Headlines

யோசித்தவின் மனு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்காக தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சீ.எஸ்.என் தொலை காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பாக யோசித்தவின் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே,மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த இந்த மனுவை அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். யோசித்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி…

Read More

சிசு மூச்சு திணறி உயிரிழப்பு – தலவாக்கலையில் சம்பவம்

தாய் ஒருவர் தனது இரண்டரை மாத ஆண் சிசுவுக்கு கொடுத்த பால் சிசுவின் மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதனால்  சிசு மூச்சு திணறி உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை சவூத் தோட்டத்தில்  இடம்பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸ் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி வீ. சுந்தர் ராஜ் தெரிவித்தார். வட்டகொடை சவூத் தோட்டத்தில் வசிக்கும் சசிக்குமார் ரிதிக்சன் என்ற ஆன் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வின் தாய். வீ. முருகாந்தினி இவர் உயிரிழந்த…

Read More

நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் அப்துல் மஜீத்!

அப்துல் மஜீது என்ற சகோதரரின் ஆட்டோவில் ஒருவர் தம்முடைய கைப்பையை தவறவிட்டு சென்று விட்டார். கைப்பையை கண்ட அப்துல் மஜீது அதை பிரித்து பார்த்த போது இரண்டு பவுன் தங்க நகையும், ஒரு டேப், ஒரு செல்போன், ஆதார் மற்றும் குடும்ப அட்டை இருந்துள்ளது. அப்படியே கொண்டு சென்று சந்திரயான் காவல்நிலைய ஆய்வாளர் ராமாராவ் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை வரவழைத்து பொருட்களை ஒப்படைத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ராமாராவ் அப்துல் மஜீது அவர்களுக்கு ரூ.1000 அன்பளிப்பாக…

Read More

ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு!

ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் இல்லத்தில் நேற்று (03) இடம்பெற்றது. பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள்  தொடர்பில் இதன்போது  கலந்தாலோசிக்கப்பட்டது. பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

Read More

முஹைதீன்நகர் கிராம மக்களுடனான சந்திப்பு

முஹைதீன்நகர் கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார்

Read More

கடன் பளுவில் தத்தளிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

23வருடங்களுக்கு முன்னர் விதை உருளைக்கிழங்கை கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும்  உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73பேருக்கு  நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வியாபாரிகளுக்கு உறுதியளித்தார். ஊவா மாகாணத்தைச் சேர்ந்த  உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து உருளைக்கிழங்கு உற்பத்தியால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து விபரித்தனர். கெபட்டிபொல  உடபலாத்த பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில்;…

Read More

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

(நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77) * அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60) * அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு…

Read More

அல் அமான் அறபிக் கல்லூரிக்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

கிண்ணியா ஏழுபுளியடி கிராமத்தில் உள்ள அல் அமான் அறபிக் கல்லூரியின் சுற்றுமதில் நிர்மாணிப்புக்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (05) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணி ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இச் சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான…

Read More

பஸ் சேவை விஸ்தரிப்பு; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

– எம்.எம்.ஜபீர் – கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் சேவைகள் இன்று(8)தொடக்கம் சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் இச்சேவையானது சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது. அதன் காரணமாக 15ஆம் கிராமம், அன்னமலை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் காரணமாக…

Read More

60 இலட்சம் வாக்குகளுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் படையணி இன்று ஆரம்பிக்கப்படுகிறது

ஐக்கிய தேசிய கட்சியினால் 4 இலட்சத்து 25 ஆயிரம் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களை கொண்ட தேர்தல் படையணியொன்று இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கமைய ஐ.தே.க. வின் நாடளாவிய ரீதியிலுள்ள 12000 வாக்களிப்பு நிலைய அமைப்பாளர் இன்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ஒன்று கூடவுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தகவலளிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்கள் மாநாடு இன்று 3 மணிக்கு கட்சியின் தேசிய தலைவர்…

Read More

“இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு” நூலின் பிரதி, பிரதமரிடம் கையளிப்பு!

மறைந்த கல்விமான் எம்.எம்.எம். மஹ்ரூப் அவர்களினால் எழுதப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர்,  பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் தொகுக்கப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட  “Exploring Srilankan Muslims ” இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு என்ற நூலின் பிரதி, நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில், பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை அரச…

Read More