Headlines

பொலிஸ் சீருடையைப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும்

திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் விளம்பர ஒளிப்பதிவுகளின் போது பொலிஸ் சீருடை பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கான அனுமதியை பொலிஸ் திணைக்களத்திடம் கோர வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். பொலிஸாரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரமொன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால் இனிவரும் காலங்களில்…

Read More

பழுதடைந்த பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் சன்மான

பொருட்களை பதுக்கி வைப்போர், பழுதடைந்த, தரம் குறைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு நிதிச் சன்மானங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் பாதிக்கப்படுவதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக…

Read More

அரபு நாடு­க­ளுக்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெகு­வி­ரைவில் அரபு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்ளார். அவர் ஐக்­கிய அரபு இராச்­சியம், கட்டார், சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு பய­ணிக்­க­வுள்ளார். சவூதி அரே­பியா விஜ­யத்­தின்­போது சவூதி மன்­ன­ரி­டமும் ஹஜ் மேல­திக கோட்டா தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். இதனை  முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.  ஹலீ­ம் தெரிவித்துள்ளார்.

Read More

மும்­மன்ன முஸ்லிம் வித்­தி­யா­ல­ய விவகாரம்: அதிபருக்கு இடமாற்றம்

மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­துக்குச் சொந்­த­மான விளை­யாட்டு மைதானம் பெரும்­பான்மை சமூ­கத்­தினால் உரிமை கொண்­டாடப்படும் நிலையில் அதனைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக முன்­னின்று செயற்­பட்டு வந்த வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் மொஹமட் சனூன் சுஹைப் என்­ப­வரே இவ்­வாறு கிரி/ அதார ஆரம்ப பாட­சா­லைக்கு தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். 2016.08.24 ஆம் திக­தி­யிட்ட இட­மாற்றக் கடிதம் நேற்று திங்­கட்­கி­ழ­மையே அதி­பரைச் சென்­ற­டைந்­துள்­ளது. அதிபர் இடமாற்றம்…

Read More

சிசிலியாவின் விளக்கமறியல் நீடிப்பு

செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்தது. சேமிப்பாளர்களின் 430 மில்லியன் ரூபாவை மோசடி செய்தால் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“திருகோணமலையில் 40 வருட பழைமையான குழாய்நீர் இணைப்புக்களே இன்னும் காணப்படுகின்றன” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

பிராந்திய அபிவிருத்தி, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள், மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தின் போது (30/ 11/ 2017)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உரயாற்றினார். அவர் கூறியதாவது, திருகோணமலை மாவட்டம் மற்றும் கிண்ணியா பிரதேச சபை, திருகோணமலை நகர அபிவிருத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் 40 வருட பழைமையான குழாய்நீர் இணைப்புக்களே இருக்கின்றன. இவற்றினால் திருட்டுத்தனமான இணைப்புக்கள் அதிகரித்துள்ளன. இதனை நவீனமயப்படுத்துவதுடன், 455 கிலோமீற்றர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்…

Read More

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் சாதாரண உடையில் பங்கேற்ற ஜனாதிபதி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார். அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்களிலிருந்தே பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும்…

Read More

நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை(4) மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

PJ வருகை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா எச்சரிக்கை

1437-01-22 2015-11-05 தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது. கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும்  சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த…

Read More

பஸ் கட்டணமும் அதிகரிக்கும்?

வற்வரி அதிகரிப்பு காரணமாக, பேருந்து கட்டணங்கள் 25 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டண அதிகரிப்பின் பிரகாரம், ஆகக்குறைந்த கட்டணமான 8 ரூபாய் கட்டணம், 10 ரூபாயாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்துத் துறையைப் பாதுகாக்கும் பொருட்டே, இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

பாவனையாளர் அதிகார சபையின் பாய்ச்சல் தொடர்கின்றது.

அமைச்சின் ஊடகப் பிரிவு நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட  106 வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர். கொழும்பு – 13, கம்பஹா – 8, களுத்துறை – 5, பதுளை – 3, புத்தளம் – 6, காலி – 5, ஹம்பாந்தோட்டை- 4, மாத்தளை – 5, நுவரெலியா – 6, கண்டி – 12, மட்டக்களப்பு -6, திருகோணமலை- 4, அம்பாறை –…

Read More

ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள யாழ் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு. முழு அறிக்கை

பாருக் சிகான் வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு வடக்கு மாகாண சபையின் 24 ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய் மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும்…

Read More