‘அடிமட்டக் களத் தேவைகள் பற்றிய மேலும் தகவல் பெறுவதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள், இலங்கையிலுள்ள 11 மாவட்டங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து, விரைந்த கூட்டு கணிப்பீடுகளை ஒழுங்கு செய்திருக்கின்றன’ என ஐ.நா விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்ரீபன் துஜாரி, ‘கூட்டு மூலவள இணைப்பு முயற்சிகளில், உள்நாட்டு ஐ.நா ஒத்திசைவு மற்றும் உதவி நிறுவனங்களைப் பலப்படுத்த மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகமும் (OCHA) உதவிசெய்தது’ என்றார். …