Headlines

கற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சூரங்கல் வட்டார வேட்பாளர் ஐவ்பரை ஆதரித்து கற்குழிப்பிரதேசத்தில் நேற்று மாலை (28) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில்  இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஊர்ப்பிரமுகர்கள், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றனர்.

Read More

அல்காயிதா வீடியோவை வெளியிட்ட இஸ்ரேலிய உளவுப் பிரிவு…!

அல்காயிதா, இந்தியாவில் கிளையை துவக்கவிருப்பதாக கூறப்படும் வீடியோவை  வெளியிட்டுள்ள இணையதளம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாதால் நிர்வகிக்கப்படும் நுண்ணறிவு பிரிவாகும்.ஸெர்ச் ஃபார் இண்டர்நேசனல் டெரரிஸ்ட் எண்டிடீஸ் என்பதன் சுருக்கமே ஸைட் ஆகும்.இந்த இணையதளத்தின் தலைவரான ரீத்தா காட்ஸும், ஜோஷ் ஸெவனும் 2002-ஆம் ஆண்டு வரை இஸ்ரேல் துவக்கிய ஒரு உளவு அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களாவர்.அதற்கு முன்பு காட்ஸ், இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பணம் வாங்கிக்கொண்டு ‘ரகசிய தகவல்களை’ அளிப்பதற்காக இருவரும் இணைந்து 2008-ஆம் ஆண்டு இணையதளத்தை துவக்கினர்….

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு நோபல் பரிசு?

மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆலோசனை இடம்பெற்று வருகின்றதென அமைச்சர் ஜோன் அமரதுங்க தகவல் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கருத்தொருமைப்பட்டு தேசிய அரசு அமைக்கப்பட்டு நாட்டின் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் எமக்கு இதுவரை காலமும்…

Read More

உதவிகளை வழங்க உலக முஸ்லிம் லீக் இணக்கம்

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு செய்யும் சேவை­களைப் பாராட்­டிய உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அப்­துல்லா பின் முஹ்சின் அல்­துர்க்கி உலமா சபையின் சேவை­க­ளுக்கு முடி­யு­மான உத­வி­களை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தார். இலங்­கையில் நடை­பெற்ற உலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு வருகை தந்­தி­ருந்த உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் அல்­துர்க்கி கொழும்­பி­லுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு விஜயம் செய்தார். அவரை…

Read More

ACJU நிந்தவூர் கிளை – தாஹிர் எம்.பி சந்திப்பு!

நிந்தவூர் பிரதேச அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா சபையினருக்கும், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் எம்.பிக்குமிடைடையிலான சந்திப்பொன்று, (26) மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, உலமா சபையினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தஃவா பணியினை பாராட்டி பேசியிருந்த பாராளுமன்ற உறுப்பினர், ஊரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது மற்றும் போதை மருந்து பாவனையை தடுப்பது குறித்தும் உலமாக்களுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்ததுடன், எதிர்காலத்தில் உலமாக்களின் ஒத்துழைப்புக்களையும் வேண்டியிருந்தார். இந்நிகழ்வில், கட்சியின்…

Read More

பங்களாதேஷிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார். குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன. இந்த  விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” சர்வதேச கூட்டுறவு தின விழாவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற 96 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவில் சிறப்பு அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர்…

Read More

உதயசிறி விடுதலையானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு…

Read More

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கலாம்: ஆட்பதிவு ஆணையாளர்

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார். புதிதாக அடையாள அட்டை பெற 10,000 பேரே விண்ணப்பித்துள்ளனர். இதில் 9,000 பேருக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விட்டன. ஏனையவை…

Read More

களனிவெளி பாதையில் ரயில் தடம்புரண்டது

களனிவெளி பாதையில், அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயில், கொஸ்கம-மிரிஸ்வத்த எனுமிடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளது. பெட்டியொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என்றும் இதனால் 20-30 சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டியை, தண்டவாளத்தில் நிறுத்தும் வரையிலும் அப்பாதையின் ஊடாக ரயில்சேவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அக்கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

Read More

றிஷாத்துடன் இறுதிவரை இருப்பேன் – அமீன்

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நாட்டு முஸ்லிம்களின் அவசியமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களும் அவருடனே உள்ளனர் என  அமீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் விலகவுள்ளதாக வெளியான தகவல் தவறானது. அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் நான் இறுதிவரை இருப்பேன். முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பாரிய பங்காற்றிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நமது கடமையாகும். யாழ்பாண மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை…

Read More