Headlines

கற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சூரங்கல் வட்டார வேட்பாளர் ஐவ்பரை ஆதரித்து கற்குழிப்பிரதேசத்தில் நேற்று மாலை (28) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில்  இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஊர்ப்பிரமுகர்கள், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றனர்.

Read More

கெசினோவுக்கு விரைவில் தடை!

கெசினோ விளையாட்டில் உள்ளுர்வாசிகள் பங்கேற்பது தடைசெய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கெசினோ சூது விளையாட்டுக்களில் வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கெசினோ காரணமாக இலங்கையில் பாரிய கலாசார சீரழிவுகள் ஏற்பட்டுள்ளமையை பல்வேறு மதக்குருமாரும் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

ஐ.எஸ். படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு

ஐ.எஸ் இன் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகர்களின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது, ஐ.எஸ். இக்கு எதிராக ஒவ்வொரு நாடும் பங்களிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, அதையொட்டிய முடிவு எட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, “ஈராக் நகரங்களில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான அமைப்பு,…

Read More

ஞானசாரர் தலைமையில் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எழுக தமிழ்” பேரணிக்குக் கண்டனம் தெரிவித்தும் அதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில், வவுனியா, மாமடு பிரதேசத்தில், இன்று வௌ்ளிக்கிழமை (30) காலை, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, “ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு” என்ற பெயரில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில், சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பது…

Read More

நொச்சிக்குளம் முஸ்லிம் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில்

மன்னார் நொச்சிக்குளம் முஸ்லிம் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில்பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்கலந்து கொண்டார்.  

Read More

மலாலாவை சுட்டவர் கைது

பாகிஸ்தானை சேர்ந்தவர் பள்ளி மாணவி மலாலா கைபர் பக்துங்வா மாகாணத்தில் வசித்து வந்த இவர் தலீபான்களின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.இதன் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் திகதி பள்ளிக்கூட பேருந்தில் மலாலா பயணம் செய்த போது தலீபான்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், லண்டனில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இந்த சம்பவத்தின் மூலம் அவர் உலகமெங்கும் பிரபலம் ஆனார். தற்போது…

Read More

எனது வெற்றிக்கு பாரிய பங்களித்த முஸ்லிம்களுக்கு நன்றி – ரணில் (படங்கள்)

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். நேற்று (25) இந்த வைபவம் இடம்பெற்றிருந்தது. பிரதமரின் வெற்றியை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கும், நாட்டின் நலனுக்காகவும் இதன்போது விசேட பிரார்த்தனை (துஆ) நடத்தப்பட்டது. இந்த பிரார்த்தனை வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர், தனது வெற்றிக்கு பாரிய பங்களித்த கொழும்பு முஸ்லிம்களுக்கு தனது நன்றியறிதல்களையும் தெரிவித்துக் கொண்டார். வைபவத்தில் பிரதமருடன் கொழும்பிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார்,…

Read More

ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி

-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி நேற்று (திங்கள் கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம் பெற்றது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்…

Read More

அல்-ஹிக்மா முன்பள்ளி விளையாட்டு விழா – பிரதம அதிதியாக தாஹிர் எம்.பி பங்கேற்பு!

நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கிவரும் அல் – ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, பாடசாலை வளாகத்தில் (04) இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களையும், விடுகை பெற்று செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களையும் வழங்கிவைத்தார். இதன்போது,…

Read More

யாழ்.முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள் – அமைச்சர் றிஷாத்

யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யபட்ட முஸ்லிம்கள், தமது தாயகமான அப்பிரதேசத்தில் மீள்குடியேற ஆவலுடன் காத்திருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- “யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள். இருந்தபோதும் அங்கு காணிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. 1990 ஆம் ஆண்டு ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று 2 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். இந்த 25 வருட அகதி வாழ்க்கையானது குடும்ப அங்கத்தவர்களை அதிகரிக்கச் செய்துள்ளது. “இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற…

Read More

கணவன் மனைவிக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொரளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த கணவனும் மனைவியும் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தபாய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு யோசனைகள் கிடைத்தன. எனினும், நான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளேன். ஆனால், எதிர்வரும் காலங்களில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு என்னை நான் அர்ப்பணிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More