Headlines

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எல்லப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், உமா ஓயாத் திட்டத்தின் விளைவாகத் தமக்கான நீரைத் தாம் இழப்பதாகத் தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில், இன்று புதன்கிழமை (21) காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. எதிர்வரும் மாதம் மதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Read More

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில், அடம்பனைச் சேர்ந்த கே.ரஜீவனுக்கு நேற்று அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பதையும்,அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனையும் படத்தில் காணலாம்.

Read More

“ஆட்சியாளரிடம் ஒரு கதை மக்களிடம் வேறொரு கதை ஏமாற்று அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள்” சம்மாந்துறையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்திற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், எமது எதிர்கால சந்ததியினரை அடிமைப்படுத்தி, நமது சமூகத்தின் குரல்வளையினை நசுக்கும் சக்தியாக அமைந்துவிடும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சம்மாந்துறைப் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார்

K.M.ரிப்காஸ்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார். (றிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்)

Read More

றிஷாத் மீது வீண்பழி சுமத்தி தாண்டிக்குளம் திட்டத்தை தடுப்பது ஏன்?

வட்டுக்கோட்டைக்கு போகும் வழியைக் கேட்டால் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” என்கிறார் சி.வி.. றிசாத்தின் மீது வீண்பழி சுமத்தி தாண்டிக்குளம் திட்டத்தை தடுப்பது ஏன்? சுஐப் எம்.காசிம் வவுனியாவில் பொருளாதார மையம் நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை இன்னும் தொடர்கின்றது. இந்தத் திட்டத்துக்கென அரசாங்கம் பல கோடி ரூபா ஒதுக்கியுள்ள போதும், அதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருபுறமும், வன்னி மாவட்ட எம்.பிக்கள், வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாய வர்த்தக சங்கங்கள் மறுபுறமும்…

Read More

மின்­சாரம் தாக்கி சிறுவன் பலி

பகல் வேளை உணவின் பின்னர் பால் தேநீர் தயா­ரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் மின்­சாரம் தாக்கி பரி­தா­ப­க­ர­மாக பலி­யா­கி­யு­ள்ளான். இச்­சம்­பவம் கடந்த திங்­கட்­கி­ழமை தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் உள்ள பாட­சா­லை­யொன்றில் தரம் – 6 இல் கல்வி கற்கும் தங்­கொட்­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த மல்­லிக ஆராச்­சிகே செனால் தேசான பெரேரா என்ற சிறு­வனே மின்­சாரம் தாக்கி பலி­யா­ன­வ­னாவான்.

Read More

சுதந்திர கட்சி என்னை துரோகி என கவனித்தது

நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் அதனை செய்யவில்லை எனினும் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்து முடித்ததாக அவர் கூறினார். 19வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது…

Read More

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிப்பு

கடந்த வருடத்தை விட வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த வருடம் வாக்காளர்களின் எண்ணிக்கை 15,421,201 ஆக காணப்பட்டதோடு 2014 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 15,047,490 ஆக காணப்பட்டதாகவும் தேர்தல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த வாக்காளர் எண்ணிக்கையில் இந்த வருடம் பாரிய அதிகரிப்பு காணப்படுவதோடு இதன் எண்ணிக்கை 373,712 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பட்டியல் மூலம் இந்த நாட்டில் அதிகமாக…

Read More

போலி தயாரிப்புக்கள்: சீனாவிற்கு முதலிடம்

சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி பொருள்கள் வர்த்தகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை. அதற்கு அடுத்தபடியாக துருக்கியிலிருந்து…

Read More

சவுதியில் பணிபுரியும் சகோதரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி!

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அரசவையில் கூறியதாவது: “சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம். அதற்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு…

Read More