கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் ரிஷாட் உயர்மட்ட வர்த்தகர்களின் கூட்டத்திலும் பங்கேற்பு
இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளை (24.10.2017) கட்டார் நாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்துகொள்கின்றார். இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், முதலீடு, உல்லாசத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை மேம்படுத்தல் மற்றும் இன்னோரன்ன விடயங்களை நோக்காகக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த தூதுக்குழுவின விஜயத்தின் போது, வர்த்தக மேம்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை –…
