இருப்புக்களுக்கான இரட்டைச் சவால்கள்!!!
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்” மற்றுமொரு சாதனையாக, இம்முறைத் தேர்தல் வியூகங்கள் அமையவுள்ளன. பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கவும் பேரம்பேசலுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும், தலைவர் ரிஷாட் பதியுதீன் வகுத்துள்ள திட்டங்கள், மாவட்டங்கள் தோறும் வேறுபடுகின்றன. சாத்தியமான இடங்களில் தனித்தும், சகோதர சமூகங்களின் அபிலாஷைகளை வெல்ல வேண்டிய மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்வரும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தேர்தலில் பெரும் சக்தியாகத் திகழும். வடபுலத்தவரின் தேவைக்கு குரல்கொடுக்க உதயமானாலும் காலவோட்டத்தில், இத்தலைமையின் தேவை நாட்டின் நாலா திசைகளிலும்…
