் இதுவானது ஓர் இனத்தின் வரலாற்று சோகம் தேசபிதாக்களே நீங்கள் மனித நேயத்தை மடியில் சுமந்து வந்திருப்பதாய் அடிக்கடி நான் சந்தோசிப்பேன் ஆறாயிரம் ரூபாவிற்குள் பதவியேற்றது எனது முதல் மகிழ்ச்சியானது முதலில் நான் உங்களை நம்பவில்லை நம்பும்படியாக முந்திய நிலைவரம் இருக்கவில்லை பிறகு பிறகு நம்பிக்கை பிறந்தது தலைவர்களுக்கு குறைவாயிருக்கிற நேயமானது…

Read More

இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன்-4 ஆயுள் முடிகிறதா?

அமெரிக்காவின் இணைய எண்களுக்கான பதிவகம் (ஏ.ஆர்.ஐ.என்.) இனி புதிய ஐ.பி. பதிவதற்கு எண்களே இல்லை எனக் கதறுகின்றனர். இன்டர்நெட்டுடன் இயங்கும் ஒவ்வொரு சாதனத்துக்கும், ஒரு தனிப்பட்ட வரிசை எண் தேவை. அதன் செயல்பாடு வாகனங்களுக்கு கொடுக்கப்படும் உரிம எண்ணைப் போல, ஒரளவுக்குத்தான் இதற்கான வரிசை எண்கள் உள்ளன. ‘இன்னும் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில், எங்கள் பதிவதற்கான எண்களே இல்லாமல் போகப்போகிறது’, என எ.ஆர்.ஐ.என்.னின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் தெரிவித்துள்ளார். 1990-ல் உருவாக்கப்பட்ட இணைய நெறிமுறைப் பதிப்பு…

Read More

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 27ம் திகதி பாரியமோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல் மோசடி விசாரணைப்பிரிவின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்இடம்பெறும் விசாரணை ஒன்றிற்காக இவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இவர்அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாவலப்பிட்டி புகையிரத திணைக்களத்தின் நிலமொன்றை அளுத்கமகே கட்டளைகள்நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாகவே இவரிடம் விசாரணைகள்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த விசாரணைகளுக்காக எதிர்வரும் 27ம் திகதி காலை பத்துமணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளா் யார்? (சிறப்பு நேர்காணல்)

(நேர்காணல் – எம்.ரீ.எம்.பாரிஸ்) ஓட்டமாவடி பிரதேச சபையின்  43வது சபை அமர்வு கடந்த ஓக்டோபர் 30.2014ந்திகதி நடை பெற இருத்த நிலையில் சபை உறுப்பினர்களால் பகிஷ்கரிக்கப்பட்டது இது தொடர்பிலும் அடுத்த தவிசாளர் யார்? என்ற கேள்விக்கு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்தார் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர்களால் பல்வேறு  குற்றங்கள் சுமர்தப்பட்ட இந்நிலையில் தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரோரனையினை கொண்டு வருவதன் மூலம் தவிசாளரை மாற்றி புதிய தவிசாளர்…

Read More