Headlines

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

“தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுடன் கடந்து வந்த தொலை தூர அரசியல் பயணத்தில் முதன் முதலாக இளைஞர்களான உங்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள், ஆதங்கங்கள் அனைத்திற்கும் பதிலளிக்கின்ற ஒரு திறந்த கேள்வி பதில் நிகழ்ச்சி மீறாவோடை அமீர் அலி கேட்போர்…

Read More

தெஹிவளை சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் வெளியாகியது

தெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று (16) காலை 10 மணிக்கு தெஹி­வளை பொலி­ஸா­ருக்குச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்றை அடுத்தே குறித்த வர்த்­தகர், அவ­ரது மனைவி, அவர்­க­ளது மகள் மற்றும் அவர்­களின் உறவுக்காரர் ஒரு­வரின் மகள் ஆகியோரே இவ்­வாறு உயிரிழந்த நிலையில்…

Read More

மூனின் கவனத்தை ஈர்க்க, யாழ்ப்பாண முஸ்லிம்களும் முயற்சி

இலங்கைக்கு இன்று (31) வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பானகீ மூனின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாழ்பாண முஸ்லிம்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்ற வேளை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஈடுபடவுள்ளார்கள். தமது பாரம்பரிய தாயகத்தில் மீள்குடியேற்றம், இதில் ஐ.நா. தலையிட வேண்டும், புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான தமக்கு தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அதிகாரிகள் மேற்கொள்ளும் அநீதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Read More

ஜேர்மனிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக் கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்த போதே, அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணம் உள்ளிட்ட பல்வேறு…

Read More

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லையாம் ; கைவிரித்த சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய விளக்கம் இன்னமும் நாடாளுமன்றத்துக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

மாநகர சபை உறுப்பினர் றஹ்மான் அ.இ. ம.கா.வில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் எந்த வித நிபந்தனைகளும் இன்றி உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (27-07-2015)நல்லிரவு 12.30 மணிக்கு றஹ்மானின் இல்லத்திற்கு வருகை தந்த போதே றஹ்மான் இணைந்து கொண்டார்.அமைச்சர் றிஷாட் பதியுதீன்; இஸட்.ஏ.எச்.றஹ்மானுக்கு மாலை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார். இவருடன் முன்னூற்றுக்கும் மேற்பட்ட அவரது…

Read More

அப்பாவி மக்கள் புதையுண்டு போக, தப்பிக்க முயலும் அரசாங்கம்….!

பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக குறித்த தோட்ட நிர்வாகத்துக்கு கடந்த 2011ஆம் ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் அப்பிரதேசதத்தில் இருந்து மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துமாறு கூறியிருந்ததாக பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார். பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் புதன்கிழமை(29) பாரிய மண்சரிவு ஏற்றப்பட்டுள்ளது. இந்த மணிசரிவில் சிக்கி பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. குறித்த…

Read More

புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு

தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாகஇலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச் சீட்டுகளை வழங்கவும், மற்றைய இயந்திரம் பயணிகள் தாமாகவே பணத்தினைசெலுத்தி அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்….

Read More

முசலி ;பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

மன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெளி பாடசாலையின் அதிபர் ஹபீப் முஹ்பு உவைஸ் தலைமையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட் நேற்றுமாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார். பாடசாலை அதிபர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் அமைச்சர் எங்கள் பாடசாலைக்கு அதிகமான உதவிகளை செய்து உள்ளார் என்றும் இன்னும் எங்கள் பாடசாலை பல தேவைகளை உடைய பாடசாலையாக இருக்கின்றது…

Read More

நாட்டில் ‘எயிட்ஸ்’ அதிகரிப்பு!

ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார மற்றும் நலனிருப்பு தொடர்பில் இளைஞர்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் காரணமாக அமைகின்றன. அத்துடன், அதிக வயதுடைய பெண்கள்,…

Read More