Headlines

கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், இன்று  மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோத்தபாய இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையில், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சீருடைகளை மாற்றி ஈடுபடுத்தியமை தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ரக்ன லங்கா பாதுகாப்பு ஊழியர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பாகவும், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இச்சம்பவம் குறித்து கோத்தபாயவிடம் ஏற்கனவே…

Read More

பொலிஸ் பாிசோதகரொருவர் கைது!

மாரவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகரொருவர் கொழும்பு விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்பதாக சீதுவ பிரதேசத்தில் கடமையாற்றி வந்துள்ளார். அக் காலப்பகுதியினுள் வீடுடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை தடுத்து வைத்து வன்மையாக தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றில் பெயரிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கோத்தபாய பாரிய நிதி மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

இரண்டு சிறுவர்களை காணவில்லை ; தேடுதல் பணிகள் தீவிரம்

திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் நேற்று (12) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள சிறுவர்கள் 9 மற்றும் 11 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்களை தேடும் பணிகளில் 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

நேபாளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை வெள்ளம்:நூற்றுக் கணக்கானோர் பலி

நேபாள நாட்டில் இவ்வருடம் பருவ மழை கனமழையாகப் பெய்து வருவதால் அங்குள்ள மலைத் தொகுதிகளில் இருந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலங்கள் ஊடாக பாயும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. இதனால் உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 60 பேர் இறந்துள்ளதாகவும் 4 இலட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் பணியில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப் பட்டுள்ளதுடன் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப் பட்டன. நேபாளத்தில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட…

Read More

நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் அரிசி இறக்குமதிகளுக்கு அனுமதி!!!

தரம் பரீட்சிக்கப்பட்டு 109,000 மெ.தொ. தருவிப்பு நாட்டின் நிலவிய மோச மான காலநிலை காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தருவிக்கப்பட்ட அரிசி யாவும் உரிய அனுமதியைப் பெற்றே, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அரிசியாலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரே ரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்….

Read More

மு.கா. – ஐ.தே.க. இணையலாம்; அனால்!

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு போட்டியிட முடியுமா என்பதற்கான முடிவினை உயர் நீதிமன்றமே வழங்க வேண்டும். எனவே நாட்டில் சுயாதீன நீதிமன்றம் காணப்படுமாயின் நல்லதொரு தீர்ப்பு கிட்டும் என ஐ.தே.கட்சி தலைமைத்துவ சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கருஜெயசூரிய தெரிவித்தார். அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எமது கொள்கைக்கு உடன்பட்டால் ஐ.தே.க. வுடன் இணைவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் கருத்து…

Read More

“சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைவால் சமூக அபிலாஷைகளை வெல்ல முடியும்”– முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான், எங்களுக்குள் ஒரு புல்லுருவி கோடாரிக் காம்பு இருந்தமை தெரியவந்தது என்றும் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு இவரே காரணம் எனவும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.  கிண்ணியா, ரஹ்மானியா பகுதியில், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “விகிதாசார…

Read More

முசலியில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தற்போதைய நிதி ஒதுக்கீடு

முசலிப் பிரதேசத்தின் பல்வேறு சமூகநலப் பணிகளுக்காகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தற்போது சுமார் 550 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். முசலிப் பிரதேசத்தில் நீண்டகாலம் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம் வருமாறு. சிலாவத்துறை, முசலி, சவேரியார்புரம், கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா – ரூ.19.69 மில்லியன் பாலைக்குழி, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் – ரூ.18.92 மில்லியன் கரடிக்குளி, கொண்டச்சி, சிங்களக் கிராமம், பாசித்தென்றல், காயாக்குளி – ரூ.26.50 மில்லியன் புதுவெளி, அளவக்கை சிறுக்குளம் – ரூ.5 மில்லியன்…

Read More

றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு.

  மன்னார் நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட பூவரசங்குளம் கிராம விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு  உபகரணங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் பள்ளிநிர்வாகத்தினர் ஊர்மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

இந்தியா – பாகிஸ்தான் பேச்சு ரத்து!

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 25ம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது ரத்தாகியுள்ளது. காஷ்மீர்  தலைவர்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சந்தித்துப் பேச இருப்பதன் காரணமாக, இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தலையிட்டு வருவதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலருடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

Read More

வற்வரி தொடர்பில் பிரதமர் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை

வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

Read More