Headlines

மஹிந்த சூழ்ச்சிகள் மூலமே தோற்கடிக்கப்பட்டாராம்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கை நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட தினம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொம்பே உடுபில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது  உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கம் மகிந்த மீது கொண்டுள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.நல்லாட்சி அரசாங்கம் மகிந்தவை அரசியலிலிருந்து ஒரம் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம்…

Read More

“இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்” – கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி!

இலங்கையில் பிறந்து, வளர்ந்த  ஒருவரின் உடல் இந்த நாட்டுக்கே உரமாக வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மரணித்த உடலுக்கான  இறுதிக் கடமைகளை அதன் உறவினர்கள் விரும்புகின்றவாறே நிறைவேற்றுவது, அவர்களது அடிப்படை உரிமை ஆகும். ஆனால், தற்போது கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கின்ற உடலங்களை எரித்தேயாக வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இந்நிலையில், மரணிக்கின்ற தங்களது உறவுகளின் உடலங்களை ‌எரிக்காமல்,…

Read More

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயார்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பாக அறிவுறுத்தலுடன்,துஸ்பிரயோகங்களின் போது சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முறைகள் தொடர்பான நடவடிக்கைகயை அறிமுகப்படுத்தல் என்பனவே இந்த கொள்கைகள் தயாரித்ததன் நோக்கம் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் தற்போது தேசிய மற்றும், மாகாண சபை மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவளை சிறுவர் பாதுகாப்பு…

Read More

திருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்….

Read More

குளவித் தாக்குதல்: 10 பேர் பாதிப்பு

– க.கிஷாந்தன் – லிந்துலை  – பேரம் தோட்டத்தில் 10 தோட்ட தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்  இன்மையால் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பாதிக்கப்பட்டோர் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறு இன்ற உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கோட்டை நீதவான் திலினி கமகேயினால் பிறப்பிக்கப்பட்டது.அல் – குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டேலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார உட்பட பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகள்…

Read More

தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்துக்கார அங்குரார்ப்பண நிகழ்வு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (27) வியாழக் கிழமை தம்பலகம பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது. குறித்த கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நட்டு வைத்தார். சுமார் 90 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமையப்பெறவுள்ளது இதன் போது வைத்தியசாலையின் வளாகத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள மேலும் ஒரு சிறுவர் பூங்காவினையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து…

Read More

மக்களோடு மக்களாக மகிழ்ச்சியில் திழைக்கும் சவுதி மன்னர் சல்மான்! (வீடியோ இணைப்பு )

சையது அலி பைஜி சவுதி தலை நகர் ரியாத்தின் திரையா பகுதியில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட சவுதி மன்னர் சல்மான் தனது நாட்டு மக்களோடு மகிழ்ச்சியாக அரேபிய நடனமாடும் காட்சியை தான் காட்சி விளக்குகிறது மக்களோடு மக்களாக கலந்து பழகும் ஆட்சியாளராகவும் அவர்களின் மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும் தனது பங்களிப்பை செலுத் விரும்பும் மன்னராகவும் சவுதி மன்னர் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிட தக்க விசயமாகும் மன்னர் நடனம் ஆடுகிறாரே நடனத்திர்கும் இஸ்லாத்திர்கும் என்ன சம்மந்தம்…

Read More

ஒபாமாவின் மனைவியை கவிதையால் நெகிழவைத்த தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப் பெண்ணுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. சிறுவர், சிறுமியர் இடையே கவிதை இயற்றும் ஆற்றலை ஊக்குவிக்க அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்தல் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நேற்று நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சியில் பலர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்தனர். சென்னையில் இருந்து சென்று அமெரிக்காவில்…

Read More

சகோதரர் ரிசாத் பதியுதீனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள சோதரனே ரிசாத் பதியுதீன்….அஸ்ஸலாமு அலைக்கும்! குலத்தின் கோமகனாய் ,வம்சத்தின் முதல் மகனாய், தங்கள் வாழ்வைச் செழித்தோங்கச் செய்யும் தலைமகனாய் நீ பிறந்த போது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி ஆனந்தப்பட்டவர்கள் உன் பெற்றோர். உனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் உள்ளம் பூரித்துக் கிடந்தவர்கள் அவர்கள். பாலப்பருவம் அடைந்த போது பள்ளிக்கூடம் சென்றாய். தவறுகள் நீ செய்து ஆசிரியர்கள் கண்டதில்லை. நீ பொய் பேசிச் சக மாணவர்கள் கேட்டதில்லை. கற்பிக்கும் ஆசிரியருக்கே கை நீட்டிய ‘மக்குபூல்களின்’ மத்தியில் நீ ஆசிரியர்களை மதிக்கின்ற…

Read More

அம்பாறை மாவட்டத்தில் வீடுகளற்ற 1900 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூவினங்களையும் சார்ந்த மக்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் ‘திரிசவிய’ 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் வீடமைப்புக் கடன்களும் வீட்டுரிமைப்பபத்திரங்கள் அமைச்சர் சஜித்தினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு அம்பாறையில் உள்ள தயா அப்ரல் கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாணசபையின் உறுப்பிணர் தயா கமகே தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச…

Read More

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார். ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ்…

Read More