Headlines

பாதயாத்திரையின் இரண்டாம் நாள் ஆரம்பமானது!

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது. “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இதேவேளை, வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக…

Read More

சோபித தேரர் – முஸ்லிம் காங்கிரஸ்; பேசத்தயார்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிறைவேற்று முறைமையினை எதிர்க்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் கோட்டை நாக  விகாரையின் நகராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் களமிறங்கியுள்ளார். சோபித தேரர் அழைப்பு விடுத்தால் பேசத்தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு…

Read More

ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் பெருமானாரையும் குர்ஆனையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞான சார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் அண்மையில் அவர் நடாத்திய ஊடக மாநாட்டில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில் ஏசியுள்ளதையும் தமது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ள அமைச்சர் ரிஷாட், அதற்கான ஆதாரமாக ஊடகவியலாளர் மாநாட்டில் தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கள்…

Read More

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது!

-ஊடகப்பிரிவு- உரிமைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்று கூறி பாராளுமன்றம் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் இந்த மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சரின் இணைப்பு செயலாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லா இப்படிப்பட்டவர்களினால் மன்னார் நகர சபைக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது என்றும் கூறினார். மன்னார் நகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சி சார்பில் பெற்றா மற்றும் பெரியக்கடை வேட்பாளராக…

Read More

முசலி வேப்பங்குள வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேசபை உறுப்பினருமான எஸ்.எம்.பைரூஸின் முயற்சியினால், முசலி, வேப்பங்குளம் கிராமத்தின் உள்ளக வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது. (ஐ)      

Read More

சேனக டி சில்வா ஐ.தே.கவுடன் இணைவு

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேனக டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியதுடன், 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இவர்கள் இருவரும் கடந்த அரசாங்கத்தினால் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது. சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியுடன்…

Read More

உள்ளூராட்சி தேர்தல் 2025; அம்பாறையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த தலைவர் ரிஷாட்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச…

Read More

இன்று முதல் இலவச அஞ்சல் வசதி

தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட முத்திரை இலவச அஞ்சல் வசதி மீண்டும் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டி.எம்.பி.ஆர். அபயரத்ன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2015.06.26ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச்செய்யப்பட்டிருந்தது. அதன்படி சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் கடிதம் அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரையை பாவித்து கடிதம் அனுப்பும் வரப்பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு…

Read More

ஜனாதிபதியால் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

இன்று 01.02.2017 களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

கொழும்பு பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு பூட்டு

கொழும்பு – 7 இல் அமைந்துள்ள எஸ்.ரி பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என அந்தப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Read More

உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க குரல் கொடுப்போம்!

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உழைக்கும் மக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். அந்த வகையில் மலையக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தமிழ் முற்போக்கு கூட்டணி துணிந்து குரல் கொடுக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தமது செய்தியில், மலையக மக்களின்…

Read More

இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு, நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது – மஹிந்த

இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வடக்கு, தெற்கு – தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ்…

Read More