Headlines

சிகரெட்டால் ஏற்படும் உடல்நல கேடுகளை இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும் விளைவிக்கும்: அதிர்ச்சி தகவல்

புகைப்பழக்கத்தை குறைக்க பயன்படுவதாக கூறி விற்கப்படும் இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிகரெட் ஏற்படுத்தும் அதே உடல்நல கேடுகளை விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் தொராசிக் சொசைட்டியின் சார்பாக அலபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியல் சல்லிவன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இ-சிகரெட்டில் உள்ள எரிக்கும் இயந்திரம், அதன் வெளியிடும் பகுதி மற்றும் அதில் பயன்படுத்தப்படும் நீராவி வடிவிலான நிகோடின் ஆகியவை சேர்ந்து, சாதாரண சிகரெட்கள் ஏற்படுத்தும் அதே அளவிலான உடல் நல கேடுகளை விளைவிக்கும்…

Read More

மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு மூதூர் ஆலிம் நகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது. குறித்த தெரிவானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் (03) இடம் பெற்றது. மத்திய குழு உறுப்பினர்கள் இதன் போது ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள். பிரதேச அபிவிருத்தி உட்பட கல்வி, கலாசாரம் போன்ற பல…

Read More

திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வேட்புமனுவை இன்று காலை  (14)  கிண்ணியாவிலுள்ள, மக்கள் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில், மக்கள்  காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் இறுதி செய்தனர்.

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இது புதுசு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் ( சுத்தப்படுத்தும் உபகரணம்) அகற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. நீரை பாவிப்பதன் காரணமாக விமான நிலையத்தில் உள்ள மலசலகூடம் எந்தநேரமும் ஈரமான நிலையில் காணப்பட்டது. அதனால், சிங்கபூரில் நடைமுறையில் உள்ளதைபோல டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சுத்தப்படுத்தும் முறை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தும் இலங்கையர்கள், இந்த புதிய நடைமுறை காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்….

Read More

தண்ணீர் போத்தலில் கரப்பான் பூச்சி

தண்ணீர் போத்தலில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் சுன்னாகம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய குடிநீர்ப் போத்தலை சுன்னாகம் நகரிலுள்ள மருந்தகமொன்றில் நேற்று கொள்வனவு செய்திருந்தார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர்ப் போத்தலிற்குள் இறந்த கரப்பான் பூச்சி ஒன்று காணப்பட்டமை அதிர்ச்சியையும், கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவரான 33 வயதுடைய…

Read More

யோசித்தவின் பயிற்சிக்கு 210 இலட்சம் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார். ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த…

Read More

அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆராய்வு! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அனுராதபுர மாவட்டத் தலைவருமான A.R.M.தாரிக் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (05), அவரது இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் எவ்வாறு கட்சியின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் முன்னெடுப்புக்கள் எவ்வாறு…

Read More

ஜனாதிபதித் தேர்தல் 2015: வேட்புமனுக்கள் இன்று ஏற்பு!

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2014) இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்புமனுக்கள் இன்று காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் செயலகம் பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வந்தது. இதற்கிணங்க 19…

Read More

மே தின கூட்டத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவில்லை

மே தின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்க சம்மேளன மே தின கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில்

கல்குடாவில் அமைக்கப்படும் எதனோல் தொழிற்சாலையில் பிரதேச வாசிகளுக்கே தொழில் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட புத்தி ஜீவிகள் சிலர் தெரிவித்திருந்தனர். ஆனால் அங்கு கடமையாற்றுவதற்கு இந்தியாவில் இருந்து ஊழியர் வந்திருப்பது கவலைக்குரிய விடயம் என கிராமிய பொருளாதார அலுவல் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு…

Read More

இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு (படங்கள்)

ஊடகப் பிரிவு இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில்(EDB) இன்று 02/03/2015 நடைபெற்றது இதில் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், பொருளாதார விடயங்கள் அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன் வட மாகான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறார்களுக்கான கல்வி போன்றவைகளையும் அமைச்சர் விளக்கினார்.இதில் EDB தலைவர்.மற்றும் வர்த்தக பிரிவு தலைவரும் கலந்து கொண்டனர்..

Read More

ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்ப்பது, மடத்தனமான செயல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ஆசைபட்டால் ஜனாதிபதியும் அதே வரிசையில் அமர நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்க்க நினைப்பது இந்த நல்லாட்சி அரசின் மடத்தனமான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முசலி விவகாரத்தினால் எழுந்துள்ள முரண்பாடு தொடர்பில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார். இது…

Read More