Headlines

மக்கள் காங்கிரஸின் உடப்பு வட்டார நிர்வாகக் குழுக் கூட்டம்!

நான்கு கிராமங்களை உள்ளடக்கிய உடப்பு வட்டாரத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, பெரும்பான்மையான தழிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஊடகப்பிரிவு-

Read More

விமலின் கடவுச்சீட்டு மீள வழங்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை! மஹிந்தவுக்கு மைத்திரி அதிரடி அறிவிப்பு

சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் பின்வருமாறு உள்ளன! “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக கூறும் செய்தியொன்றை அண்மையில் ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. உங்களுக்கு அவ்வாறான எதிர்பார்ப்பு இருக்குமாயின் அது தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய சில…

Read More

3-வது தளபதியும் கைது

துருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று புரட்சி நடத்தினர். அப்போது அதிபர் எர்டோகன் ஏஜியன் சுற்றுலா தளத்தில் தங்கியிருந்தார். அவரது வேண்டுகோளின்படி களம் இறங்கிய பொதுமக்கள் ராணுவ புரட்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான் புல் நகரங்களில் சுற்றிய பீரங்கி வாகனங்களை சிறை பிடித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடந்தது. அதில் புரட்சியில்…

Read More

மக்கள் காங்கிரஸின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் கடந்த திங்கட்கிழமை (01) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. அந்தவகையில், பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபையின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான சுபஹானை ஆதரித்து கரகஸ்கட பிரதேசத்தில் கூட்டம் நடைபெற்றது. இதேவேளை, கரகஸ்கட வட்டாரத்தின் வேட்பாளரான அக்ரம் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தின்போது, மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது….

Read More

மட்டக்களப்பில் 18,000 குடும்பங்கள் போசனை மட்டத்தினை எட்டவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18,000 குடும்பங்கள் ஏறக்குறைய 10 வீதமான குடும்பங்கள் போசனை மட்டத்தினை அடையாதவர்களாகக் காணப்படுகிறார்கள் அவர்களை அந்த நிலையிலிருந்து உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வியாழக்கிழமை (21) தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தரத்தினை உயர்த்துவது தொடர்பான கருத்தரங்கில் தலைமையேற்று உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கருத்தரங்கில்…

Read More

வவுனியாவில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் (வயது 13) என்ற சிறுவன் 25ஆம் திகதி பாடசாலைக்கு சென்று இதுவரை வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் குறித்த சிறுவன் பாடசாலை சென்று கல்வி கற்க மாட்டேன் எனவும் தான் வேலைக்கு செல்லப் போவதாவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த  சிறுவன் தொடர்பில் தகவல்…

Read More

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, சுற்றலா போகாதீர்கள்..!

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஒரு சிலர் சுற்றுலாக்களை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் நபர்களினால் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரநாயக்க பகுதிக்கு பலர் வெறுமனே ஒர் சுற்றலா செல்வதனைப் போன்று சென்று வருவதாகவும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் எடுத்துச் செல்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நிவாரணங்களை வழங்குவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் வாக்மூலம் பதிவு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

திஸ்ஸ பிணையில் விடுதலை

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒப்பந்நதம் மேற்கொள்ளப்பட்டாதாக போலியான ஆவணங்களை காண்பித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Read More

மொங்கோலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட மம்மி துறவி இன்னமும் தியான நிலையில்?

கடந்த வாரம் கண்டுபிடிக்கப் பட்ட மொங்கோலியாவில் கோயில் ஒன்றில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருந்த துறவி போன்ற வடிவத்திலுள்ள மம்மி இறக்கவில்லை எனவும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான வருடங்களாக இன்னமும் தியான உணர்விலேயே இருப்பதாகவும் மூத்த பௌத்தத் துறவிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மம்மி துறவி சடலமானது கால்நடைகளின் தோலினால் போர்க்கப் பட்டும் பத்மாசனத்தில் உட்காந்திருப்பது போன்ற நிலையிலும் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. ஏற்கனவே இத்துறவி மம்மி ஒரு மர்ம நபரால் கருப்புச் சந்தையில் விற்கப்படுவதற்காகத்…

Read More