Headlines

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி நாதன் காலமானார்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் சிங்கப்பூரின் நீண்ட நாள் ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமை உடையவர். 92 வயதான அவர் கடந்த ஜூலை 31ம் திகதி பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், ஜனாதிபதி டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு…

Read More

இரகசியத் தடுப்பு முகாம்கள்; ஜெனிவாவில் தீவிர ஆராய்வு

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேசபைக்கு சார்பாக இடம் பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டுகாணாமற்போனோர் விவகாரம் தொடர்பாக நடந்த சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளன.இதில் கலந்துகொண்டகாணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, தனது கணவரை தேடித்தறுமாரு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை…

Read More

வர்த்தகர் ஷியாம் வழக்கின் தீர்ப்பு இன்று

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. 2013 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2013 மே மாதம் 23ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொஹமட் பவுஸ்டீன் முத்தலீப். கம்மத…

Read More

ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறித்த பிரதேசங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதோடு, நிலச்சரிவு ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த சில…

Read More

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் தொடர்பில் – ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்குள் கடந்த சில வருடங்களாக முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மனநிலையுடன் முஸ்லிம் மக்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இலக்காக கொண்டு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தானத்திற்குள் முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாதத்தை பரப்பி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி…

Read More

‘கல்முனை பிரச்சினை; தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல’ – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

“கல்முனை பிரச்சினை என்பது தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல. தமிழ் தரப்பு மக்கள், அரசியல்வாதிகளுக்கும் இதன் உண்மை நிலையை உணர்த்துவதற்கு அதிகாரத்திலிருந்தவர்கள் முயற்சிக்கவில்லை. அதனால்தான் தேர்தல்கால பிரச்சாரத்திற்காக இதனை எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். கல்முனையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்று உரையாற்றிய வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறியதாவது, “கல்முனை விடயத்தில் பூரணமாக அறிவில்லாத போது, அதுசார்ந்த வரலாறு தெரிந்தவர்களுடன் கலந்தாலோசித்து, ஆகக்குறைந்த அறிவுடனாவது குறித்த விடயத்தில், அதிகாரத்தில் இருந்த…

Read More

நாட்டில் 5 வருடங்களில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம் – கூறுகிறார் பீரிஸ்

(அண்மையில் அலுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு உயிர்செதமும் பாரிய அளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ) நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாளாந்தம் ஒவ்வொரு வன்முறைகள் நடைபெற்று வந்த நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உலகின் எந்தவொரு பகுதியிலும் இல்லாத வகையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் முடிவடைந்துள்ள…

Read More

புத்தளம் மாவட்டத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன

இர்ஷாத் றஹ்மத்துல்லா தற்போது பெய்துவரும் மழையினை அடுத்து புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், கருவலகஸ்வௌ, நவகத்தேகம மற்றும் முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினையடுத்து தாள் நிலப்பகுதிகளே அதிகமான இந்த பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பு அதிகாரி கேர்ணல் பத்மசிறி தலுவத்த கூறினார். அதே வேளை புத்தளம் மாவட்டத்தில் நவகத்தேகம…

Read More

‘தீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்’

‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   ‘வில்பத்து’ வனவள பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட இவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரி, சூழல்…

Read More

6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி பலி!

கொழும்பு – கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 17 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பாராளுமன்ற ஆசன வரிசைகளில் மாற்றம்; திஸ்ஸவுக்கு முன்வரிசை

பாராளு மன்றம் நேற்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி ஆசன வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மாத்திரமே நேற்று சபைக்கு வந்திருந்தனர். இந்த ஆசன ஒதுக்கீடுகளுக்கு அமைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரின் ஆசனங்கள் மாறியிருந்தமையை அவதானிக்கக்கூடியதாக…

Read More

அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களே

சமூகத்தினை காட்டிக்கொடுத்து அதன் மூலம் அற்ப சொற்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களே என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,தலைமன்னார் மக்களின் வீடமைப்பு திட்டத்தை நடை முறைபடுத்த முற்பட்ட போது அதனை பாதுகாப்பு தரப்பாரிடம் பிழையாக தகவல் கொடுத்தவர்கள் இங்கு இருப்பதாகவும் கூறினார். தலைமன்னாருக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் வேட்பாளர் எஹியான் ஆகியோருக்கு இப்பிரதேச மக்கள் மாபெரும் வரவேற்பினை அளித்தனர்….

Read More