மீண்டும் சடலமாக சிறுத்தை மீட்பு!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (8) காலை சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.
வாகனேரி பகுதியில் சில அரசியல்வாதிகள் பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்கின்றனர்!!!
வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்வது என்பது கவலைக்குரிய விடயமாகும் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயத்தில் ஏற்பட்ட பாதீட்டின் காரணமாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் விநாயகர் ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…
புதிய ஐநா மனித ஆணையாளருடன் கலந்துரையாட இலங்கை தயார்: கெஹெலிய
ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக வந்துள்ள இளவரசர் ஸெய்த் அல் ஹுசைனுடன் இலங்கை விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என புதிய ஆணையாளர் தெரிவித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்தி பற்றி கருத்து கேட்கையில் அமைச்சர் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். ஐநாவின் மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதை…
இலங்கை பொருளாதார மாநாடு 2016
இலங்கை பொருளாதார மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பொருளாதார மாநாட்டில் சர்வதேச மட்டத்திலான முதலீட்டாளர்கள், பொருளியல் துறையில் நோபல் பரிசு வென்ற கலாநிதி ஜோசப் ஸ்டீல்கிலிட்ஸ் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலய நாடுகளிடையேயான அபிவிருத்தி, போட்டித்தன்மை மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள்…
புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்புக்கு எதிராக குரல் கொடுப்போர் யார்?
புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பிற்கு எதிராக குரல் கொடுப்போர் பற்றி அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரியுள்ளது. புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கோரிக்கை விடுத்துள்ளார். புகையிலை பொருள் அடங்கிய உற்பத்திகளுக்கான வரியை 90 வீதமாக உயர்த்துமாறு சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிவுறுத்தல் இதுவரையில்…
கட்டாரில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்
கட்டார் டோஹாவில் இடம்பெற்ற கட்டார்-இலங்கை வர்த்தக முதலீட்டு சம்மேளன உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் மற்றும் கட்டார் நாட்டின் முக்கிய அரச தலைவர்கள் பங்கேற்றனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் பலஇடங்களில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகைகள்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கத்தினையும் மௌலவி முபாறக் நிகழ்த்தினர். இதில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதேசமயம் சாய்ந்தமருது கடற்கரை முன்றலில் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் இலங்கை தௌஹீத் ஜமாஅத்…
எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!
மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு வீடமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (05) எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதித் தவிசாளர் இஸ்ஸதீன், பிரதேச சபை உறுப்பினர் மஹீசா உட்பட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ஐ)
பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை இன்று கைச்சாத்து
பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது. அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் இன்றைய தினம் இதில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி, உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன. இந்த…
“தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்களுக்கு, இனிமேல் பொலிஸ் பதிவு கட்டாயம்”
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றுவோர் மற்றும் குடியிருப்பவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற…
கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை
இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் புல்மோட்டை கனியவள கூட்டுதாபனத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி நாட்டுக்கும்,பிரதேசத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் செயலுருவம் வழங்கவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டைக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்ததன் பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை…
