Headlines

அஸ்ஸலாமு அலைக்கும். சென்ற மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடக்க வில்லை. இது சம்பந்தமாக உங்களிடம் கதைக்குமாறு இன்று தெரிவித்தார்

சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரமணிய சாமி தமது கருத்துக்களை அறிக்கையாக சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் தாமும் சில கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணிய சாமி, 18ம் திகதிக்குள் கருத்துக்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்….

Read More

துப்புரவு பணியாளர்களின் தேவைகள் பற்றி றிஷாத் கேட்டறிந்தார்

வெல்லம்பிட்டிய, மெகொட கொலொன்னாவ, புத்கமுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்கள், வெள்ளம் வடிந்து வருவதனால் தமது வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்கு கொலொன்னாவ பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமாவின் தலைமையின் கீழ் இயங்கும் நிவாரண இணைப்புப் பணியகத் தொண்டர்கள் மற்றும் சமூக நல அமைப்புக்களும் உதவி வருகின்றன. அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்தப் பிரதேசங்களுக்கு பலதடவை சென்று, பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணங்களையும், பாவனைக்குத் தேவையான பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார். நேற்று…

Read More

பதினெட்டு வருடம் பட்டை தீட்டப்பட்ட கூரிய ஆயுதமே ரிஷாட் பதியுதீன்! — ஷிபான் BM

பெருந்தலைவர் அஷ்ரப் விட்டுச் சென்ற இடைவெளியை பூர்த்தி செய்ய ஒரு தலைவன் வருவானா? என ஏங்கிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சகல இன மக்களாலும் பட்டை தீட்டப்பட்டு கூராக்கப்பட்ட ஆயுதமே அமைச்சர் றிசாட் பதியுதீன்! இரண்டாயிரத்துக்குப் பின்னரான இந்த பதினெட்டு வருடகாலத்தில் கழுத்தறுப்புக்கள் , காய்வெட்டுக்கள் அத்தனையும் கடந்து இன்று இந்த சமூகத்தின் ஒட்டு மொத்த பாரத்தையும் சுமக்கத்தயாரான, சுமக்கின்ற நிலையில் உள்ள ஆலவிருட்சமே றிசாட் பதியுதீன்! வில்பத்து விவகாரம், பொது பலசேனா விவகாரம், நீதிமன்ற விவகாரம்,சக்தி…

Read More

அவசரமாக கூடிய மு.கா. (படங்கள் இணைப்பு)

சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கட்சி மாறி பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சியடைந்த முகா இன்று அவசரமாக கூடியது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சு அலுவலகத்திலேயே இந்த அவசர ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஒன்று கூடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கட்சி மாறிய மைத்திரியின் ஊடுகவியலாளர் மாநாடும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதனை அடுத்து தமது ஒன்று கூடலை சற்று தாமதப்படுத்திய முகா தரப்பினர் – மைத்திரியின்…

Read More

ஆஸி ஊடக செய்திக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – ஜனாதிபதி

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றால் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தியுள்ளார். மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற் குழுவின் உறுப்பினர் ஒருவரால், அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று மேற்கோற்காட்டி செய்தி வௌியிட்டிருந்தது. இந்நிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லை என, மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இன்னும்,…

Read More

எனக்கு கிடைக்கவிருந்த மேலுமொரு பிரதியமைச்சை, TNA தடுத்தது – அப்துல்லா மஹரூப் வேதனை

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை  கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.  தோப்பூரில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்தி திட்டங்களை திறந்து…

Read More

ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் அவரது 40 வருட கலை வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (27) தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கலாநிதி யூசுப் கே மரைக்கார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அறிமுகவுரையை கலைவாதி கலீலும் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபாவும்…

Read More

வாகன விபத்தில் 06 வயது சிறுமி பலி

முச்சக்கர வண்டி விபத்தில் ஆறு வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். பழைய காலி வீதி மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று எதிர் திசைக்கு திரும்பும் போது முச்சக்கர வண்டியில் இருந்து சிறுமி வெளியே விழுந்துள்ளார். இதன் போது முச்சக்கர வண்டி சிறுமியின் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார்…

Read More

இலங்கையுடனான உறவை பலப்படுத்த சீனா முயற்சி

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாக சீன விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு ஸென்மின் இவ்வாறு விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா மற்றும் ஜப்பானுக்கான விஜயங்களை மேற்கொண்ட நாடு திரும்பியுள்ள நிலையில், சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லியு ஏற்கனவே பல தடவைகள் இலங்கைக்கு…

Read More

மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடதிறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் சரீபுதீன் தலைமையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட  நிறுவனத்தின் அதிகாரி நுஹ்மான், மாகாணசபை உறுப்பினர் ரிப்கான்…

Read More

துபாயில் சம்பளம் கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திய இந்திய என்ஜினீயரின் சோகம்

ஐதராபாத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஒருவர் தான் வேலைப்பார்த்த நிறுவனம் சம்பள பணத்தை கொடுக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணச்சிக்கலில் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார். ஐதராபத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காதீர் (வயது 30) என்பவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலைப்பார்த்து வருகிறார். அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644). ஆனால் கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் வாங்கினார். அதன்பின் அந்த நிறுவனம்…

Read More

இஸ்ரேல் – டிரம்ப் கூட்டு சதி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜெரூசலத்தை இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக அங்கீகரிப்பதாக குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கடந்த ஞாயிறன்று டிரம்ப் டவரில் இருக்கும் தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்த டிரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். நெதன்யாகு ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். “3000 ஆண்டுகளுக்கு மேலாக ஜெரூசலம் யூத மக்களின் தலைநகர் என்பதை டிரம்ப் அறிந்தே உள்ளார்….

Read More