Headlines

ஊவாவில் தோற்றது முஸ்லிம்களே – ஏ.எல்.தவத்தின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை

“ஊவாவில் தோற்றது முஸ்லிம்களே, முஸ்லிம் கூட்டமைப்பல்ல” என்ற  கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பாக, உண்மைதான், நீங்கள் சொல்வது போல முஸ்லிம் கூட்டமைப்பு தோற்கவில்லை ஏனெனில் அரசாங்கத்தின் தேவைப்படி ஐ.தே.கட்சி சார்பில் ஒரு முஸ்லிம் உறுப்பினரையும் வெற்றி பெற விட்டுவிடக் கூடாது என்பதை மறைமுகமாக வைத்து களமிறக்கப்பட்ட உங்கள் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதும் ஊவா முஸ்லிம்கள் கடந்த முறைபோல இம்முறையும் பிரதிநிதித்துவம் இன்றி தோற்றுவிட்டார்கள் என்பதும் வெறுப்பூட்டும் ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரும்…

Read More

500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் ரிஷாட் வழக்கு

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தனக்கு 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை (7) வழக்கு தாக்கல்செய்துள்ளார். பொதுபல சேன அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் இல்லையேல் வண.கலகொட அத்தே ஞானசார தேரரிடம் ரூபா 500 மில்லியன் நட்ட ஈடாக…

Read More

தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு அ.இ.ம.கா. ஆதரவு வழங்கும்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –  சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் பேசி வந்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும்,முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடத்தில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பல முறை பேசி யுள்ளார். புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்திலும் இந்த கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன்,சந்தேகத்தின் பேரில் குற்றங்கள் பதியப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை…

Read More

மாளிகாவத்தை பள்ளிவாசல் மீதான தாக்குதல்

மாளிகாவத்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன்போது வெளியே வந்த தரப்பினர் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சில வாகனங்கள் சேதமடைந்தன இதனால் மாளிகாவத்தையில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் உடனடியாக பொலிஸ், அதிரடிப்படை, இராணுவ வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இந்நிலையிவ் மாளிகாவத்தை…

Read More

இலங்கையின் சனத்தொகையில் 23.4 வீதமானோருக்கு புகைப்பழக்கம்!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார். 2020இல் புகையிலையில்லா இலங்கை என்ற தொனிப்பொருளில்  சுகாதார கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பாக விளக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். 20ஆம் நுற்றாண்டின் இறுதி வரை புகையிலையினால் உலகில் 100 மில்லியன் மக்கள் மரணமாகியுள்ளனர். வெண்சுருட்டில், 700 வகையான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 69 வகையான இரசாயனங்கள் புற்றுநோயை…

Read More

இப்றாஹீம் அன்சாரின் தொலைபேசியை திருடிச்சென்ற கொள்ளையர் கூட்டம்

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாஹீம் அன்சாரைத் தாக்கிய கொள்ளையர் கூட்டம் அவரது கையடக்கத் தெலைபேசியையும் திருடிச் சென்றுள்ளது. என்பதை நவமணி பத்திரிகையின் ஆசிரியர் என்.எம்.அமீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

புத்தளம் விஞ்ஞான கல்லூரி கட்டிட வேலைகளை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி எம்.பி

புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை கொண்ட அலுவலக கட்டிட நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இக்கட்டிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பாரிய முயற்சியின் பயனாகவும், அவர்களின் வேண்டுகோளின் வாயிலாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் மூலம் புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விஷேட அம்சமாகும்.. கட்டிட நிர்மாண வேலைகளை பாராளுமன்ற…

Read More

தவறவிடப்பட்ட நல்லிணக்கம், வலுவான முறையில் முன்னெடுக்கப்படும் – விஜயதாச ராஜபக்ஷ

தேசிய அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகப் பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை தோற்றுவிப்பதற்குப் பொருத்தமான சூழல் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கேற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு மக்களிடம் முன்வைக் கப்பட்ட கோரிக்கைக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இதற்கமைய உச்ச சட்ட வாக்கத்தைக்…

Read More

அமைச்சர் றிஷாத் அன்று தடுத்தார் பைசால் காசீம் இன்று நன்றி மறந்தார்

-ஏ.எச்.எம்.பூமுதீன் – 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முஸ்லிம் எம்பிக்களுக்கும் – அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்களின் மாவட்ட தொகுதிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு வழங்கும் அடிப்படையில் தான் இச்சந்திப்பு இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்த போது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதிக்கு பொறுப்பான எம்பியான தற்போதைய சுகாதார பிரதியமைச்சரான iபாசல் காசீம், தமது பொத்துவில் சுற்றுலா பிரச்சினை குறித்து…

Read More

VIDEO-“சிறுபான்மை சமூகத்துக்கு நெருக்கமானவர்களை தெரிவுசெய்து பிரதிநிதித்துவங்களை பாதுகாப்போம்”

கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்! தேசிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து, சனிக்கிழமை (09) கிண்ணியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,…

Read More

வற் வரி தொடர்பில் 20 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள்

ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி வற்வரி தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார்கள். இதன்போது அவ் வரியில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்  என்று அரசாங்கம் தெரிவித்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி அறவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காக விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அரசாங்கம் அறிவித்தது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு…

Read More

HIV வதந்திக்குள்ளான மாணவனுக்கு கிடைத்தது வெற்றி

குளியாபிடிய சிறுவனுக்கு பாடசாலை அனுமதி தொடர்பான ஒப்பந்தத்தில் கண்டி டிரினிடி கல்லூரி அதிபர் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். குளியாபிடிய பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனின் தந்தை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எயிட்ஸ் நோய் இருந்ததாகவும் அதனால், குறித்த சிறுவனுக்கும் எச்.ஐ.வி இருக்குமென வதந்தி  பரவியது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கருதி குறித்த பாடசாலையிலுள்ள மற்றைய மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தமையால், குறித்த சிறுவனுக்கு கல்வி கற்று…

Read More