Headlines

“நீதிமன்றில் தெரிவிக்க வேண்டியவைகளை ஊடகங்களில் மாத்திரம் பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பது ஏன்? “ – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று (20) பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட், எனது சகோதரருக்கு கடந்த வருடம் ஆறு உள்வரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருக்கிறார். அந்த குற்றச்சாட்டின்…

Read More

“சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய, இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப்!

சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கக்கூடிய, நில அளவை, காணி அபகரிப்பு போன்ற எமது உரிமைகளுக்காக போராடக்கூடிய ஒரு பிரதிநிதியை, இந்த மண்ணுக்கு தெரிவுசெய்ய வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார். தோப்பூர் – ஆஸாத் நகர் பகுதியில், நேற்று (20)மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியதும் தமிழ், முஸ்லிம்கள்…

Read More

‘பதவிகளை விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரம் என்னிடம் இல்லை’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கடந்த 15 வருடங்களாக மேற்கொண்ட ஹலாலான முயற்சிகளுக்கும், ரமழான் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டு செயற்பாடுகளுக்கும் உபகாரமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முண்ணணி கூட்டணியை இறைவன் பரிசளித்துள்ளதாக, மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். நேற்று (20) காத்தாண்குடி, பீச் வே ஹோட்டலில் இடம்பெற்ற  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முண்ணணி புரிந்துணர்வு கூட்டத்தில் உரையாற்றிய போதே,…

Read More

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

பொத்துவில்லில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காது, திடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, காணிகளை அளவீடு செய்வதும், அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்று, மக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு…

Read More

‘சிறுபான்மையின மக்களை புறக்கணித்துள்ள செயலணி, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல’ – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப்!

தொல்பொருளைப் பாதுகாக்க ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதன் மூலம், தேர்தல் காலத்தில் சிறுபான்மையின மக்களைப் புறக்கணித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான  அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர்  மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசாங்கம் மூவின மக்களையும் புறக்கணித்து,  ஜனாதிபதி செயலணியை உருவாக்கி, தேர்தல் காலத்தில் செயற்படுவது அவசியமானதா? அத்தோடு சிறுபான்மை மக்களை புறக்கணித்து இவர்கள் செயற்படுகின்றார்கள். அரசாங்கத்தினால் …

Read More

அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனி அவர்களுக்கு தேசிய அரசியலில் பங்களிப்புச் செய்யும் தகமையுள்ளதா?

முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் செயற்பாட்டாளர் ஒருவரின் கருத்து? அக்கரைப்பற்று மண்ணின் மைந்தன் அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனி மூத்த உலமாக்களில் ஒருவராக, ஆசிரியராக, மதீனா சர்வதேச பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக, வர்த்தகராக, பதிவு செய்யப்பட்ட அரச ஒப்பந்தக்காரராக, சமூக சேவையாளராக பல்வேறு பரிமாணங்களை அடைந்து அதனால் அல்லாஹ்வின் உதவியினால் அம்பாறை மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனத் தலைவராக 2005ல் தெரிவு செய்யப்பட்டு சிவில் சமூக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்பட்டார். இத்தகைய இவரது பின்புலம், அறிவு, அனுபவம் என்பன…

Read More

‘கல்குடாவின் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது, நீண்ட பரம்பரைக்கு கால்கோளாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும்’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கல்குடாவின் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது நீண்ட பரம்பரைக்கு கால்கோளாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும் எனவும் இதற்காக கடந்த பொதுத்தேர்தலை விட இரட்டிப்பு மடங்கு செய்றபடவேண்டும் எனவும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பிணர்களுடனான கலந்துரையாடல் நேற்று 20.06.2020 இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது “கடந்த வருடம் சஹ்ரானுடைய குண்டு வெடிப்பின்…

Read More

‘52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விளக்கம்’ – முன்னள் அமைச்சர் ரிஷாட்!

“சதொச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் கொள்ளளவானது, 52 நாள் அரசாங்க காலத்தின்போது குறைந்திருந்தமை தொடர்பில், எனது வேண்டுகோளின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே, நேற்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விளக்கமளித்தேன்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஊடகவியலாளரிடம் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “2018 டிசம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், எனது அமைச்சின் கீழான…

Read More

“இலக்கு நோக்கிய பயணத்திற்கு இடப்பெயர்வு படிப்பினையாக அமையட்டும்” – உலக அகதிகள் தினத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

சர்வதேச இடம்பெயர்ந்த தினத்தில், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புதிய நம்பிக்கையினை இட்டுச் செல்லும் செயற்பாடுகளின்பால் எமது பார்வை செலுத்தப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய நாள் என்பது இடப்பெயர்வுகளை சந்தித்த ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மறக்க முடியாத தினமாக பதியப்பட்டுவிட்டது என்பது யதார்த்தமாகும். பழையதை மறக்காமல் நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, எதிர்காலத்தினை அடைவாகக்கொண்டு செயற்படும் இலக்கு நோக்கிய பயணத்திற்கு மிகவும் முக்கியமானதாக, இன்றைய “சர்வதேச இடப்பெயர்வுக்குள்ளான மக்களின் தினம்”…

Read More

‘ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுபவர்கள் அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்து, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஞானசார தேரரின் மோசமான, பிழையான கருத்துக்களை சில ஊடகங்களும் தூக்கிப்பிடித்துகொண்டு காவித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான செயற்பாடுகளினால் பெரும்பான்மையின மக்கள், இந்த நாட்டில் ஆயிரம்…

Read More

சம்மாந்துறையை கௌரவப்படுத்திய மயிலுக்கு சம்மாந்துறை மக்கள் செய்யப்போகும் பிரதியுபகாரம் என்ன..? களங்கம் துடைப்பார்களா…?

சம்மாந்துறைகென்று பல தனித்துவங்களுள்ளன. அது அரசியல் ஜாம்பவான்கள் பலரை பிரசவித்த ஊர். இதிலுள்ள அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் நாகரீகமான பண்புகளையே வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மயில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தது. அன்று மயிலுக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தால், அது வீ.சியுடைய ஆசனமாக இருந்திருக்கும். அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் திரட்டி சம்மாந்துறை மகனொருவனை பாராளுமன்றம் அனுப்பிவைக்க மயில் திட்டம் தீட்டியது. இது சம்மாந்துறைக்கு மயிலால் கிடைத்த பெருங் கௌரவங்களில் ஒன்றல்லவா..? இரண்டாவது…

Read More

சமகால அரசியலும் முஸ்லிம்களும்..! – கவிஞர் கால்தீன்-

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள அதி பெரும்பான்மையான கட்சி, அரசாங்கத்தை அமைக்கும் போது, சிறுபான்மைச் சமூகத்தின் இலட்சியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதேபோன்று, சிறுபான்மைக் கட்சிகளின் நிலையும் பாரதூரமான ஒரு பள்ளத்தாக்கில் வீழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது. அதி பெரும்பான்மை தேசிய கட்சிகளில் சேர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள், சிறுபான்மைச் சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்குப் புறம்பான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளனர். இப் பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து, பெரும்பான்மையினரின் எண்ணங்களுக்கு சார்பாகவே நடந்து கொண்டனர். இது வரலாறாகும். அத்தகைய பிரதிநிதிகளால் சிறுபான்மை…

Read More