Headlines

யார் இந்த கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!

யார் இந்த  கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது முழு இலங்கையையும் கலக்கியது . உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள் பெண்களுக்கு தொல்லை செய்ததுடன் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களிலும் ஈடுபட்டனர் . அத்துடன் நின்று விடாது கூரிய ஆயுதங்களினால் பெண்களின் அங்கங்களை வெட்டி விட்டும் தப்பி சென்றனர் பெண்களை பாலியல் வல்லுறவும் புரிந்தனர் நாடே கொதித்து…

Read More

இலங்கையின் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் மறைவு

இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று மாலை காலமானார். பெரிய ஹஸ்ரத் என காத்தான்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் தென் இந்தியாவின் காயல் மாநகரம் அருகே அமைந்திருக்கும் அதிராம் பட்டிணத்தில் பிறந்தாலும் அவர்களது வாழ்வின் பெரும் பகுதியை காத்தான்குடியில் கழித்துள்ளார். காத்தான்குடி மண்ணில் பல்துறை சார் அறிஞர்களை உருவாக்குவதில் முன்மாதிரி மிக்க பங்களிப்பொன்றை வழங்கியிருந்தார்.. பிறந்த மண், குடும்பம், உறவுகள் அனைத்தையும் துறந்து…

Read More

‘ஒன்றுபட்டு வாக்களித்து ஊரின் தலைமையை உறுதிப்படுத்துங்கள்’ – பொத்துவிலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை ஆதரித்து, பொத்துவிலில், இன்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “சமூக நலனுக்காகவும்…

Read More

மஹிந்த ரெஜிமன்ட் முஸ்லிம்களை தாக்குகிறார்கள்

– அஸ்ரப் ஏ சமத் – பாராளுமன்றத்தில் ஊடக அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட விவாத்தின்போது பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க உரையாற்றும்போது பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சில ராஜபக்ச ரெஜிமன்ட் உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்துள்ளனா். கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் பாராளுமன்றதுக்கு வெளியில் வைத்து முஸ்லீம்களை எல்லாம் அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு தற்பொழுது அந்த சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள். இதனை நாம்…

Read More

 ‘சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வோம்’

-வி.நிரோஷினி – கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதுபோல, மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான சர்வதேச விசாரணையை முழுமையாக இல்லாமல் செய்ய தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

தென்னாபிரிக்க நாட்டவர் கைது

தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. காலாவதியான கடவு சீட்டுடன் தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

மைத்திரிபால மற்றும் றிஷாத் பதியுதீன் குழுவினர் நாளை கல்முனைக்கு விஜயம்

எஸ்.அஸ்ரப்கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் அழைப்பை ஏற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ஆகியோர் கல்முனைக்கு நாளை திங்கட்கிழமை (29) காலை 8 மணிக்கு வருகை தரவுள்ளதாக வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அவரது விஜயத்தின்போது, கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும் மக்கள் சந்திப்பிலும் துஆ பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளும் மைத்திரிபால சிறிசேன…

Read More

மக்கள் காங்கிரஸை தனித்து போட்டியிடுமாறு சஜித் கூறியதாக குருட்டு ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன’ – புத்தளத்தில் ரிஷாட்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாம் அமைத்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடுமாறு, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சில குருட்டு ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பரப்பி வருவதாகவும், இது அப்பட்டமான பொய்யாகும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.   இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் அகதிமக்கள் மத்தியில், இன்று மாலை (22) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   “சஜித் பிரேமதாச என்னைச் சந்தித்தபோது, அகில…

Read More

சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர்கள் 24 பேருக்கு அழைப்பாணை

கூரகல பள்ளிவாசலை தகர்த்து அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நோக்கோடு அத்துமீறிய சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 பேருக்கு பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்து கூரகலயில் வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்டமை தொடர்பில்  கல்தோட்டை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான்  சுனில் ஜயசேனவிடம் முன்வைத்த அறிக்கைக்கு அமைவாகவே எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் ஆஜராக அக்மீமன தயாரத்ன…

Read More

க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாழ்த்து

க.பொ.த. சா/தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, சித்தியடைந்து தாம் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும் மற்றும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

Read More

“புத்தளத்து வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கும் வடக்கு முஸ்லிம்கள், இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற பங்களிக்க வேண்டும்”

புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகம் இழந்து தவிக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை, மீளப்பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளையும் முயற்சிகளையும் இதயசுத்தியுடன் மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு முஸ்லிம்கள், இந்தப் பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தம்மாலான முழுப்பங்களிப்பையும் நல்க வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார். புத்தளத்தில் 90 ஏக்கர், 25 ஏக்கர் மற்றும் ஸலாமத்புரம் ஆகியவற்றில் வாழும் வடக்கு முஸ்லிம்களை நேற்று மாலை (22)…

Read More