Headlines

ஹோமாகமயில் பிக்குமார் “காட்டு தர்பார்” – புத்திஜீவிகள் கடும் கண்டனம்

ஹோமாகம நீதிமன்ற அருகில் பிக்குமார் கலகம் புரிந்து சட்டத்தை அவமதித்ததைக் கண்டித்து சட்டத்துறை அறிஞர்கள், புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பொதுவில் இந்தச் செயற்பாடு பௌத்த பிக்குமார்கள் அனைவருக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் ஒரு விடயமாகி விட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கொழும்பு முன்னாள் பிரதம மஜிஸ்ரேட்டும், நீதிச்சேவை அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பிரதம செயலாளருமான ஜீ.டீ. குலதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் சட்டத்தை நீதிமன்றம் அமுலாக்கும் போது அதற்கு தடை ஏற்படுத்தி ஆஜராகும்…

Read More

மகி நூடில்ஸ் மீதான தடையை நீக்கியது மும்பை உயர் நீதிமன்றம்

மகி நூடில்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மகி நூடில்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம் இருந்ததாகக் கூறி, மத்திய உணவு தர பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து இருந்தது. அதனையடுத்து இந்தியாவில் மகி நூடில்ஸ் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தத் தடையை எதிர்த்து மகி நூடில்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் வழக்குத் தொடர்ந்து இருந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மகி மீதான தடையை…

Read More

வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக்கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வேண்டும் பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு வடக்குக் கிழக்கில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை, அவ்விரண்டு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள், குழுமங்களின்…

Read More

சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு

சம்மாந்துறை கல்லரிச்சல் (தென்னம்பிள்ளை) பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பெண்கள் கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் கௌரவ S. சுபைதீன் ஹாஜியார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களின் தொழில் முயற்சி தொடர்பாக கலாநிதி S.M.M இஸ்மாயில் கருத்துதெரிவிக்கையில். “எதிர்காலத்தில் கைத்தொழில் பேட்டையின் வருகையை தொடர்ந்து இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பலதரப்பட்ட…

Read More

வடமாகாண ஆளுநராக, றெஜினோல்ட் குரே

வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், புதிய வடமாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரே என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கெஹெலிய ரம்புக்வெல ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல  வாக்கு மூலம் வழங்குவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகம் ஒன்றில் கட்டணம் செலுத்தாது விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

தாடி வைத்ததால் வேலையை இழந்து நிற்கும் முஸ்லிம் ஊழியர்

கொல்கத்தாவில் தாடி வைத்திருப்பதற்காக முஸ்லீம் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அதுனிக் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸின் சுரஙகப் பிரிவின் ஜெனரல் மேனேஜர்(பொது மேலாளர்) ஆக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றியவர் முகமது இஸ்மாயில். அவர் கடந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செய்துவிட்டு மே மாதம் தாடியுடன் நாடு திரும்பினார். அதன் பிறகு அவரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை பாதி சம்பளத்தை பெற்று பணியாற்றியுள்ளார் இஸ்மாயில்….

Read More

தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான், புனர்நிர்மாணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்  ரிஷாத் பதியுதீனின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரினால், தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான் , பிரதேச வாசிகளது வேண்டுகோளிற்கிணங்க , புனர்நிர்மாணம் செய்யப்பட்டு , செவ்வாய்க்கிழமை (26) மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பேருவளை பிரதேச சபை…

Read More

பதூரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் முதன்மை வேட்பாளர் அமீர் அலிக்கு ஆதரவு!

மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலிக்கு, பதுரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. கழகத் தலைவர் சாஜஹான் ஏகமனதாக இந்த அறிவிப்பை விடுத்தார். அத்துடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமது கழகம் பூரணமான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்கள் பங்கேற்று உரையாற்றியதுடன்,  பிரதேச சபை உறுப்பினர் நெளபர், செயலாளர்…

Read More

வில்பத்து தொடர்பில் – பிரதமர்

அஸ்ரப் ஏ சமத் இன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஜ.தே.கட்சியின் தலைமைக் காரியலயமான ‘சிறிகொத்தவில்’ ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவரிடம் என்னால் எழுப்பட்ட கேள்வி – கௌரவ பிரதம மந்திரி அவர்களே – வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியர்த்தும் விடயத்தில் நீங்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றீர்கள் ? வில்பத்து விடயத்தினை ஒரு இன பிரச்சினையாக சிலர் முன்னெடுக்கின்றனரே ? பிரதமர் ரணில் பதில் – இல்லை இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதனை கையாளுகின்றனர். அவரே…

Read More

ஆந்திராவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு நேற்று மட்டும் இவ்விரு மாநிலங்களில் 165 பலியானதாக தெரியவந்துள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 72 பேர் பலியாகினர். ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 93 அதிகரித்துள்ளது. நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கிடைத்த தகவலின்படி, இரு மாநிலங்களிலும் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ தொட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது….

Read More

புலிகளைப் போன்று பொதுபல சேனாவும் தனி இராச்சியமொன்றை நிர்வாகம் செய்து வருகின்றது –ரிஷாட் பதியூதீன்

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே பொதுபல சேனா இயக்கமும் தனி இராச்சியமொன்றை நிர்வாகம் செய்து வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.  ஏதெனும் ஓர் இடத்தில் எந்த நேரத்திலாவாது போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ நடத்தும் பொதுபல சேனா எவரின் கேள்விக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக சென்று விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  நாட்டில் சிறுபான்மை இன மக்களினால் எதிர்நோக்கப்பட்டு வரும் நெருக்கடிகள் குறித்து விசாரணை நடாத்த ஓர் விசாரணை…

Read More